மாட்டு வண்டி கிடைக்காம போயிருக்குமோ... ஆடி காருக்கு உண்டான மரியாதை போச்சே உங்களால!

நம்மில் நிறைய பேருக்கு வாழ்க்கையில் எப்படியாவது ஒரு சொகுசு காரை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், அதனை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால் குறைவுதான். கஷ்டப்பட்டு எப்படியாவது ஒரு விலையுயர்ந்த காரை வாங்கிவிட்டால், அதனை குழந்தை போல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளவே எவரொருவரும் விரும்புபவர். ஆனால், இங்கு ஒருவர் ஆடி காரில் வைக்கோலை எடுத்துச் சென்று, ஆடி கார்களுக்கே உண்டான மரியாதையை கெடுத்துள்ளார். யார் இவர்? எங்கு உள்ளார்? வாருங்கள் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி விண்ணை முட்டி வருகிறது. முக்கியமான செய்திகளை மட்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காலம்போய், தூங்கி எழுவதை கூட இப்போதெல்லம் பதிவுட ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு மக்களை இணையம் ஆட்கொண்டு வருகிறது. அதேநேரம், சமூக வலைத்தளங்கள் மூலமாக நமக்கு அவ்வப்போது சுவாரஸ்யமாக சம்பவங்களும் தெரிய வருகின்றன.

audi a4 used for fodder

அந்த வகையில், தற்போது ஒருவர் தனது ஆடி ஏ4 (Audi A4) என்கிற விலையுயர்ந்த காரில் வைக்கோல்களை கொண்டு செல்வதை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். வெள்ளை நிறத்தில் பளபளக்கும் ஆடி ஏ4 காரில் அவர் வைக்கோலை கொண்டு செல்லும் காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்ததை அடுத்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை. வீடியோவில், அங்கம் பக்கத்தில் உள்ள சுவர்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதால், இது வட இந்தியாவாக இருக்கவே வாய்ப்புள்ளது. மேலும், இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது நகரம் போல் தெரியவில்லை; கிராமம் போன்றே சுற்றியுள்ள கட்டிடங்களும், மின் கம்பங்களும் காட்சியளிக்கின்றன.

audi a4 used for fodder

இந்த நபர், தனது ஆடி ஏ4 காரின் மேற்கூரையில் வைக்கோல்களை கட்டி வைத்து எடுத்து சென்றுள்ளார். கிராமத்தின் குறுகலான சாலைகளில் தனது விலையுயர்ந்த காரை அவர் ஓட்டிச் செல்லும் காட்சிகளை பார்க்க முடிகிறது. காருக்குள் பின்னால் மேற்கூரையில் அளவுக்கு அதிகமான வைக்கோல்களை கட்டி கொண்டு செல்வதால், காருக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது.

அதேபோல், காருக்கு வெளிப்பக்கத்தில் உள்ள பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகளையும் வைக்கோல்கள் பாதி மறைத்துவிடும். அப்படியிருந்தும், கிராமத்தின் குறுகலான சாலையில் டிரைவர் இந்த ஆடி ஏ4 காரை எந்தவொரு பிரச்சனையுமின்றி, ஏற்கனவே இவ்வாறு ஓட்டிய அனுபவமிக்கவர் போன்று ஓட்டிச் செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவில் காட்சி தருவது, டெல்லியில் பதிவு செய்யப்பட்ட, டீசல் என்ஜினை கொண்ட ஆடி ஏ4 கார் ஆகும்.

audi a4 used for fodder

ஏ4 ஆனது இந்தியாவில் விலை குறைவான ஆடி கார் ஆகும். இதனை டெல்லியில் வாங்கியிருப்பதன் மூலம் காரின் விலை இன்னும் குறைவாக இருந்திருக்கும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த காரில் டீசல் என்ஜின் உள்ளது. டெல்லியில் 10 வருட பழைய டீசல் காரை ஓட்ட கூடாது என்கிற சட்டம் உள்ளது. ஆதலால், இந்த ஆடி ஏ4 காரை இந்த நபர் மிகவும் குறைவான விலையில்தான் வாங்கியிருக்க கூடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு வைரலாகக்கூடிய வீடியோக்களை காட்சிப்படுத்துவதற்காகவே இந்த நபர், கொஞ்சம் பணத்தை செலவு செய்து இந்த ஆடி ஏ4 என்கிற லக்சரியான காரை வாங்கியிருப்பார் என நினைக்கிறோம். ஆனால், இவ்வாறான செயல்கள் இதில் ஈடுப்படுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மற்றவர்களுக்கும் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 29, 2025, 23:39 [IST]
English summary
Audi a4 luxury car used to carry fodder on roof viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X