ஆடி கார் மேல இருந்த மரியாதையே போச்சு! இதுல டீ விக்கறது இவர்தானா! இப்பதான் விஷயம் வெளிய வந்திருக்கு!
இந்தியாவில் இளம் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இளைஞர்கள் இந்த காலத்திற்கு ஏற்ப புதுப்புது சிந்தனைகளுடன் தொழில் செய்வதை பார்ப்பது, உண்மையிலேயே மனதில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. வாடிக்கையாளர்களை அவர்கள் அணுகும் விதமும் கூட மிகவும் வித்தியாசமாக இருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் சமூக வலை தளங்களில் மிகவும் வேகமாக பிரபலமடைய தொடங்கினார். மிகவும் விலை உயர்ந்த ஆடி (Audi) காரில் அவர் டீ (Tea) விற்பனை செய்ததுதான் இதற்கு காரணம். இந்த வைரல் வீடியோ (Viral Video), பலரின் கவனத்தையும் கவர்ந்தது.

ஆனால் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் நமக்கு தெரியாமல் இருந்தது. இந்த சூழலில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆடி காரில் டீ விற்பனை செய்து வரும் இளைஞர் பற்றிய ஒரு சில புதிய தகவல்கள் இந்த வீடியோவின் மூலம் நமக்கு தெரியவந்துள்ளன.
இந்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்திருக்கும் இளைஞரின் பெயர் மன்னு சிங். அவர் தனது முயற்சியை ODT (On Drive Tea) என அழைக்கிறார். இந்தியாவில் தெருவுக்கு தெரு டீக்கடைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது ஆடி காரில் டீ விற்பனை செய்வது என்பது உண்மையிலேயே மிகவும் வித்தியாசமான வியாபார யுக்திதான்.

மன்னு சிங் ஆடி காரில் டீ மட்டும் விற்பனை செய்யவில்லை. கூடவே வாடிக்கையாளர்களை தனது ஆடி காரில் உட்கார்ந்து, அதன் சொகுசான விஷயங்களை அனுபவிப்பதற்கும் அனுமதிக்கிறார். உண்மையில் ஆடி காரின் உள்ளே நம்மில் பலரும் அமர்ந்திருக்க மாட்டோம். எனவே இது புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள ஒரு முயற்சிதான்.
மன்னு சிங் டீ விற்பனை செய்வதற்காக பயன்படுத்தி வருவது ஆடி ஏ6 (Audi A6) கார் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் புதிய ஆடி ஏ6 காரின் ஆரம்ப விலை (Price) 61.60 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 67.76 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் மன்னு சிங் பயன்படுத்தி வருவது யூஸ்டு காராக (Used Car)இருக்கலாம். தற்போது இந்தியாவின் செகண்ட் ஹேண்ட் (Second Hand) மார்க்கெட்டில், சொகுசு கார்கள் எல்லாம் ஓரளவிற்கு குறைவான விலையிலேயே கிடைக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆடி போன்ற ஒரு நிறுவனத்தின் காரை உள்ளே அமர்ந்து பார்வையிடும் வாய்ப்பையும், மன்னு சிங் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். இது நம்மில் பலருக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு.


Click it and Unblock the Notifications








