வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது

வங்கிகள் கூட்டமைப்பிடம் 270 கோடி ரூபாய் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த, ஆடி மற்றும் போர்ஷே கார் நிறுவன டீலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By Arun

வங்கிகள் கூட்டமைப்பிடம் 270 கோடி ரூபாய் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த, ஆடி மற்றும் போர்ஷே கார் நிறுவன டீலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை விட்டு தப்பி லண்டன் செல்ல முயன்ற அவர்களை, போலீசார் சினிமா பாணியில் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

ஹரியானா மாநிலம் குர்கான் நகரில், ஆடி (Audi) மற்றும் போர்ஷே (Porsche) ஆகிய லக்ஸரி கார் நிறுவனங்களின் டீலர்ஷிப்களை நடத்தி வருபவர்கள் ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட். இவர்கள் இருவரும் சேர்ந்து, வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து, 270 கோடி ரூபாய் கடன் வாங்கினர்.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

இதன்மூலம் ஆடி மற்றும் போர்ஷே நிறுவனங்களிடம் இருந்து கார்கள் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர். ஆனால் வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து பெற்ற 270 கோடி ரூபாய் கடனை மட்டும் திருப்பி செலுத்தவே இல்லை.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி, ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆகிய வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பிடம் இருந்துதான், ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் 270 கோடி ரூபாய் கடன் பெற்றனர். இதில், எச்டிஎப்சி வங்கி மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் கடனை வழங்கியுள்ளது.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால், ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவர் மீதும் எச்டிஎப்சி வங்கி புகார் அளித்தது. இதன்பேரில் டெல்லி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால், ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

அவர்கள் இருவரும் இந்தியாவை விட்டு தப்பி லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் விமானத்தில் ஏறுவதற்காக முன்பாகவே, டெல்லி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு விட்டனர்.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகியோர், ஜெனிகா கார்ஸ் இந்தியா (Zenica Cars India) மற்றும் ஜெனிகா பெர்ஃபார்மென்ஸ் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் (Zenica Performance Cars Private Ltd) என்ற நிறுவனங்களின் இயக்குனர்களாக உள்ளனர்.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

இந்த ஜெனிகா குழுமம்தான், ஹரியானா மாநிலம் குர்கானில், ஆடி மற்றும் போர்ஷே லக்ஸரி கார் டீலர்ஷிப்களை நடத்தி வருகிறது. ஆடி டீலர்ஷிப் மூலமாக ஒரு மாதத்திற்கு 140 கார்களையும், போர்ஷே டீலர்ஷிப் மூலமாக ஒரு மாதத்திற்கு 20 கார்களையும், ஜெனிகா குழுமம் விற்பனை செய்து வருகிறது.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

இந்த 2 டீலர்ஷிப்களில் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் மூலமாக, ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை, ஜெனிகா குழுமம் டர்ன்ஓவர் செய்து வருகிறது. ஜெனிகா குழுமம் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை டர்ன்ஓவர் செய்வதை ஆட்டோமொபைல் தொழில்துறை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

ஆனால், ''கடந்த 4 ஆண்டுகளாக, நாங்கள் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே வாங்கிய கடனை எங்களால் திருப்பி செலுத்த முடியாது'' என ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் எச்டிஎப்சி வங்கிக்கு இ-மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

இதன் தொடர்ச்சியாக எச்டிஎப்சி வங்கி அளித்த புகாரின்பேரில்தான், ரஷ்பால் சிங் டோட், மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது கைதாகியுள்ளதால், குர்கானில் செயல்பட்டு வந்த ஆடி மற்றும் போர்ஷே டீலர்ஷிப்களின் நிலை என்னவாகும்? என்பது தெரியவில்லை.

Recommended Video

ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! — Tamil DriveSpark
வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

இதுதொடர்பாக ஆடி மற்றும் போர்ஷே நிறுவனங்கள் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் குர்கான் ஆடி மற்றும் போர்ஷே டீலர்ஷிப்களிடம் இருந்து கார் டெலிவரிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஆடி, போர்ஷே நிறுவனங்களை தொடர்பு கொள்வது சிறந்தது.

வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது..

கைது செய்யப்பட்டுள்ள ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகியோர் மீது 420 (மோசடி) உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர குர்கான் ஆடி மற்றும் போர்ஷே டீலர்ஷிப்களுக்கு சென்று, ஆவணங்களை சேகரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Audi, Porsche Car Dealers Arrested for Rs 270 Crore Bank Fraud. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X