இந்தியாவிற்கு சூப்பர் கார்கள் ஏற்றதல்ல என்பதற்கு இந்த வீடியோவே போதும்.. பாவம் ரொம்ப திணறிடுச்சு!
இந்தியர்கள் மத்தியில் சூப்பர் கார்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக முன்பைவிட இப்போது நாட்டில் சூப்பர் கார் (Super Car)-களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. வாகன உற்பத்தியாளர்களும் இந்தியாவை முக்கிய சந்தையாகக் கருதி அவர்களின் புதுமுக சூப்பர் கார் மாடல்களை தவறாமல் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த கார்களுக்கான அடிப்படை வசதி இந்தியாவில் உண்டா என கேட்டால் அது சந்தேகமே. இந்தியாவின் சாலை தரம் முன்பைவிட இப்போது பலமடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது.
ஆனால், சூப்பர் கார்களுக்கு ஏற்றவாறு நூற்றுக்கு நூறு சதவீதம் தரமானதாக இருக்கின்றதா என கேட்டால் அதுவும் சந்தேகமே. குறிப்பாக, நாட்டின் ஒரு சில பகுதிகளில் வாகனங்கள் இயங்க துளியும் உகந்ததல்லாத சாலைகளே உள்ளன. தரமற்ற சாலைகளே உள்ளன. சென்னை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களிலேயே இந்த நிலைதான் தென்படுகின்றது.

இதனால்தான் குறிப்பிட்ட சில பகுதிகளைக் கடக்க சூப்பர் கார்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றன. இதை வெளிக்காட்டக் கூடிய ஓர் வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. சூப்பர்கள் சில சாலையின் மிக மோசமான நிலையின் காரணமாக அதைக் கடக்க திக்கமுக்காடும் வீடியோவே இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவால் இந்தியா இன்னும் சூப்பர் கார்களுக்கான சந்தையாக முழுமையாக மாறவில்லையோ என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கு எழும்பியிருக்கின்றது. அந்த அளவிற்கு நாட்டின் பல பகுதிகளில் சாலைகள் தரமற்றவையாக உள்ளன. இதற்கு சான்றாகவே தற்போதைய வீடியோ அமைந்துள்ளது. ஆடி ஆர்8 (Audi R8) மற்றும் ஃபெராரி 812 ஜிடிஎஸ் (Ferrari 812 GTS) சூப்பர் கார்களே சாலையை தட்டுதடுமாறி கடக்கும் வீடியோ வெளியாகி உள்ளன.
இரண்டு கார் மாடல்களும் உலக புகழ்பெற்ற சூப்பர் கார் மாடல்கள் ஆகும். இந்த இரண்டு கார்களும் மைசூர் சாலையில் பயணிக்கும்போதே இந்த சிக்கலில் சிக்கி இருக்கின்றன. சாலை முழுவதும் பெயர்ந்தும், பள்ளம்-மேடாகவும் இருந்த காரணத்தினால் அந்த கார்கள் அதிக சிரமத்திற்கு பின்னர் கடக்கும் நிலை ஏற்பட்டது.
இரண்டு கார்களுக்குமே அதே நிலையே ஏற்பட்டது. இந்த வீடியோ சூப்பர் கார் பிரியர்களுக்கு சற்றே கவலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கார் மாடல்கள் மட்டுமல்ல இவற்றிற்கு பின்னாலேயே மினி காரும் வந்தது. அதனாலும் அந்த பகுதியைக் கடக்க முடியவில்லை. இந்த கார்கள் அனைத்தும் மிகவும் தாழ்வான கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டவையாக இருந்த காரணத்தினாலேயே இந்த சிக்கலை அவை சந்தித்தன.
சூப்பர்களின் இந்த தாழ்வான தோற்றமே இந்தியாவில் பல்வேறு சிக்கல்களை அவைச் சந்திக்க காரணமாக இருக்கின்றது. இதேபோல், குறுகலான சாலைகளும் அவற்றின் இயக்கத்திற்கு பெரும் தடைக் கல்லாகவும், சவலாகவும் அமைகின்றன. இதுமட்டுமில்லைங்க, குட்டைகள், நெரிசல் மிகுந்த சாலைகளும் சூப்பர் கார்களுக்கு மிக மோசமான சூழலை நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
இதை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடிய வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த வீடியோவை, 'கார் கிரேஸி இந்தியா' எனும் இன்ஸ்டா பயனரே பகிர்ந்திருக்கின்றார். இந்தியாவில் சாலை மோசமாக இருப்பதால் மட்டுமே சூப்பர் கார்கள் சிரமங்களுக்கு ஆளாகுவதில்லை. மிக மோசமான ஸ்பீடு பிரேக்கர்களாலும் சூப்பர் கார்கள் மிகுந்த சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நாளுக்கு நாள் சூப்பர் கார் காதலர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதேபோல், சூப்பர் கார்களின் இருப்பும் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்த நிலையிலேயே சூப்பர் கார் கனவில் இருப்பவர்களுக்கு அந்த எண்ணத்தை கைவிட செய்யும் வகையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








