தெருவோர மெக்கானிக் கடைக்கு வந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி கார்: ஏன் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்!
டெல்லியின் சாலை ஓரத்தில் உள்ளி மெக்கானிக் ஷாப் முன்பு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி ஆர்8 கார் செய்தித்தாள் போட்டு மூடப்பட்டிருந்தது. பல முன்னணி பிரபலங்களின் கனவு காராக இருக்கும் இந்த மாடல், எதற்காக இப்படி விடப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் கண்டிப்பாக கோபம் அடைவீர்கள்.

கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள், பணக்கார வர்க்கத்தினர் என பலரது கனவு காராக இன்றளவும் ஆடி ஆர்8 கார் உள்ளது. இந்த கார் டெல்லியில் உள்ள சாலையோர மெக்கானிக் கடையில் செய்தித்தாள்களை வைத்து மூடப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆடி ஆர்8 காரானது, செகண்ட் ஹேண்ட் விற்பனைக்காக கார் டீலரிடம் கிடைத்துள்ளது. காரைப் பெற்ற டீலர், மலிவான முறையில் காரை பெயிண்டிங் செய்து விற்பனைச் செய்வதுக்காக இவ்வாறு சாலையோர சாதாரண மெக்கானிக் கடையில் விட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுபோன்று, செகண்ட் ஹேண்ட் கார்களில் பல முறை கேடுகள் அரங்கேற்றப்படுகின்றன. இதைப்பற்றி அறியாத நாம், பல லட்சக்கணக்கான ரூபாயைக் கொடுத்து ஏமாற்றம் அடைகிறோம். செகண்ட் ஹேண்ட் கார்களை விற்கும் டீலர்கள், தரமற்ற பெயிண்ட், உதிரிபாகங்கள் உள்ளிட்டவையை மாற்றி விற்பனைச் செய்கின்றனர். இதனால், அந்த கார் வாங்கப்பட்ட சில மாதங்களிலேயே செயலிழந்து சாலை ஓரத்தில் நின்றுவிடுகிறது. மேலும், வாங்கியத் தொகையைவிட பல மடங்கு நஷ்டத்தை கொடுக்கின்றது.
கார் வாங்குவதில் இரு விதம் உள்ளது. புதிய கார் வாங்குவது அல்லது செகண்ட் ஹேண்ட் காரை வாங்குவது. இதில், பணம் படைத்தவர்கள் தங்களுக்கு பிடித்தமான புதிய கார் ஒன்றை வாங்கப்போகிறார் என்றால், அவர் முன்னதாக பயன்படுத்தி வந்த பழைய காரை எக்ஸ்சேஞ்ச் முறையில் விற்றுவிட்டு புதிய காரை வாங்குவார்.

இவ்வாறு, எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் காரை, சிலர் செகண்ட் ஹேண்டாக கார் டீலர்களிடம் வாங்குகின்றனர். இவ்வாறு செகண்ட் ஹேண்ட் கார்களுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பலர் புதிய கார் வாங்குவதை விட பயன்படுத்திய கார்களை வாங்கவே விரும்புகின்றனர். இதில், பெரும்பாலும் நகரங்களில் வசிப்பவர்கள் செகண்ட் ஹேண்ட் கார்கள் மீது பல மடங்கு முக்கியத்துவம் காட்டுகின்றனர்.
இதுபோன்ற, செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையை முதலில் சிறு சிறு கார் டீலர்களே செய்து வந்தனர். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி, பல முன்னணி கார்பரேட் நிறுவனங்கள் இதில் ஈடுபட ஆரம்பித்து உள்ளது.

இந்நிலையில், பெரும் லாபத்தை பெறும் நோக்கில் பல கார் டீலர்கள், முறைகேடுகளில் ஈடுபட்டு கார்களை விற்பனைச் செய்கின்றனர். இந்த ஆடி ஆர்8 காரை முறையான பெயிண்டிங் செய்யப்படுமானால் பல லட்சங்கள் செலவும் ஏற்படும் என்பதற்காக, சாலையோரத்தில் உள்ள பெயிண்டிங் கடையில் கொடுத்து புதுப்பிக்கும் செயலில் அதன் டீலர் ஈடுபட்டுள்ளார்.
இதுபோன்று டீலர்களிடம் இருந்து ஏமாறாமல், கார் வாங்குவதில் நல்ல கவனம் செலுத்தி வாங்க வேணடும். மேலும், தங்களுக்கு நம்பகமான ஒரு மெக்கானிக்கை உடன் அழைத்துச் சென்று காரை வாங்குவது நல்லது என பல முன்னணி கார் டீலர் நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications









