புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

இந்தியாவில் உள்ள பொது சாலையில் சூப்பர் காரும், சூப்பர் பைக்கும் ரேஸில் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கார் மற்றும் பைக் உரிமையாளர்கள் பலர் அடிக்கடி ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வீடியோக்களையும், அதுகுறித்த செய்திகளையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பல முறை வெளியிட்டுள்ளது. இந்த வகையில் தற்போது அதிர வைக்கும் 2 வீடியோக்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

டிவி மற்றும் கேட்ச் எ மைல் ஆகிய யூ-டியூப் சேனல்களில் அந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 (Suzuki GSX-R1000) சூப்பர் பைக்கும், ஆடி ஆர்8 (Audi R8) சூப்பர் காரும் பந்தயத்தில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக டிவி வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த இரண்டு வாகனங்களும் நெடுஞ்சாலையில் உச்சகட்ட வேகத்தில் பறப்பதை நாம் பார்க்கலாம்.

MOST READ: விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை?... உண்மை என்ன தெரியுமா?

புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

இந்த இரண்டு வாகனங்களில், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 பைக் சர்வ சாதாரணமாக மணிக்கு 200 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான வேகத்தில் சீறிப்பாய்கிறது. இந்த பைக் 250 கிலோ மீட்டர்களுக்கும் மேலான வேகத்தில் பறக்கும்போது, ஆடி ஆர்8 காரை ஓவர்டேக் செய்கிறது. இப்படி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் தவறான விஷயம்.

புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

எனினும் அந்த பைக் ரைடரும், கார் டிரைவரும் நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள் போல தெரிகிறது. குறிப்பாக தங்கள் வாகனத்தை பற்றி அவர்கள் இரண்டு பேருமே நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதேபோன்ற வீடியோ கேட்ச் எ மைல் யூ-டியூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 299 கிலோ மீட்டர்கள்.

MOST READ: பாக்கவே பாவமா இருக்கு... வாகன ஓட்டிகளை கண்மூடித்தனமாக தாக்கிய போலீசார்... வேற ஒன்னும் பண்ணிருக்காங்க

புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

அதே சமயத்தில் ஆடி ஆர்8 காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 301 கிலோ மீட்டர்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வேகத்தில் டாப் ஸ்பீடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது 2013 ஆடி வி10 மாடல் ஆகும். 5.2 லிட்டர் எஃப்எஸ்ஐ இன்ஜினை இந்த கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 525 பிஎஸ் பவரையும், 530 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது.

புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

இந்த காரில், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டி விடும் திறன் இந்த காருக்கு உண்டு. அதே சமயம் இந்த வீடியோவில் நாம் பார்க்கும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 பைக், 200 பிஎஸ் பவரையும், 117 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

MOST READ: வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

ஆனால் ஆடி ஆர்8 காருடன் ஒப்பிடும்போது இந்த பைக் இலகுவானது. இதனால்தான் விரைவாக செயலாற்ற கூடியதாக இருக்கிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 பைக் வெறும் 3 வினாடிகளில் எட்டி விடும். இதன் மூலம் ஆர்8 வி10 காரை விட விரைவானதாக உள்ளது.

புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

இந்த வீடியோவில் நாம் பார்க்கும் பைக் ரைடரும், கார் டிரைவரும் ஏற்கனவே நாம் சொன்னதை போல் நன்கு அனுபவர் வாய்ந்தவர்கள் போல் உள்ளனர். எனினும் தேசிய நெடுஞ்சாலைகளில் இவ்வளவு வேகத்தில் பைக், கார் ஓட்டுவது ஆபத்தான விஷயம். அது சட்ட விரோதமும் கூட. ஹை-பெர்ஃபார்மென்ஸ் வாகனங்களை இயக்குவதற்கான அனுபவம் இருந்தாலும், பொது சாலைகளில் அதை செய்யக்கூடாது.

MOST READ: பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மட்டுமல்ல... டாக்ஸிகளில் இன்னும் ஒரு மாற்றம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு

இவ்வளவு வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் ஒரு சிறிய தவறு பயங்கர பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.

இதற்கு அதிவேகமே முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பறப்பதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. ஆனால் ஹை-பெர்ஃபார்மென்ஸ் வாகனங்களை அதிவேகத்தில் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கலாம். அப்படி ஒரு ஆசை இருப்பதில் தவறில்லை.

ஆனால் பொது சாலையில் அதனை செய்வதுதான் தவறு. இப்படிப்பட்ட ஆசை இருப்பவர்கள் ரேஸ் டிராக்கில் அதனை செய்யலாம். அதுதான் பாதுகாப்பானதும் கூட. மற்றவர்களுக்கும் பிரச்னை ஏற்படாது. நீங்கள் பொது சாலையில் அதிவேகத்தில் பயணம் செய்பவர் என்றால் அதனை இன்றோடு நிறுத்தி விடுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் நல்லது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Audi R8 Supercar & Suzuki GSX-R1000 Superbike Street Racing On An Indian Highway - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X