ஆடி சொகுசு காரை பதம் பார்த்த மாருதி வேகன்ஆர்.. சம்பவத்த செஞ்சுட்டு குத்துக்கல்லாட்டும் நிக்குதே!

இந்தியாவின் எளிய மக்களின் வாகனமாக மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) கார் மாடல் இருக்கின்றது. மிக மிக மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைப்பதாலும், மிகவும் குறைவான பராமரிப்பு செலவைக் கொண்டிருப்பதாலும் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிகவும் அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

அதிகம் மைலேஜைத் தரக் கூடியதாகவும் இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலே இந்தியாவின் அதிக விலைக் கொண்ட கார் மாடல்களில் ஒன்றான ஆடி எஸ்5 (Audi S5) மாடலை விபத்தின் போது மிகவும் மோசமாக பாதிப்படையச் செய்திருக்கின்றது.

Audi rs5 met accident with wagonr

ஆமாங்க, மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி வேகன்ஆர் கார் மாடலுடனான மோதலில் ஆடி எஸ்5 சொகசு கார் மிக மிகக் கடுமையான சேதங்களுக்கு ஆளாகி இருக்கின்றது. முன் பக்கம் முழுமையாக உருக்குலைந்து போயிருக்கின்றது. ஹெட்லைட்டுகள், கிரில், பம்பர், பான்னெட் என அனைத்தும் விபத்தில் நொறுங்கி போயிருக்கின்றது.

அதேவேளையில், மாருதி சுஸுகி வேகன்ஆர் காரின் ஒரு பக்கம் மட்டுமே சேதமாகி இருக்கின்றது. அதுவும் பெரிய அளவில் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது. ஒரு ஹெட்லைட், கிரில் மற்றும் பம்பர் ஆகியவையே சேதமாகி உள்ளது. அதுவும் அது முழுமையாக சேதமாகவில்லை. பகுதியாக மட்டுமே சேதமாகி இருக்கின்றது.

wagonr1

ஆடி எஸ்5 சொகுசு கார் மாடலுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவான சேதத்தையே மாருதி வேகன்ஆர் சந்தித்து உள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் ஆபத்து ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பி இருக்கின்றனர். அதேவேளையில், ஆடி காரை ஓட்டி வந்தவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த கார் மிக மோசமான சேதத்தைச் சந்தித்ததற்கு பின்னால் அது அதிக வேகத்தில் வந்ததும், அதன் முன்பக்கம் முழுவதும் வேகன்ஆரின் பக்கவாட்டு பகுதியில் மிக வேகமாக மோதியதுமே காரணமாக அமைந்திருக்கின்றது. இதன் விளைவாகவே ஆடி கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது.

Audi rs5

வேகன்ஆர் கார் மாடலில் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் ஆகிய இரண்டு விதமான பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, எஸ்-சிஎன்ஜி தேர்வும் இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றது இந்த கார் மாடலில் பாதுகாப்பு அம்சங்களும் அதிகளவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், இரட்டை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ப்ரோக்ராம், ரியர் பார்க்கிங் கேமிரா சென்சார்கள், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், நவீன தொழில்நுட்பங்கள் அம்சங்களும் இந்த கார் மாடலில் மிக அதிக அளவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் ஃபோன் நேவிகேஷன், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் கேபிள் இணைப்பு, ப்ளூடூத் மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல் அம்சம் ஆகியவை வேகன்ஆர் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்தகைய அம்சங்களைப் பெற்றிருக்கின்ற போதிலும் இந்த கார் மாடல் ரூ. 5.50 லட்சம் தொடங்கி ரூ. 7.30 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இத்தகைய மலிவு விலை மற்றும் மேலே பார்த்த சிறப்பம்சங்களே மாருதி சுஸுகி வேகன்ஆர் காரை இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் காராக மாற்றி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக பாதுகாப்பான கார் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நெக்ஸான் எஸ்யூவிக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மாருதி சுஸுகி வேகன்ஆர் இந்த விபத்து சம்பவத்தின் வாயிலாக தான் ஓர் பாதுகாப்பான கார் என்பதை வெளிக்காட்டியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 12, 2024, 5:00 [IST]
English summary
Audi rs5 accident with maruti wagonr
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X