5.8 கிலோ எடையில் அசத்தலான ஆடி சைக்கிள்... விலை சென்னை வெயிலைவிட ஹாட்!!

Written By:

இப்போது பல முன்னணி கார் நிறுவனங்கள் கார்கள் மட்டுமின்றி, படகு, விமானம், கைக்கடிகாரம் மற்றும் வாசனை திரவியங்களை தங்களது பிராண்டில் வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் புதிய சைக்கிள் மாடலை வெளியிட்டிருக்கிறது. ஆடி ஸ்போர்ட் ரேஸிங் பைக் என்று அழைக்கப்படும் இந்த உயர்வகை சைக்கிளின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

இலகு எடை

இலகு எடை

இந்த சைக்கிள் கார்பன் ஃபைபர் ஃப்ரேம் கொண்டிருக்கிறது. இந்த ஃப்ரேமின் மொத்த எடை வெறும் 790 கிராம்தான். அதாவது, ஒரு கிலோவுக்கும் குறைவு.

மொத்த எடை

மொத்த எடை

சக்கரங்களை பொருத்தினால், இந்த சைக்கிளின் மொத்த எடை 5.8 கிலோ மட்டுமே!

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தமாக 50 சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. அதுவும் ஆர்டரின்பேரில் மட்டுமே தயாரித்து டெலிவிரி கொடுக்கப்படும்.

 விலை

விலை

இந்த சைக்கிளின் விலை ரூ.12,38,682 மட்டுமே.

 விற்பனை

விற்பனை

கடந்த மார்ச்சில் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜப்பானில் விற்பனை

ஜப்பானில் விற்பனை

இந்த சைக்கிள் தற்போது ஜப்பானிலுள்ள ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஆடி சைக்கிள் விற்பனை செய்யப்பட உள்ளதாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Audi has come up with a bicycle called the Audi Sport Racing Bike. The bicycle is made up of ultra lightweight carbon-fibre frame that weighs 790 grams! With the wheels on, it weighs not more than 5.8 kilograms! Thats light!
Story first published: Friday, May 22, 2015, 12:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark