வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக தப்பிய காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

உலகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பெரும்பாலான விபத்துக்களுக்கு அதிவேகமே முக்கியமான காரணமாக உள்ளது. அதிவேகத்தில் வரும் வாகனங்களால் தினமும் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன. போதாக்குறைக்கு தற்போது பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு இருப்பதால், வாகனங்களின் வேகம் உயர்ந்து வருகிறது.

வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி கிடப்பதால், வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாகனங்களை தாறுமாறாக ஓட்டுகின்றனர். அதிவேகத்தில் வரும் வாகனங்களிடம் இருந்து தப்பிப்பது என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். அப்படிப்பட்ட ஆச்சரியமான விஷயங்கள் சமீப காலமாக தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் சாலையோரமாக பைக்கின் மீது அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியே ஜேசிபி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்தது. ஜேசிபி வாகனம் அந்த இளைஞரை நெருங்கி விட்ட நிலையில், ஜேசிபி வாகனத்தின் பாதையில் திடீரென கார் ஒன்று குறுக்கே வந்தது.

வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

இதனால் ஜேசிபி மோதுவதில் இருந்து அந்த இளைஞர் தப்பித்தார். அவருக்கு காயம் ஏற்படவில்லை. அத்துடன் ஜேசிபி மற்றும் கார்களின் ஓட்டுனர்களும் உயிர் தப்பினர். அந்த காணொளி சமூக வலை தளங்களில் காட்டு தீ போல பரவிய நிலையில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அதேபோன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்தது.

வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

பாதசாரி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், மினி வேன் ஒன்று அவர் மீது மோதுவது போல் வந்தது. ஆனால் மினி வேன் மோதுவதில் இருந்து அந்த பாதசாரி நூலிழையில் தப்பித்தார். ஒருவரின் அதிர்ஷ்டத்திற்கு இந்த இரண்டு சம்பவங்களும் எடுத்துக்காட்டு. இந்த இரண்டு சம்பவங்களுமே கேரள மாநிலத்தில்தான் நடைபெற்றன.

வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

இதன் தொடர்ச்சியாக தற்போது பெண்மணி ஒருவர் பயங்கரமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மேற்கண்ட இரு சம்பவங்களும் இந்தியாவில் நடைபெற்ற நிலையில், இது ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த காணொளியும் சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

சம்பவத்தன்று பெண்மணி ஒருவர் பேருந்து நிறுத்தம் ஒன்றில் நின்று கொண்டிருந்தார். பின்னர் அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக கொஞ்சம் பின்னால் நடந்து வந்தார். அவர் திரும்பி வந்த உடனேயே கார் ஒன்று அப்பகுதியை அதிவேகத்தில் கடந்தது. எனவே அந்த பெண் அதிர்ஷ்டவசமாக தப்பினார். அவர் நின்று கொண்டிருந்த இடத்தின் மீதுதான் கார் தாறுமாறாக சென்றது.

வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

அவர் பின்னால் வராமல் இருந்திருந்தால் கார் அவர் மீது அதிவேகமாக மோதியிருக்கும். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. எனினும் அந்த பகுதியில் இருந்த ஒரு சில கடைகள் மீது கார் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில், அந்த பெண்மணி உயிர் தப்பிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

மீன் பிடி உபகரணங்களை விற்பனை செய்து வரும் ஒரு கடையின் முகநூல் பக்கத்தில் இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது. அந்த கடைக்கு வெளியேதான் இந்த சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக மீன் பிடி உபகரணங்களை விற்பனை செய்யும் கடையின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நான் இன்று கண்ட சம்பவத்தை மிக நீண்ட காலத்திற்கு மறக்கவே முடியாது.

வைரல் வீடியோ... தாறுமாறாக வந்த கார் மோதுவதில் இருந்து தப்பிய பெண்... எப்படி 'லக்' அடித்தது தெரியுமா?

அந்த பெண்மணி அதிர்ஷ்டசாலிதான். ஆனால் இந்த விபத்தால் எங்கள் கடைக்கு அருகே இருந்த கடை பலத்த சேதமடைந்துள்ளது. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இதற்காக கடவுளுக்கு நன்றி. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் கூறியுள்ளபடியே இந்த விபத்து காரணமாக யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை.

காரை ஓட்டி வந்தவர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பின்னர், அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் உயிர் தப்பிய பெண்மணியின் பெயர் காரன் ஜான்சன் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலை தளங்களில் அவரை அதிர்ஷ்டசாலி என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Australian Woman Misses Collision With Car By Mere Seconds - Viral Video. Read in Tamil
Story first published: Monday, August 31, 2020, 22:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X