ஸ்பீடு லிமிட்டை தாண்டினால் வாகனம் பறிமுதல்... வந்தது புதிய சட்டம்!! பயப்படாதீங்க இந்தியாவில் இல்லை

உலகம் முழுவதிலுமே சாலை விபத்துகள் பல அரசாங்கங்களுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகின்றன. நமது இந்தியாவும் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக முதன்மையான இடத்தில் இருப்பது கசப்பான உண்மை. சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமே அதிவேகம் தான் என சொல்ல வேண்டும்.

அதிவேக பயணம் எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு இடத்திலும் பிரச்சனையில் தான் சென்று முடியும். இதனாலேயே அதிவேக பயணத்தை தவிர்க்க வேக கட்டுப்பாட்டு கருவிகளை வாகனங்களில் பொருத்த வேண்டும் என்ற சட்டத்தை இயற்றுவது, வேகத்தை அளக்கும் கருவிகளை சாலையோரங்களில் பொருத்துவது மற்றும் அதிவேகமாக பயணம் செய்பவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிப்பது என அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆஸ்திரியாவில் ஸ்பீடு லிமிட்டை தாண்டினால் வாகனம் பறிமுதல்!!

இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா ஒரு படி மேல் சென்று, அதிவேகமாக வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றொரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் ரேஸர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு இவ்வாறான புதிய சாலை விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் பின்னர் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா நாட்டு அரசாங்கம் சாலை விதிமுறை & கட்டுப்பாடுகளை தனது அண்டை நாடுகளான ஜெர்மனி & சுவிட்சர்லாந்தை போல் கடுமையானதாக கொண்டுவர விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாகவே, தற்போது அதிவேகமாக பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற அதிரடி விதிமுறையை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. சட்டவிரோதமான பந்தயங்கள் மற்றும் மற்ற அதிவேக பயணம் தொடர்பான விதிமீறல்களை குறைக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக ஆஸ்திரியாவில் லோக்கல் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆங்காங்கே ஒன்று & இரண்டு என ஏற்படுவதால் பெரியதாக கண்டு கொள்ளப்படுவதில்லை. செய்தியாக வெளிவந்தாலும் சில நிமிடங்களுக்கு கவலைப்பட்டு விட்டு நாம் அடுத்த வேலைகளை செய்ய சென்றுவிடுகிறோம். ஆனால் இந்த ஒன்று, இரண்டு உயிரிழப்புகளை ஒன்றாக கூட்டி பார்த்தால் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் எண்ணிக்கையில் வந்து நிற்கும். அதிவேகமாக வாகனம் ஓட்டும் பல வாகன ஓட்டிகள் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகின்றனர்.

இதில் கவலைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், அத்தகைய அதிவேக வாகன ஓட்டிகளில் பலர் வெளியுலகிற்கு தெரியாமல் இருப்பதுதான். ஆதலால்தான், அவர்களது அதிவேக பயணத்திற்கு காரணமாக இருக்கும் அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் ஆஸ்திரியா நாட்டு அரசாங்கம் இறங்கியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரியா நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் லியோனாரே ஜெவெஸ்லர் கருத்து தெரிவிக்கையில், "மிக அதிவேகத்தில் பயணிக்கும் போது எவரொருவரும் அவர்களது வாகனத்தில் கண்ட்ரோல் உடன் இருப்பதில்லை.

ஆஸ்திரியாவில் ஸ்பீடு லிமிட்டை தாண்டினால் வாகனம் பறிமுதல்!!

இதனால் கார் ஒன்று தடுக்க முடியாத ஆயுதமாக மாறிவிடுகிறது. இது முற்றிலும் மக்களுக்கு ஆபத்தானது" என்றார். ஆஸ்திரியாவின் தலைநகர் வியென்னா உள்பட முக்கிய நகரங்களில் அதிகப்பட்ச ஸ்பீடு லிமிட் 50kmph ஆக உள்ளது. இதற்கு மேல் வாகனத்தை ஓட்டினால் அபராதமும், 60kmph வேகத்திற்கு மேல் ஓட்டினால் வாகனம் 2 வாரங்களுக்கு பறிமுதல் செய்யப்படும் எனவும் ஆஸ்திரிய நாட்டு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகர்புறம் அல்லாத கிராமப்புற பகுதிகள் 70kmph வேகத்திற்கு மேல் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நபர் 2வது முறையாகவோ அல்லது முதலாவதாக சிக்கும் நபர் நிர்ணயிக்கப்பட்டதை காட்டிலும் மிக மிக அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டினாலோ அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் ஏலம் விடப்படும் என ஆஸ்திரியாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இத்தகைய கடுமையான சட்டங்கள் நமது இந்தியாவிற்கும் வேண்டுமா என்பதையும், ஆஸ்திரியாவில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் குறித்த உங்களது கருத்துகளையும் கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Austria will seize vehicles for over speed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X