ஆட்டோ டிரைவர் செய்யும் செயலா இது? போலீசார் செய்த தரமான செய்கை!! வாழ்வில் இதை மறக்கவே மாட்டாரு!

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக மேம்பாலத்தின் மீது ஆட்டோவை ஓட்டிய ஆட்டோ டிரைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். எங்கு இந்த சம்பவம் நடைபெற்றது? அதன்பின் அந்த ஆட்டோ டிரைவருக்கு என்ன ஆனது? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் போலீஸாருக்கு பெரும் தலைவலியாக மாறிவரும் ஒன்று. பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவதை விட, சொந்த வாகனத்தை பயன்படுத்தவே பலரும் விரும்புகின்றனர். இதனால், சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்குவது மக்களிடத்தில் கடந்த இரு தசாப்தங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

auto driver drives on bridge

இதுவே போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகவும் உள்ளது என்பது கசப்பான உண்மை. போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, குறிப்பாக, ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு சித்து வேலைகளில் ஈடுப்படுவதை தினசரி வாழ்வில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு ஒருவர் கொஞ்சம் ஓவராக யோசித்து ஒரு வேலையை செய்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது டெல்லியில் ஆகும்.

நம்ம மாநில தலைநகர் சென்னையிலேயே எந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதை தினந்தோறும் பார்த்து வருகிறோம். அப்படியிருக்க, தேசிய தலைநகரில் போக்குவரத்து நெரிசல் எவ்வாறு இருக்கும் என்பதை நான் கூற வேண்டியதில்லை. அத்தகைய போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க ஆட்டோ டிரைவர் ஒருவர் பாதசாரிகள் உபயோகிக்கும் மேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார்.

auto driver drives on bridge

இந்த செயலில் ஈடுப்பட்ட ஆட்டோ டிரைவரின் பெயர் முன்னா, வயது 25. டெல்லியின் பிசியான ஹம்டர்ட் நகர் ரெட் லைட் சங்கம் விஹார் டிராஃபிக் சர்கிள் பகுதியில் தனது ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருக்கவே, இதில் இருந்து விரைவாக செல்வது எவ்வாறு முன்னா என யோசித்துள்ளார்.

முன்னாவால் தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு, யு-டர்ன் அடித்து வந்த வழியில் செல்லவும் முடியவில்லை. ஏனெனில் அதற்குள்ளாக அவருக்கு பின்னாலும் நிறைய வாகனங்கள் வந்துவிட்டன. அப்போதுதான், அவர் நின்றிருந்த இடத்திற்கு அருகில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான இரும்பு மேம்பாலம் ஒன்று இருப்பதை முன்னா கவனித்துள்ளார்.

உடனே, தனது ஆட்டோவை பாதசாரிகளுக்கான நடைப்பாதையின் மீது ஏற்றிய முன்னா, அடுத்து இரும்பு மேம்பாலத்தின் மீதும் ஆட்டோவை அசாலட்டாக இயக்கி சென்றுள்ளார். இதனை கண்ட பாதசாரிகள் உடனே இந்த நிகழ்வை தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அவ்வாறு ராம்ராஜ் சௌத்ரி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.

வீடியோவில், ஆட்டோவிற்குள் டிரைவரை தவிர்த்து யாரும் இல்லாததையும், சிறிது நேரத்தில் இளைஞர் ஒருவர் பாலத்தின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கும் ஆட்டோவிற்குள் ஏறுவதையும் காண முடிகிறது. மேலும், இந்த ஆட்டோ டிரைவரை பார்த்து பைக் ஓட்டி ஒருவரும் பாதசாரிகளுக்கான நடைமேடையின் மீது தனது பைக்கை ஏற்றுவதை வீடியோவின் துவக்கத்தில் காணலாம். இந்த செயலில் ஈடுப்பட்ட ஆட்டோ டிரைவர் முன்னாவைவும், அவரது ஆட்டோவில் பயணித்தவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க நிச்சயமாக இது வழியல்ல. அந்த பைக் ஓட்டியை போன்று, இவ்வாறான செயல்களை பிறரும் பின்பற்றலாம். ஆதலால் இந்த செயலில் ஈடுப்பட்டவர் கைது செய்யப்பட்டு இருப்பது சரியே. அதுமட்டுமின்றி, இவ்வாறான ஆபத்தான செயல்கள் பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Article Published On: Thursday, September 7, 2023, 21:59 [IST]
English summary
Auto driver drives on foot over bridge in delhi
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+