இருந்தாலும் ஆட்டோ டிரைவருக்கு இவ்வளவு கோவம் ஆகாது!! இந்த பிரச்சனைக்கு போலீஸார் ஒரு தீர்வை கண்டுப்பிடிக்கனும்..

பைக் டாக்ஸி பணியில் ஈடுப்பட்டிருந்த இளைஞரின் மொபைல் போனை தரையில் சூர தேங்காய் போன்று உடைத்த ஆட்டோ டிரைவர் பெங்களூருவில் வைராலாகி உள்ளார். யார் அவர்? ஏன் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக் டாக்ஸி சேவைகளை சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களிலும் முன்பை போல பரவலாக காண முடிவதில்லை. இதற்கு முக்கிய காரணம், போலீஸாரின் கிடுக்குப்பிடி கட்டுப்பாடுகள் தான். பைக் டாக்ஸி பணியில் பெரும்பாலானோர் வெள்ளை நிற நம்பர் பிளேட் பொருத்திய தனது சொந்த பயன்பாட்டு 2-வீலரையே பயன்படுத்தினார். ஆனால் போலீஸார் இத்தகைய சேவைகளுக்கு மஞ்சள் நிற நம்பர் பிளேட்டை பொருத்திய வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என கூறுகின்றனர்.

இருந்தாலும் இந்த ஆட்டோ டிரைவருக்கு இவ்வளவு கோவம் ஆகாது!!

மோட்டார் வாகன சட்டமும் அதைதான் கூறுகிறது. ஏனெனில், சொந்த பயன்பாட்டிற்காக இருசக்கர வாகனம் ஓட்டுபவரையும், தொழிலுக்காக ஓட்டுபவரையும் அடையாளம் காண முடிவதில்லை. இது ஒருபக்கம் என்றால், ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்ஸி பணிகளில் ஈடுப்படுவோர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். தங்களுக்கு வருகின்ற சவாரிகளை பைக் டாக்ஸிகள் தட்டி பறித்துவிடுகின்றன என ஆட்டோ டிரைவர்கள் நினைக்கின்றனர்.

இதன் காரணமாகவே ஆட்டோ டிரைவர்களுக்கும் பைக் டாக்ஸி கேப்டன்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்படுவதை சாலைகளில் பார்க்க முடியும். அவ்வாறான ஒரு சண்டை தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவில் பைக் டாக்ஸி பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த இளைஞர் ஒருவருடன் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுப்பட ஆரம்பித்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒரு கட்டத்திற்கு கோபத்தை பொறுக்க முடியாமல் ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்டு இருந்த அந்த இளைஞரது மொபைல் போனை பிடிங்கி உடைத்துள்ளார்.

பரபரப்பான சாலையில் மொபைல் போனை அந்த ஆட்டோ டிரைவர் சூர தேங்காய் போன்று உடைக்கும் காட்சிகளை அருகில் இருந்த மற்றொரு வாகன ஓட்டி தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து தகுந்த நடவடிக்கைகள் சம்மந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் மீது எடுக்கப்படுமா என்றும் பெங்களூரு போலீஸாரை டேக் செய்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பெங்களூர் நகர போலீஸாரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து பதில் வந்துள்ளது.

இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பெங்களூரு போலீஸார் அந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர். பிஸியாக இயங்கி கொண்டிருந்த சாலையில் சற்று நேரத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவிட்ட இந்த ஆட்டோ டிரைவர் அந்த இளைஞரது மொபைல் போனை உடைத்தது மட்டுமின்றி, அவரை தாக்குவது போன்றும் நடந்து கொண்டுள்ளார்.

இருந்தாலும் இந்த ஆட்டோ டிரைவருக்கு இவ்வளவு கோவம் ஆகாது!!

அதன்பின் சம்பவத்தை காட்சிப்படுத்தி கொண்டிருந்த மொபைல் போனுக்கு அருகில் வந்து பேசிய அந்த ஆட்டோ டிரைவர், "நண்பர்களே, ராபிடோ பைக்குகள் எவ்வாறு சாலைகளில் சட்டத்திற்கு புறம்பாக இயங்குகின்றன என்பதை பாருங்கள். உங்களால் பார்க்க முடிவதை போன்று, இந்த மனிதர் வேறொரு நாட்டை சேர்ந்தவர். இவர் சந்தோஷமாக பைக் டாக்ஸியை இங்கு இயக்கி கொண்டிருக்கிறார். ஆட்டோ துறையில் ஊழல் எவ்வாறு உள்ளது என்பதை இது காட்டுகிறது" என காட்டமாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், பைக் டாக்ஸி சேவையில் பயன்படுத்தும் இந்த 2-வீலர் வெள்ளை நிற நம்பர் பிளேட்டை கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய ஆட்டோ டிரைவர், இந்த நபருக்கு (பைக் டாக்ஸி ரைடர்) கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், "இந்த நபர் இப்போதுதான் ஒரு பெண்ணை சட்டத்திற்கு புறம்பாக பைக் டாக்ஸியில் ஒரு இடத்தில் இறக்கிவிட்டு வருகிறார். நமது நாட்டை சேர்ந்தவர் இவர் கிடையாது" எனவும் அந்த ஆட்டோ டிரைவர் தொடர்ந்து கூறியவாறு இருந்தார்.

Article Published On: Thursday, March 9, 2023, 10:41 [IST]
English summary
Auto driver smashes bike taxi rider phone in bengaluru
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+