இப்படி யோசிக்கத் தனியா மூளைய வாடகைக்கு எடுப்பாங்களோ? ஆட்டோக்கு ஏர்கூலர் மாட்டிய பலே டிரைவர்!

ஏர் கூலருடன் ஆட்டோ ஒன்று சாலையில் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த வீடியோ பலரது மனதில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏர் கூலர் ஆட்டோ குறித்த விரிவான விவரங்களைக் காணலாம் வாருங்கள்.

கோடைக் காலத்தில் அடிக்கிற வெயிலுக்கு நான் வீட்டுக்குள்ளேயே இருந்து விடலாம் எங்கேயுமே வெளியே போக வேண்டாம் என்ற எண்ணம் எல்லோருக்குமே தோன்றும். ஆனால் வேலை நிமித்தமாக வெளியே செல்ல வேண்டியது கட்டாயம் தான். இதனால் பலர் வேண்டா வெறுப்பாகத் தான் வெளியில் செல்லுவார்கள்.

auto air-cooler viral video

இந்தக் கோடை வெயில் வெப்பத்தைத் தவிர்க்கப் பலர் ஆட்டோவை தவிர்ப்பார்கள் அதற்குப் பதிலாக கேப் புக் செய்து சென்றால் ஏசியில் பயணிக்கலாம் என்ற எண்ணத்தில் கேப் புக் செய்து செல்வார்கள். இதனால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வருமானம் குறையும். ஆனால் இந்த பிரச்சனைக்கு ஒரு ஆட்டோ ஓட்டுனர் நூதனமான முறையில் தீர்வை கண்டுபிடித்துள்ளார்.

அவர் தனது ஆட்டோவின் பின்பக்கம் ஏர் கூலரை பொருத்தி அதன் மூலம் ஆட்டோவில் பயணிக்கும் குளிர்ந்த காற்றை ஆட்டோவிற்குள் வீசச் செய்து வெப்பத்தைத் தணித்துக் கிட்டத்தட்ட ஒரு ஏசி ஆட்டோ போலத் தனது ஆட்டோவை மாற்றியுள்ளார். பலர் கோடை வெப்பத்தை எப்படித் தணிப்பது எனத் தெரியாமல் இருந்த நிலையில் இவர் நூதனமான தீர்வை கண்டுபிடித்துள்ளார்.

ஏர் கூலர் பொருத்தப்பட்ட ஆட்டோ சாலையில் செல்லும்போது பின்னால் சென்ற வாகனத்தில் ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் இந்த பதிவை அவர் போடும்போது இதைப் பஞ்சாபில் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலருக்குச் சந்தேகம் ஏற்பட்டது எப்படி ஆட்டோவில் ஏசி கூலர் வேலை செய்யும் என்று யோசிக்க ஆரம்பித்தனர். ஏசி கூலர் வேலை செய்ய அதிகமான கரண்ட் தேவைப்படும் ஆட்டோவில் அவ்வளவு கரண்டை எடுக்க என்ன செய்வார்கள் எனப் பலர் யோசித்து வருகின்றனர்.

இந்த ஏர் கூலரை வேலை செய்ய வைக்க வேண்டும் என்றால் ஆட்டோவில் உள்ள பேட்டரியின் பவர் பத்தாது. இதனால் இதற்காகத் தனியாக பேட்டரியை செட் செய்து தான் இந்த ஏர் கூலரை அந்த ஆட்டோ ஓட்டுனர் செட் செய்திருக்க வேண்டும். ஆனால் இப்படியான ஏர்கூலர் தற்காலிகமான குளிர்ச்சியை ஆட்டோவிற்குள் ஏற்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வீடியோவில் உள்ளது போல ஏர்கூலரை ஆட்டோவில் பொருத்திக் கொண்டு பயணிப்பது ஆபத்தை ஏற்படுத்தும். இது முற்றிலும் வாகனங்களுக்கான பயன்படுத்தக்கூடிய ஏர் கூலர் அல்ல. இதை இவ்வாறு பயன்படுத்திச் செய்வதை வழங்குவது சட்டப்படியும் குற்றமாகும். ஆட்டோவில் ஏசி போடுவதற்கு என்று தனியாக பிட்டிங் இருக்கிறது அதைப் பயன்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 5, 2023, 19:25 [IST]
English summary
Auto fitted with aircooler video gone viral on social media
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+