ஆட்டோ டிரைவர்களுக்கு செக் வைத்தது தமிழக அரசு... மிரட்டலான புதிய திட்டம்... என்னவென்று தெரியுமா?

ஆட்டோ டிரைவர்களுக்கு செக் வைக்கும் மிரட்டலான திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்துகிறது. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

ஆட்டோக்களுக்கு போட்டியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் கால் டாக்ஸி சேவையில் களமிறங்கின. ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையால் ஆட்டோ தொழிலில் கற்பனை செய்து பார்க்க முடியாத மிக கடுமையான பாதிப்பு ஏற்படும் என அந்த சமயத்தில் கணிக்கப்பட்டது.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

ஆனால் தற்போது வரை அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை. அதற்கு மாறாக ஆட்டோ தொழில் நன்கு வளர்ச்சி அடைந்து கொண்டேதான் செல்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஆட்டோ தொழிலுக்கு புதிதாக வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம்தான் உள்ளது. சென்னை மாநகரில் மட்டும் தற்போது சுமார் 1 லட்சம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

கேப்ஸ் தொழிலில் ஈடுபடுவதை விட புதிதாக ஆட்டோக்களை வாங்கி தொழில் செய்வதில்தான் டிரைவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆட்டோ கட்டணம் முறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் இதற்கெல்லாம் ஒரே காரணம். கேப்ஸை விட ஆட்டோ தொழில்தான் மிகவும் லாபகரமானது என டிரைவர்கள் கருதி வருகின்றனர்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

கட்டணம் முறைப்படுத்தப்படாமல் இருப்பதால் அவர்களுக்கு என்னவோ நல்ல லாபம்தான். ஆனால் இதன் காரணமாக பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ஆட்டோ டிரைவர்கள் சிலர் நடத்தும் கட்டண கொள்ளைகளுக்கு விடிவு காலமே இல்லையா? என மக்கள் ஏங்காத நாளில்லை. ஆனால் இனி நீங்கள் இதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

ஆம், ஆட்டோக்களில் இனி அதிக கட்டணம் வசூல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற வகையில் அதிரடியாக திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் சேர்த்து ஆச்சரியத்தையும் வரவழைக்கும் என்பது உறுதி. வெகு விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

கடந்த 2012ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில், சென்னை நகரில் இயங்கி வந்த 43 ஆயிரம் ஆட்டோக்களில், ஜிபிஎஸ் மற்றும் பிரிண்டருடன் கூடிய டிஜிட்டல் கட்டண மீட்டர்களை பொருத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 109 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த அதிரடியாக திட்டம் வகுக்கப்பட்டது.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

ஆனால் அதன்பின் இரண்டு முறை டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பின்பு, கடந்த ஆண்டுதான் டெண்டர் இறுதி செய்யப்பட்டது. இந்த டிஜிட்டல் கட்டண மீட்டர்களை உற்பத்தி செய்வதுடன், அவற்றை கண்காணிக்கும் ஒப்பந்தத்தை டெல்லியை சேர்ந்த நிறுவனம் ஒன்று வென்றது. தற்போது இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

இதன்படி சென்னை மாநகரின் திருவான்மியூர் பகுதியில், முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த திட்டம் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோக்களுக்கு அரசு சார்பில் மீட்டர்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''டிஜிட்டல் கட்டண மீட்டர்கள் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு விட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு விட்டது. அத்துடன் சோதனையும் நடந்து விட்டது. அதிகாரப்பூர்வமாக இந்த திட்டத்தை தொடங்குவது மட்டும்தான் பாக்கி.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

அது விரைவில் நடக்கவுள்ளது'' என்றனர். ஜிபிஎஸ் வாயிலாக இந்த ஆட்டோக்களை காண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு மையம் அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''ஆட்டோ கட்டணங்களை கண்காணிப்பதற்கு என பிரத்யேகமான சாப்ட்வேர் ஒன்று உள்ளது.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

இந்த சாப்ட்வேரில் மாற்றங்களை செய்வதன் மூலமாக அரசால் ஆட்டோ கட்டணங்களை திருத்தியமைக்க முடியும். ஆட்டோ டிரைவர்களால் மேனுவலாக இதை செய்ய முடியாது. அதையும் மீறி ஆட்டோ டிரைவர்கள் முறைகேடுகளில் ஈடுபட முயன்றால், உடனடியாக கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை வந்து விடும்'' என்றனர்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

இதுகுறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின், இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த திருவான்மியூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ், டிஜிட்டல் கட்டண மீட்டர்களை இலவசமாக பெற தகுதியுடைய ஆட்டோ டிரைவர்களை அடையாளம் கண்டறியும் பணியில் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

இதன்படி 2013 ஆகஸ்டுக்கு முன்பு (இந்த திட்டத்துடன் தொடர்புடைய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதி) ஆட்டோக்களை பதிவு செய்த டிரைவர்களுக்கு டிஜிட்டல் கட்டண மீட்டர்கள் இலவசமாகவே வழங்கப்படும். ஆனால் மற்ற ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் இதனை மார்க்கெட்டில் இருந்துதான் வாங்கி கொள்ள வேண்டும்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

ஆனால் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்களின் விலை 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வரும் என கூறப்படுகிறது. எனவே இந்த தேதிக்கு பிறகு ஆட்டோக்களை பதிவு செய்த டிரைவர்கள், இதனை தங்களால் வாங்க முடியாது என தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னைக்கும் அரசு தீர்வு கண்டால், சிறப்பாக இருக்கும்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... தமிழக அரசின் அசர வைக்கும் அதிரடி திட்டம்

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டம் ஆட்டோ டிரைவர்களால் அரங்கேற்றப்பட்டு வரும் கட்டண கொள்ளை பிரச்னைக்கு தீர்வு காணும் என நம்பலாம். எனவே மக்கள் மத்தியில் நிச்சயம் இதற்கு அமோக வரவேற்பு இருக்கும். இந்த திட்டம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Saturday, September 21, 2019, 10:00 [IST]
English summary
2000 Auto rickshaw Drivers To Get GPS-enabled Digital Fare Meters Soon In Chennai. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+