ஜப்பானையே வியந்து பார்க்க வைத்த இந்திய புல்லட் ரயில் திட்டம்! இப்படி ஒரு கருவி வரும்னு யாருமே நினைக்கல!
இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் முதல் புல்லட் ரயில் பாதையான ஆமதாபாத் மும்பை இடையேயான ரயில் பாதையில் புல்லட் ரயில் பாதுகாப்பாக இயக்குவதற்காக மழையை கண்காணிக்கும் கருவியை பொறுத்த ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தற்போது ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மழையை அளவிடும் கருவி எப்படி வேலை செய்கிறது? இதனால் புல்லட் ரயிலுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? சாதா ரயிலுக்கு இல்லாத இந்த கருவி புல்லட் ரயில் திட்டத்திற்காக ஏன் பொருத்தப்படுகிறது? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டமாக மும்பை முதல் ஆமதாபாத் வரை புல்லட் ரயில் பாதை அமைத்து புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் எல்லாம் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. தற்போது முதல் கட்ட பணியாக சூரத் முதல் பில்மோராவரை பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன. அடுத்த கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளன.

இந்த பாதை வழியாக பயணிக்க உள்ள புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புல்லட் ரயில் பயணிக்கும் போது பாதுகாப்பு மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனால் இந்த புல்லட் ரயிலுக்கு ஏற்படும் பல்வேறு விதமான ஆபத்து கூறுகளை ஆய்வு செய்து அந்த ஆபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இதன்படி புல்லட் ரயில் வேகமாக பயணிக்கும் போது அதிக அளவிலான மழை பெய்தால் அது புல்லட் ரயிலுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. என்பதால் இந்த மழை பெய்யும் அளவை கண்காணிக்க கருவி ஒன்றை ஆங்காங்கே பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருவி அந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்து கொண்டிருக்கிறது என்ற ரியல் டைம் அளவுகளை உடனடியாக புல்லட் ரயில் கண்ட்ரோல் யூனிட்டுக்கு அனுப்பும்.

அந்த தகவலின் அடிப்படையில் புல்லட் ரயில் அந்த பாதையை கடக்கும் போது எவ்வளவு வேகத்தில் கடக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தானே வகுத்துக் கொள்ளும். இதனால் புல்லட் ரயில் அந்த பகுதியில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும். அதிக மழை பெய்யும் போது புல்லட் ரயில் பயணம் செய்தால் ரயில் விபத்தில் சிக்ககூட வாய்ப்பு இருக்கிறது.
இதன் காரணமாக புல்லட் ரயில் திட்டம் உருவாக்கப்படும் போது ஆங்காங்கே மழை எவ்வளவு பெய்து கொண்டிருக்கிறது என்பதை கண்காணிக்கும் கருவிகளை பொருத்தி அதை நேரடியாக புல்லட் ரயில் உடன் இணைக்கிறார்கள். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது தான் அதிகாரப்பூர்வமாக இந்த கருவி பொருத்தப்படுவதை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
புல்லட் ரயில் திட்டம் தற்போது துவங்கப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், முதற்கட்ட பணிகள் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பொழுது சூரத் முரல் முதல் பில்மோரா வரை 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் இயங்கும் அளவிற்கு தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்பு ஒவ்வொரு படியாக பணிகள் நிறைவடைய நிறைவடைய இதன் விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையை கண்டறிவதற்கான கருவியை பொருத்தியது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எந்த காரணத்திற்காகவும் பாதுகாப்பை குறைபாடுடன் செய்ய முடியாது என கூறியுள்ளார். இதன் காரணமாக அனைத்து விதமான ஆபத்து சூழ்நிலைகளையும் கண்டறிந்து அதற்கான முன்னேற்பாடு கருவிகளை பொருத்துவதன் மூலம் புல்லட் ரயில் பாதுகாப்பாக இயக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக சாதாரண ரயில்களில் இப்படியான மழை அளவு குறித்த கருவிகள் எல்லாம் தேவைப்படாது. ஆனால் புல்லட் ரயில் அதிக வேகத்தில் பயணம் செய்யும்போது அதிக வேகத்தில் மழை பெய்தால் அது ரயிலுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாய்ப்புக்கான சதவீதம் குறைவுதான் என்றாலும், இந்த வாய்ப்பையும் விபத்துக்காக வழங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புல்லட் ரயில் என்பது அதிவேக ரயிலாக இயக்கப்படுகிறது. இதனால் இந்த ரயில் விபத்தில் சிக்கினால் மிகப்பெரிய விபத்தாக இது மாறிவிடும். இதன் காரணமாக இதன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக இவ்வளவு தூர ஏற்பாடுகளை செய்துள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications








