ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

இந்தியாவில் நடுத்தர மக்கள் மத்தியில் கார்கள் மீதான மோகம் அதிகரித்துள்ள தான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களை டார்கெட் செய்து குறைந்த விலை கார்களை தயரித்து வருகின்றனர். தற்போது ஒரு படி மேல சென்று க

By Balasubramanian

இந்தியாவில் நடுத்தர மக்கள் மத்தியில் கார்கள் மீதான மோகம் அதிகரித்துள்ள தான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களை டார்கெட் செய்து குறைந்த விலை கார்களை தயரித்து வருகின்றனர். தற்போது ஒரு படி மேல சென்று குறைந்த விலையில் ஆட்டோமெட்டிக் கார்களை தயாரித்து வருகின்றனர். ரூ 6 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள கார்கள் குறித்து நாம் இச்செய்தியில் காணலாம்.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

இன்று பெருநகரங்களில் நிலவி வரும் டிராப்பிக்கில் சிக்குவது போன்ற தலைவலியான விஷயம் வேறு எதுவும் இல்லை. நமது பம்பருக்கு முன்னாள் ஒரு கார், இன்னொரு காரின் பம்பருக்கு முன்னாள் நம் கார் என கூட்ட நெரிசலான எலக்ட்ரிக் ரயிலில் இடித்து கொண்டு நிற்பது போன்ற ஒரு உணர்வை அது தரும். இப்படிப்பட்ட டிராப்பிக்கில் கார் ஒட்டுவதற்கு மிகப்பெரிய பொறுமை வேண்டும்.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

இந்த டிராப்பிக்கில் கார் ஓட்டும் போது மிக முக்கிய எரிச்சலூட்டும் விஷயம் கியர் மாற்றுவது தான். கார்கள் டிராப்பிக்கிள் ஊர்ந்து செல்லும் போது குறைந்த கியரில் செல்ல வேண்டும். வேகமாக செல்லும் போது அதிக கியரில் செல்ல வேண்டும் என மக்களை ஒரு கட்டுகோப்பிற்குள் அடைத்து விடுகிறது. இந்த பிரச்சனைக்கு முக்கிய தீர்வாக வந்தது தான் ஆட்டோ கியர் தொழிற்நுட்பம், கார்களில் ஓட்டுநர் கியரை மாற்றமலேயே தானாக வாகனத்தின் வேகத்தை பொருத்து கியர் மாறுவது தான் இந்த தொழிற்நுட்பம்.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

பொதுவாக விலை உயர்ந்த கார்களில் மட்டும் இருந்து வந்த இந்த தொழிற்நுட்பம் குறைந்த விலை கார்களிலும் வரத்துவங்கியது. பட்ஜெட் கார் பிரியர்களை பெரிதும் கவரத்துவங்கியது. இந்த தொழிற்நுட்பத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உள்ளதை கண்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் சமீபமாக தாங்கள் தயாரிக்கும் கார்களில் ஏஎம்டி என கூறப்படும் ஆட்டோ கியர் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட கார்களையும் ஒரு வேரியண்ட்டாக வைத்துள்ளனர்.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

இவ்வாறாக இந்தியாவில் ரூ 6 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் ஏஎம்.டி ஆப்ஷன் உள்ள கார்களின் பட்டியலையும் அந்த கார்களில் உள்ள அம்சங்களையும் கீழே பார்க்கலாம். நீங்கள் குறைந்த விலை ஏஎம்டி கார் வாங்க நினைத்தால் இந்த செய்தி மிக உதவியாக இருக்கும்.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

டாடா நேனோ ஏஎம்டி

டாடா மோட்டார் நிறுவனத்தின் குறைந்த விலை காரான டாடா நேனோ காரில் ஏஎம்டி வேரியண்ட் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் விலை குறைந்த ஏஎம்டி கார் இது தான். இந்த காரின் விலை ரூ 3.34 லட்சத்தில் இருந்து ரூ 3.34 லட்சம் வரை விற்பனைக்கு உள்ளது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

டாடா நேனோ ஜென்எக்ஸ் ஏஎம்டி காரை பொருத்த வரை 624 சிசி 2 சிலிண்டர் எம்பிஎப்ஐ பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இந்த கார் 31 பிஎச்பி பவர் மற்றும் 51 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதில் பொருத்தப்பட்ட ஏஎம்டி கியர் பாக்ஸ் 5 ஸ்பீடு ஆட்டோ கியர் கொண்டது. சிட்டி டிரைவ்விற்கு சிறந்த கார்.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

ரெனால்ட் க்விட் ஏஎம்டி

பட்ஜெட் கார் பிரியர்களுக்காக ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த கார் மக்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விட்டது. இந்தியாவில் ஏற்கனவே லட்ச கணக்கான கார் விற்பனையாகியுள்ளது. இந்த காரிலும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஏஎம்டி வேரியன்டும் விற்பனையாகி வருகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள 5 ஸ்பீடு ஆட்டோகியர் டிராபிக்களில் செல்ல எளிமையாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

இந்த க்விட் காரின் டாப் என்ட் மாடலான ஆர்எக்ஸ்டி வேரியன்டில் மட்டும் தான் ஏஎம்டி ஆப்ஷன் கிடைக்கிறது. ஏஎம்டி ஆப்ஷனுடன் இந்த காரின் விலை ரூ 3.87 லட்சம் முதல் ரூ 4.64 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த காரின் கியர் செலக்ஸன் பகுதி வழக்கமாக ஸ்டிக் விடிவில் இல்லாமல் பெரிய ரக காரில் உள்ளது போல் திருகுவது போன்ற வடிவமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் டிரைவர் சீட்டிற்கும் பக்கத்து சீட்டிற்கு இடையே நல்ல இடைவெளி கிடைக்கிறது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

டட்சன் ரெடி கோ

டட்சன் ரேடிகோ காரின் ஏஎம்டி வேரியண்ட் கடந்த ஜனவரி மாதம் தான் அறிமுகப்படுத்தப்பபட்டது. இந்த கார் இரண்டு விதமான டிரைவிங் மோடில் வருகிறது. முதல் மோடில் வேகமாக செல்வதற்கு மலைகளில் ஏறுவதற்கு, இறங்குவதற்கு என சிறப்பாக பயன்படகூடியது. இரண்டாவது மோட் பம்பர்-டூ-பம்பர் டிராபிக்கில் செல்ல வசதியாக உள்ள கார் அதாவது காரை நீங்கள் 5-6 கி.மீ. வேகத்தில் கூட செல்லலாம். இந்தியாவில் உள்ள டிராபிக்கை மனதில் வைத்து இவ்வாறான மோடை அவர்கள் பயன்படுத்தியுள்ளது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

இந்த டட்சன் ரெடி கோ ஏஎம்டி கார் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 68பிஎச்பி பவரையும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்ககூடியது. மேலும் இந்த காரில் புளூ டூத் ஆடியோ ஸ்டிரீமிங், சென்ட்ரல் லாக்கிங் ரிமோட் கீ ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ 3.96 லட்சத்தில் இருந்து ரூ 4.05 லட்சம் வரை விற்பனையாகிறது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

மாருதி சுசூகி ஆல்டோ ஏஜிஎஸ்

மாருதி ஆல்டோ கார் குறைந்த விலை ஹெட்ச்பேக் காராக அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மாருதி நிறுவனம் மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ள நிலையில் இந்த காரை அதிகமான மக்கள் வாங்கி வருகின்றனர். 1.0 லிட்டர் ஆட்டோ கியர் இன்ஜினுடன் வரும் இந்த கார் 24 கி.மீ. வரை மைலேஜ் தருகிறது. இது தான் இந்த காரின் ஸ்பெஷாலிட்டியே. சாதாரண ஆல்டோ காரை விட இந்த ஆட்டோ கியர் கார் 15 சதவீதம் அதிக மைலேஜை தருகிறது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

இந்த காரின் கிரில், ஹெட்லைட் மற்றும் டெயில்லேம்ப், புதிய பம்பர், 13 இன்ச் வீல், டூயல் டோன் டேஷ்போர்டு, புதிய கண்ட்ரோல் பட்டன்கள் என சாதாரண ஆல்டோ காரில் இருந்து இந்த ஆட்டோ கியர் கார் அதிக அப்டேட்களை பெற்றுள்ளது. இந்த கார் டில்லி எக்ஸ்ஷோரூம் விலைப்படி ரூ 4.18 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

மாருதி சுசூகி வேகன் ஆர் ஏஜிஎஸ்

மாருதி நிறுவனத்தின் மற்றொரு பட்ஜெட் காரான வேகன் ஆர் காரின் விஎக்ஸ் ஐ வேரியண்ட்டில் ஏம்டி ஆப்ஷன் கிடைக்கிறது. இந்த காரில் இரண்வு ஏர் பேக், இபிடிஎஸ் வசதியுடன் கொண்ட ஏபிஎஸ், கருப்பு மற்றும் பேட்ஜ் கலர்களால் ஆன இரண்டு டோன் இன்டிரீயர்ஸ், என பழைய வேகன் ஆரில் இருந்து பல அப்டேட்கள் இந்த ஆட்டோ கியர் வேரியன்டில் செய்யப்பட்டுள்ளுது. இந்த கார் 67 பிஎச்.பி. பவர் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த காரின் விலை ரூ 4.19 லட்சத்தில் இருந்து ரூ 5.24 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

மாருதி சுசூகி செலிரியோ

மாருதி சுசூகி செலிரியோ கார் கடந்த 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 3லட்சம் கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஈஇசட் டிரைவ் என்னும் தொழிற்நுட்பம் ஆட்டேகியரை கையாள்கிறது. இந்த கார் 67 பிஎச்பிபவர் மற்றும் 90 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த காரின் 5 ஸ்பீடு மேனுவல் டிரன்ஸ்மிஷனுடனும் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் மைலேஜிற்கு பெயர் பெற்ற கார். இது 23.1 கி.மீ. மைலேஜ் தருகிறது. இந்த கார் எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 4.95 லட்சம் முதல் ரூ 5.38 லட்சம் வரை விற்பனையாகிறது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

டாடா டியாகோ ஏஎம்டி

டாடா நிறுவனம் தனது டியாகோ காரில் ஏஎம்டி ஆப்ஷனுடன் கடந்த 2017ம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தியது. இந்த கார் மாருதி சுசூகி செலிரியோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களுக்குபோட்டியாக வந்துள்ளது. இந்த கார் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ரேவோடிரான் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6000 ஆர்பிஎம்மில் 84 பிஎச்பி பவரையும் 3500 ஆர்.பி.எம்மில் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

இந்த காரில் உள்ள ஆட்டோ கியர் பகுதியில் 4 கியர் போஷின்கள் உள்ளது. அதாவது. ஆட்டோமெட்டிக், நியூட்ரல், ரிவர்ஸ், மற்றம் மேனுவல் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ஆட்டோகியரில் இரண்டுடிரைவிங் மோடுகள் உள்ளன ஒன்று ஸ்போர்ட்ஸ் வேகமாக செல்வதற்கும், சிட்டி மோட் மெதுவாக செல்வதற்கும் பயன்படுத்தலாம். இந்த காரின் விலை ரூ 4.99 லட்சத்தில் இருந்து ரூ 5.58 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

மாருதி சுசூகி இக்னிஸ் ஏஜிஎஸ்

மாருதி சுசூகி நிறுவனம் இக்னிஸ் ஏஜிஎஸ் கார் கடந்த 2017ம் ஆண்டு விற்பனை வந்தது. இதில் டெல்டா மற்றும் ஜிட்டா ஆகிய வேரியன்ட்கள் விற்பனை வந்துள்ளது. டெல்டா வேரியன்டில் ஸ்டீடில் வில் கேப், இரண்டு கலர் டேஸ் போர்டு, யூஎஸ்பி மற்றும் ப்ளூ டூத் கனெக்டிவிட்டி, 2 ஸ்பீக்கர்கள், ரியர் பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக் விங் மிரர், பின் பக்க சீட்டில் 60:40 ஸ்பிலிட், செக்யூரிட்டி அலாரம் சிஸ்டம், கீ லேஸ் என்ட்ரி, ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன். பார்க்கிங் சென்சார் என பல வசதிகள் இந்த காரில் உள்ளது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

இந்த கார் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்க உள்ளது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் விலை ரூ 5.82 லட்சத்தில் இருந்து ரூ 7.04 லட்சம் வரை விற்பனையாகிறது. இதில் டீசல் வேரியன்ட் தான் ரூ 6 லட்சத்திற்கு அதிமான விலையில் உள்ளது. பெட்ரோல் வேரியண்ட் ரூ 6 லட்சத்திற்க குறைவாக தான் உள்ளது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

டாடா டிகோர் ஏஎம்டி

டாடா டிகோர் கார் சப் காம்பேக்ட் செடன் ரக காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளுது. இதில் இரண்டு வேரியண்ட்களான எக்ஸ்டிஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ ஆகிய கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் ஆட்டோ கியர் ஆப்ஷனுடன் உள்ள கார்கள் ரூ 5.98 லட்சத்தில் இருந்து ரூ 6.47 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 1.2 லட்டர் ரெவோட்ரோன் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

ஆறு லட்சத்திற்குள் அட்டகாசமான ஆட்டோமெட்டிக் கார்களின் பட்டியல்; கார் ஓட்ட இனி கவலையில்லை

இதன் கியர் பாக்ஸ்கள் ஆட்டோமெட்டிக், நியூட்டரல், ரிவர்ஸ், மேனுவல் ஆகிய ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் அதிக டிராப்பிக்கிலும் டென்ஷன் இல்லாமல் செல்லும் வகையில் சிறப்பாக விடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Automatic Cars In India Under ₹ 6 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X