Automobile Dealer Profit இவ்வளவு கம்மியா? ஒரு கார் வித்தா இவ்வளவு பணம் தான் டீலருக்கு கிடைக்குமா?

சமீபத்தில் ஆட்டோமொபைல் டீலர் சங்கம் நடத்திய ஒரு சர்வேயில் இந்தியாவில் தான் மற்ற நாடுகளை விட ஆட்டேமொபைல் டீலர்களுகு்கு குறைவான லாபம் கிடைப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்த முழுமையாக விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இன்று நாம் ஒரு பைக் அல்லது காரை வாங்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும் ஏன் என்றால் ஒரு வாகனத்தை உருவாக்கி விற்பனைக்குக் கொண்டு வருவது என்பது அவ்வளவு சாதாரண வேலையில்லை. இதில் ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பு இருக்கிறது.

Automobile Dealer Profit

ஆட்டோமொபைல் மட்டுமல்ல நாம் எந்த பொருளை வாங்கினாலும் அந்த பொருள் எப்படி உருவானது, இதைத் தயாரிக்க எவ்வளவு செலவாகும், இது விற்பனைக்கு வரும் போது இதன் விலை எப்படி உயருகிறது என நமக்குள் பல கேள்விகள் இருக்கும். சிறிய பொருட்களுக்கே இவ்வளவு கேள்விகள் இருக்கும் போது அதிக விலை கொடுத்து வாங்கும் கார், பைக்குகளுக்கு இருக்காதா?

இப்படியாக கார் பைக்குகளை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வரும் போது டீலர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்பதைப் பற்றி தான் பார்க்கப்போகிறோம். இப்படியாக இந்திய அளவில் ஆட்டோமொபைல் டீலர்களுக்கான அசோசியேசன் இருக்கிறது.

Automobile Dealer Profit

இந்த அசோசியேன் சார்பில் சமீபத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதாவது கார் விற்பனையாகும் பணத்தில் எவ்வளவு சதவீதத்தை டீலர்ஷிப்கள் லாபமாக பெறுகின்றனர் என அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் இந்தியாவில் சராசரியாக ஒரு ஆட்டோமொபைல் டீலர் வாகனம் விற்பனையாகும் எக்ஸ் ஷோரூம் விலையில் 5 சதவீதத்தை தான் லாபமாக பெறுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த சதவீதம் 2.9 சதவீதத்திலிருந்து 7.49 சதவீதம் வரை மாறுபடுகிறது.

Automobile Dealer Profit

இருப்பதிலேயே அதிகமாக எம்ஜி மோட்டார் மற்றும் மாருதி சுஸூகி ஆகிய நிறுவனங்கள் தான் அதிகமாக கமிஷன்களை டீலர்களுக்கு கொடுக்கின்றனர். இவர்கள் தான் 5க்கும் அதிகமான சதவீத பணத்தை கமிஷனாக கொடுக்கின்றனர். மற்ற நிறுவனங்கள் எல்லாம் குறைவாகவே கொடுக்கின்றனர்.

இந்த கமிஷன் சதவீதம் என்பது வாகனத்திற்கு வாகனம், அது விற்பனையாகும், இடம், வாகனத்தின் வகை, இப்படியாகப் பலவிஷயங்களைக் கொண்டு மாறுபடும். ஒரே வாகனத்திற்கு மெட்ரோ சிட்டி பகுதியில் ஒரு கமிஷனும், டயர் 2, டயர் 3 சிட்டிகளில் ஒரு விதமான கமிஷனும் வழங்கப்படுகிறது.

அதாவது ஒரு டீலர் ரூ5 லட்சத்திற்கு ஒரு காரை விற்பனை செய்தால் அவருக்கு ரூ25 ஆயிரம் வரை கமிஷன் கிடைக்கிறது. அதை வைத்து தான் அவர் ஷோரூம் நடத்தும் செலவு, சம்பளம், விளம்பர செலவு உள்ளிட்ட பலவற்றைப் பார்க்க வேண்டும். இதுவே சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் டீலர் கமிஷன் சராசரியாாக 7-8 சதவீதமாக இருக்கிறது.

பலர் கார் டீலர்களுக்கு கார் விற்பனையை விட அது சர்வீஸ்கு வரும் போது விற்பனையாகும் ஸ்பேர்பார்ட்ஸ்களில் தான் லாபம் என கருதுகின்றனர். ஆனால் இந்தியாவில் சராசரியாக ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கான லாபம் என்பது 15-20 சதவீதமாக இருக்கிறது.

இதுவே சர்வதேச அளவில் ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கான லாபம் 30-40 சதவீதம் வரை இருக்கிறது. வாகன விற்பனையிலும் சரி, உதிரிப்பாக விற்பனையிலும் சரி இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் உலக சராசரியை விடக் குறைவாக லாபம் பெறுகின்றனர்.

இந்த கமிஷன் சதவீதம் எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலையில் தான் இந்த விலை போக வாகனத்தை வாங்குபவர்கள் தனியாக சாலை வரி, ஜிஎஸ்டி, மற்றும் பிற வரிகளை செலுத்த வேண்டும். இப்படியாக ஒரு வாகனம் விற்பனையாவதன் மூலம் அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பது தனிக்கணக்கு.

More from DriveSpark

Article Published On: Monday, April 10, 2023, 12:40 [IST]
English summary
Automobile dealer profit is less than world average survey says
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X