இனி ஒரு பைசா கூட ஏமாத்த முடியாது... கார், பைக் டீலர்களுக்கு செக் வைத்த அரசு! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

கார், பைக் டீலர்களுக்கு அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இனி ஒரு பைசா கூட ஏமாத்த முடியாது... கார், பைக் டீலர்களுக்கு செக் வைத்த அரசு! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஒடிசா மாநில போக்குவரத்து ஆணையம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து வாகன டீலர்களும் தங்களது ஷோரூமில் விலை பட்டியலை வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விலை பட்டியலில், வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டண விபரங்கள் அனைத்தும் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இனி ஒரு பைசா கூட ஏமாத்த முடியாது... கார், பைக் டீலர்களுக்கு செக் வைத்த அரசு! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஒரு ஷோரூமில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த விலை பட்டியல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதில், வாடிக்கையாளர்கள் எது எதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அனைத்து வாகன டீலர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

இனி ஒரு பைசா கூட ஏமாத்த முடியாது... கார், பைக் டீலர்களுக்கு செக் வைத்த அரசு! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஷோரூமில் எளிதில் பார்க்க கூடிய இடத்தில் இந்த விலை பட்டியல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களால் தெளிவாக படிக்க கூடிய வகையில் இந்த விலை பட்டியல் இருக்க வேண்டும். விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களை தவிர வேறு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதையும் இந்த அறிவிப்பு பலகையில் டீலர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இனி ஒரு பைசா கூட ஏமாத்த முடியாது... கார், பைக் டீலர்களுக்கு செக் வைத்த அரசு! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அத்தியாவசியமான அல்லது ஆப்ஷனல் என எதற்கான கட்டணம் என்றாலும் இந்த அறிவிப்பு பலகையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பது அவசியம். அத்துடன் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணத்திற்கு முறையான ரசீதையும் டீலர்கள் வழங்க வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை பரிசோதிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இனி ஒரு பைசா கூட ஏமாத்த முடியாது... கார், பைக் டீலர்களுக்கு செக் வைத்த அரசு! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஷோரூம்களுக்கு நேரடியாக சென்று அவர்கள் இதனை கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவின்படி, முறையான ரசீது கொடுக்காமல் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த கட்டணத்தையும் டீலர்கள் வசூலிக்க முடியாது. அதேபோல் தங்களிடம்தான் வாகனத்தை காப்பீடு செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தவும் முடியாது.

இனி ஒரு பைசா கூட ஏமாத்த முடியாது... கார், பைக் டீலர்களுக்கு செக் வைத்த அரசு! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

போக்குவரத்து துறையானது கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனங்களின் பதிவு சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வினியோகம் செய்து வருகிறது. இதன் காரணமாக வாகன பதிவிற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒரு சில டீலர்ஷிப்கள் இந்த பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இனி ஒரு பைசா கூட ஏமாத்த முடியாது... கார், பைக் டீலர்களுக்கு செக் வைத்த அரசு! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அவர்கள் பழைய கட்டணத்தையே தொடர்ந்து வசூல் செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கட்டண விபரங்கள் அடங்கிய விலை பட்டியலை வைக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இனி ஒரு பைசா கூட ஏமாத்த முடியாது... கார், பைக் டீலர்களுக்கு செக் வைத்த அரசு! என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஒரு சில டீலர்ஷிப்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுக்களையும் களையும் வகையில், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், மறைமுகமாக எந்த கட்டணத்தையும் கூடுதலாக வசூலிக்க கூடாது எனவும் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Automobile dealerships must display price chart transport authority
Story first published: Friday, January 14, 2022, 19:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X