செல்ஃப்-டிரைவிங் கார்களில் இப்படியொரு பிரச்சனையும் இருக்கா... இந்திய அரசு எதிர்காலத்தில் என்ன பண்ண போகுதோ!!
கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் தன்னிச்சையாக இயங்கக்கூடிய கார்கள் 36 விபத்துகளில் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்கர ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. என்ன ரிப்போர்ட் அது? எந்த மாதிரியான விபரங்களை அந்த ரிப்போர்ட் தெரிவிக்கிறது என்பது குறித்த விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய, அடைய அவன் ஓர் இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வாகனங்களும் பரிணாம வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. இயந்திர அறிவியலில் இயங்கும் ஆட்டோமொபைல் வாகனங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு நூறாண்டுகள் எப்போதோ கடந்துவிட்ட நிலையில் தற்சமயம் நாம் மெல்ல மெல்ல எரிபொருள் இல்லாமல் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களில் நுழைந்து கொண்டிருக்கிறோம்.

அதேநேரம், அமெரிக்கா, சீனா போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் ஓட்டுனரின் உதவியின்றி தன்னிச்சையாக இயங்கக்கூடிய வாகனங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. முதன்முதலாக ஆட்டோமொபைல் வாகனங்களில் மனிதன் நுழைந்தது போது, அனைவரும் வாகனங்களை ஆச்சிரியத்துடன் பார்த்தனர். பயன்படுத்த மட்டுமின்றி, இயங்கும் வாகனங்களுக்கு அருகே செல்லவே மனிதர்கள் பயந்த காலமும் உண்டு.
அந்த காலத்தில் தொழிற்நுட்பங்களில் நாம் அந்த அளவிற்கு முன்னேற்றம் அடையாததால் சில பல விபத்துகளை தவிர்க்க முடியவில்லை. ஆட்டோமொபைல் வாகனங்கள் மட்டுமின்றி, எந்தவொரு கண்டுப்பிடிப்பையும் ஆரம்பத்திலேயே 100% சிறந்ததாக கண்டுப்பிடிப்பது இயலாத காரியம். அதனை நாம் பயன்படுத்த, பயன்படுத்தவே அதில் நாம் மேம்பாட்டை காண முடியும். இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், ஆட்டோமேட்டிக்காக இயங்கக்கூடிய வாகனங்களிலும் தற்சமயம் நாம் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளோம்.

இதன் வெளிப்பாடே, கடந்த 2022ஆம் ஆண்டில் செல்ஃப்-டிரைவிங் கார்களின் 36 ஹிட் & ரன் வழக்குகள் ஆகும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த 36 வழக்குகளில் குறைந்தது 3 வழக்குகளிலாவது சம்பந்தப்பட்ட பயணிகள் காயம் அடைந்திருப்பார்கள். பயணத்தின் போது தன்னுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளதாக வாகனங்களை செல்ஃப்-டிரைவிங் கார்கள் துரத்துவதாக இந்த வகை கார்களின் மீது மற்றொரு புகாரும் உள்ளது.
லெவல்-2 அடாஸ் (ADAS) போன்ற தானியங்கி பாதுகாப்பு அம்சங்களும், முழுவதுமாக கார் தன்னிச்சையாக இயங்கக்கூடிய அளவிற்கு ரோடு மேப்-பும் செல்ஃப்-டிரைவிங் கார்களுக்கு முக்கியமான இரண்டாகும். நாம் கிட்டத்தட்ட இந்த இரு தொழிற்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். இந்தியாவிலும் தற்சமயம் விற்பனையில் உள்ள பல கார்களில் அடாஸ் வழங்கப்படுகிறது. இதனால் பல கார் தயாரிப்பு நிறுவனங்களின் மனதில் செல்ஃப்-டிரைவிங் கார்கள் குடியேறிவிட்டன.

லிடார் ஸ்கேனர்கள், ரேடார்கள் மற்றும் சென்சார்கள் தான் செல்ஃப்-டிரைவிங் கார் ஒன்று தன்னிச்சையாக இயங்குவதற்கு ஆணி வேர்களாக விளங்குகின்றன. செல்ஃப்-டிரைவிங் கார்களின் 36 ஹிட் & ரன் வழக்குகளில் 7 சம்பவங்களில் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டியும் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளார். விபத்து நடந்தால் உடனே அங்கிருந்து தப்பித்து செல்ல வேண்டும் என்கிற உணர்வு மனிதர்களாகிய நம்மிடத்திலும் உள்ளதை இதில் இருந்து கூற முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
மனிதர்கள் தவறு செய்வதற்காக, இயந்திரங்களின் தவறையும் நம்மால் ஏற்ற கொள்ள முடியாது. ஆதலால் தன்னிச்சையான வாகனங்களில் உள்ள பிரச்சனைகளை களைவதில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும், தொழிற்நுட்ப நிறுவனங்களும் தொடர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியம் ஆகும். குறிப்பாக, தகவல் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளாத வாகனங்களை செல்ஃப்-டிரைவிங் கார்கள் பின்தொடர்வதை விரைவாக சரி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








