போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெருமையை மத்திய பிரதேசத்தை சேர்ந்த அவானி சதுர்வேதி பெற்றிருக்கிறார்.

By Saravana Rajan

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் என்ற பெருமையை இந்திய விமானப் படை அதிகாரி அவானி சதுர்வேதி பெற்றிருக்கிறார்.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

போர் விமானி துறையில் ஆண்கள் ஆதிக்கம் அதிகம் இருந்து வருகிறது. இந்தநிலையில், போர் விமானங்களை இயக்குவதில் பெண்களையும் சேர்க்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்தது.

அதன்படி, 2016ம் ஆண்டு ஜூன் மாதம் மோகனா சிங், பாவனா காந்த் மற்றும் அவானி சதுர்வேதி ஆகிய மூன்று பெண்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டனர்.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

பின்னர், அவர்களுக்கு போர் விமானங்களை இயக்குவதற்கான சவால்கள் நிறைந்த பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

பயிற்சிகளில் வெற்றி பெற்ற மூன்று பேரும் அப்போதைய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோக்கர் பாரிக்கர் முன்னிலையில் போர் விமானிகளாக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்பிறகு, போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

அனுபவம் வாய்ந்த போர் விமானியின் துணையுடன் இவர்கள் போர் விமானங்களை இயக்கும் பயிற்சியை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 19ந் தேதி முதல்முறையாக மிக்-21 ரக போர் விமானத்தை தனியாக இயக்கி சாதித்து காட்டி இருக்கிறார் அவானி சதுர்வேதி.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

குஜராத் மாநிலம், ஜாம்நகர் விமானப் படை தளத்தில் இருந்து மிக்-21 ரக போர் விமானத்தில் 30 நிமிடங்கள் அவர் தனியாக இயக்கினார். சாதாரண விமானங்களைவிட போர் விமானங்கள் மிக வேகமாக செல்லும் திறன் படைத்தவை. அவற்றை கையாள்வதில் மிகுந்த எச்சரிக்கையும், அனுபவமும் வேண்டி இருக்கும்.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

அவானி சதுர்வேதி இயக்கிய மிக்- 21 ரக போர் விமானம் உலகின் மிக பழமையான போர் விமானங்களில் ஒன்று. ஒலியைவிட வேகமாக செல்லும் திறன் படைத்த சூப்பர்சானிக் ரகத்தை சேர்ந்த மிக்-21 ரக போர் விமானம் 1950களில் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

மிக் போர் விமான தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்தாபர்களான அர்டெம் மிகோயன் மற்றும் மிகஹெயில்ல குரெவிக் ஆகியோரின் கடைசி பெயர்களின் சுருக்கமாகத்தான் மிக் என்ற குறியீட்டில் அழைக்கப்படுகிறது.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

1950களில் சோவியத் யூனியனின் தயாரித்த அதிநவீன ரக போர் விமானம்தான் மிக்-21. முதல்முறையாக 1956ம் ஆண்டில் பறந்தது. 1959ம் ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

இந்தியா உள்பட உலக அளவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் மிக்-21 ரக போர் விமானங்கள் விற்பனை செய்யப்பபட்டன. தற்போது பல நாடுகள் மிக்-21 ரக விமானத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நவீன ரக விமானங்களை சேர்த்துவிட்டன. ஆனால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மிக்-21 ரக போர் விமானங்களை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்துள்ளன.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

1961ம் ஆண்டு மிக்-21 ரக போர் விமானங்களை இந்தியா வாங்கியது. அதே ஆண்டில் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்வதற்கான உரிமத்தையும் இந்தியா பெற்றுவிட்டது. 1970களில் இந்திய விமானப் படையில் மிக்-21 ரக போர் விமானங்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

மிக்-21 ரக போர் விமானங்கள் மணிக்கு 2,200 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது. இந்த விமானத்தில் டுமன்ஸ்கை ஆர்-25-300 டர்போஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

இந்த விமானத்தில் எஸ்-24 வகை ராக்கெட், தரை மற்றும் வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை பொருத்தும் வசதிகளை பெற்றிருக்கிறது. 23 மிமீ விட்டமுடைய குழல் கொண்ட எந்திர துப்பாகியும் இருக்கிறது. இது 200 ரவுண்டுகள் வரை சுடும்.

போர் விமானத்தை தனியாக இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி!

உலகின் சிறந்த போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படும் மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கி அனுபவத்தை இந்தியாவின் முதல் பெண் விமானி அவானி சதுர்வேதி பெற்றிருப்பதும் பெருமைக்குரிய விஷயம்தான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Avani Chaturvedi, Indian Air Force Flying Officer flew a MiG-21 aircraft, to the title of 'The First Indian Woman To Fly A Fighter Jet All By Herself'. The Madhya Pradesh native, Avani Chaturvedi, flew the fighter jet from Jamnagar Air Base in Gujarat on February 19, 2018.
Story first published: Saturday, February 24, 2018, 12:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X