மரணம் எங்கிருந்து வரும்னே சொல்ல முடியல!! எவ்வளவு பெரிய மனிதர், எவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரர்...
இண்டெல் இந்தியா (Intel India) நிறுவனத்தின் முன்னாள் முதன்மை அதிகாரிகளுள் ஒருவரான அவ்தார் சைனி மும்பையில் சைக்கிளிங் சென்ற போது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 68 வயதான அவ்தார் சைனி வழக்கம்போல் அதிகாலை நேரத்தில் சைக்கிளிங் சென்ற சமயத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
எந்தவொரு நாட்டின் அரசாங்கத்திற்கும் பெரிய தலைவலியாக இருப்பது சாலை விபத்துகள் ஆகும். அதுவும், நம் இந்தியா போன்ற அளவில் பெரிய நாடுகளில் சாலை போக்குவரத்தை எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் முறையாக பராமரிப்பது அதிகாரிகளுக்கு கடினமான காரியமாக உள்ளது. இதற்கேற்றவாறு, நம் நாட்டில் நிறைய பேர் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது இல்லை.

இதன் காரணமாகவே, தினந்தோறும் செய்தித்தாள்களில் சாலை விபத்துகள் குறித்த செய்திகளை குறைந்தது ஒன்றையாவது பார்க்க முடிகிறது. அதிவேகத்தில் கார், பைக்கில் சென்றால்தான் விபத்தில் சிக்க நேரிடும் என்றில்லை, சாலையின் ஓரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகள் கூட விபத்தில் காயமடைந்த செய்திகளை பார்த்துள்ளோம். ஆனால் இங்கு, இண்டெல்லின் முன்னாள் தலைவர் அவ்தார் சைனி சைக்கிளிங் சென்ற போது விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையில் உள்ள பால்ம் கடற்கரை சாலையில் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் அவ்தார் சைனி வழக்கம்போல், வேறு சிலருடன் இணைந்து சைக்கிளிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஒரு கார் டாக்ஸியினால் அவ்தார் சைனி விபத்தில் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து அவ்தார் சைனி உடன் சைக்கிளிங் சென்றவர்கள் அளித்த விபரங்களின்படி, சைனியின் பை-சைக்கிளின் பின்பக்கம் கார் டாக்ஸி ஒன்றுடன் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டுள்ளது. இதனால், சைக்கிளுடன் சேர்த்து அவ்தார் சைனி தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். ஹெல்மெட் அணிந்திருந்ததால், அந்த சமயத்தில் சைனிக்கு பெரியதாக காயம் ஏற்படவில்லை.
ஆனால், மோதிய வேகத்தில் சைக்கிள் நன்றாக காரின் முன்பக்கத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டது. அங்கிருந்து அவ்தார் சைனியாலும் வெளியே வர முடியவில்லை. இதனால், சில மீட்டர்கள் தூரத்திற்கு சைக்கிளையும், அதனுடன் சேர்த்து சைனி அவர்களையும் கார் இழுத்து சென்றுள்ளது. இதில்தான், அவ்தார் சைனி பலத்த காயமடைந்துள்ளார்.
உடன் இருந்தவர்கள் உடனே அவ்தார் சைனியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கு காரணமான கேப் டிரைவரின் பெயர் ஹிரிஷிகேஷ் காடே. அவ்தார் சைனியை சைக்கிளுடன் இழுத்து செல்வதை பார்த்த சாலையில் இருந்தவர்கள் உடனடியாக கேப் டிரைவரை தடுத்து நிறுத்தினர்.
அதன்பின்னரே இவ்வாறான ஒரு செயலில் தாம் ஈடுபட்டுள்ளோம் என்பதே அந்த டிரைவருக்கு தெரியவந்துள்ளது. பயத்தில் என்ன செய்வது என தெரியமால், கேப் டிரைவர் ஹிரிஷிகேஷ் காடே அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டியது, மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவித்தது, ஒருவரது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு இந்திய தண்டனை சட்டங்களின் கீழ் ஹிரிஷ்கேஷ் காடே மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகாலை சைக்கிளிங் உடலுக்கு நல்லதுதான். ஆனால், அதனை 6 மணிக்கு மேல் சூரிய வெளிச்சம் வந்த பின்பு மேற்கொள்வது நல்லது. ஏனெனில், டிரைவர்கள் பலர் தூக்கமின்றி இரவு முழுக்க வாகனம் ஓட்டுகின்றனர். அதற்காக, இந்த கேப் டிரைவரின் செயலை நம்மால் ஆதரிக்க முடியாது. இந்த செயலை அவர் தெரியாமல் செய்திருந்தால் கூட, இது குற்றமே ஆகும்.


Click it and Unblock the Notifications








