திருமண வாழ்க்கை எதுக்கும் தடையில்லைனு காட்டிட்டாங்க! கேக் தயாரித்தே BMW காரை வாங்குறது எல்லாம் வேற லெவல்!
பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது கனவாக இருக்கும். ஆனால், இதனை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால் குறைவே. ஏனெனில், அந்த அளவிற்கு விலைமிக்கவைகளாக பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால் இங்கு ஒரு பெண்மணி பேக்கரி (Bakery) நடத்தியே விலைமிக்க பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார். இந்த பேக்கரி ஓனரின் பெயர் 'அன் பிரியா' (Ann Bakery) ஆகும். பெயரை பார்த்தவுடனே கண்டுப்பிடித்து இருப்பீர்கள், இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதை. பெரிய அளவிலான பேக்கரி நடத்துபவராக இருந்தாலும், எல்லாவற்றையும் விட கேக்குகளை வடிவமைப்பதில் அன் பிரியா நிபுணத்துவம் வாய்ந்தவராக உள்ளார்.

எந்த அளவிற்கு என்றால், கேரளாவின் கேக் குயின் (Cake Queen) என அழைக்கும் அளவிற்கு அன் பிரியா புகழ் பெற்றவராக விளங்குகிறார். கடந்த 2024ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற கேக்குகளை வடிவமைப்பதற்கான போட்டியில் 3வது இடத்தை பிடித்து ஆச்சிரியப்படுத்தியவர், 2024ஆம் ஆண்டிற்கான அகில இந்திய கேக் விருதுக்கான இறுதிப் போட்டியாளாராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், வேறொரு பந்தயத்தில் சிறந்த கேக் வடிவமைப்பாளராக அன் பிரியா பட்டத்தை பெற்றார். இதனாலேயே, கேரளாவில் கேக்குகளை வடிவமைப்பதில் எல்லாரும் புகழும் நபராக விளங்கும் அன் பிரியா, பெரிய பெரிய தொழிலதிபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் கேக்குகளை வடிவமைத்துக் கொடுப்பதன் மூலம் கணிசமான வருவாயை ஈட்டி வருகிறார்.

இதன் மூலமாகவே, தற்போது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றை அன் பிரியா வாங்கியுள்ளார். கணவர் மற்றும் மகன் உடன் கொச்சியில் உள்ள ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ காரை அன் பிரியா டெலிவிரி பெறுவதை சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வீடியோ உடன் வெளியிட்டுள்ளது.
புதிய பிஎம்டபிள்யூ காரை கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளதால், அதற்கேற்ப அன் பிரியா தனது குடும்பத்தினர் உடன் ஒரே மாதிரியாக கருப்பு நிற உடையில் ஷோரூமுக்கு சென்றிருப்பது கவனத்தை ஈர்த்தது. கேக் வடிவமைப்பாளர் அன் பிரியா வாங்கியிருப்பது, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2-சீரிஸ் கிரான் கூபே (2-Series Gran Coupe) என்கிற லக்சரியான செடான் ரக கார் ஆகும்.
2-சீரிஸ் கிரான் கூபே காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 4-கதவுகளை கொண்ட கூபே-ஸ்டைலிலான கார் ஆகும். அதாவது, காரின் பின்பக்கத்தில் மேற்கூரை ஆனது வழக்கத்தை காட்டிலும் சற்று அதிகமாகவே சறுகலாக உள்ளது. விலை குறைவான 1-சீரிஸ் காருக்கும், விலைமிக்க 3-சீரிஸ் காருக்கும் மத்தியில் 2-சீரிஸ் கார் மார்க்கெட்டில் சந்தைப்படுத்தப்படுகிறது.
விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் சி.எல்.ஏ (Mercedes-Benz CLA) காருக்கு போட்டியாக விளங்கும் 2-சீரிஸ் கிரான் கூபே கார் ஆனது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 'ஃபார்' (FAAR) என்கிற கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 177 பிஎச்பி மற்றும் 280 என்.எம் டார்க் திறன் வரையிலும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 400 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. இதில், பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும், டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.47 லட்சமாக தற்சமயம் உள்ளது. ஆன்-ரோடு விலை ரூ.60 லட்சம் வரையில் வரும். இவ்வளவு விலையுயர்ந்த காரை வாங்கியிருப்பதன் மூலம், கேக் வடிவமைப்பாளர் அன் பிரியா தனது வாழ்வில் ஜெயித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அன் பிரியாவை வெளியில் பார்ப்பதாக இருந்தாலே இனி இந்த பிஎம்டபிள்யூ காருடன் தான் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








