உஷாரா இருங்க! ஃபாஸ்ட் டேக் கார்டு ரீசார்ஜ் செய்யும் போது பணத்தை ஆட்டைய போடும் புதிய கும்பல்...
இந்தியாவில் சமீபகாலமாக ஃபாஸ்ட்டேக் வாடிக்கையாளர் சேவை மையம் என்ற பெயரில் பெரும் மோசடி கும்பல் மக்கள் பணத்தை ஆட்டையைப் போடும் வேலையைப் பார்த்து வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவில் ஒருவரை ஏமாற்றி ரூ1 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியத் தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணிக்கவேண்டும் என்றால் அந்த காருக்கு ஃபாஸ்ட் டேக் கார்டு கட்டாயம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஃபாஸ்ட் டேக் கார்டு இல்லாத காருக்கு இரண்டு மடங்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதனால் இந்தியாவில் உள்ள 98 சதவீதமான வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டை வாங்கிவிட்டனர். சிலர் மட்டும் இன்னும் அதை வாங்காமல் உள்ளனர். இப்படியாக ஃபாஸ்ட் டேக் கார்டை வாங்கிவிட்டால் பயணம் எளிதாகும்.

ஃபாஸ்ட் டேக் கார்டை காரின் முன்பக்கம் கண்ணாடியில் ஒட்டிவிட்டால் டோல்கேட்களில் உள்ள ரீடர்கள் மூலம் இந்த கார்டு ஸ்கேன் செய்யப்பட்டு கார்டில் உள்ள பணம் டோல்கேட் கட்டணத்திற்காகக் கழிக்கப்படும். இப்படியாக அந்த கார்டில் தேவையான பணத்தைப் பயணத்திற்கு முன்னரே ரீசார்ஜ் செய்துவிட்டால் தங்கு தடையின்றி ஒருவர் பயணத்தைச் செய்ய முடியும். அந்த கார்டை தற்போது ஆன்லைன் மூலம் மூட ரீசார்ஜ் செய்ய முடியும்.
இன்றும் பெரும்பாலான மக்கள் பேடிஎம், பார்க் பிளஸ் போன்ற நிறுவனங்களில் தான் தங்கள் ஃபாஸ்டேக் கார்டுகளை பதிவு செய்துள்ளனர். அந்த ஆப்கள் மூலமே ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஆனால் இப்படியாக ரீசார்ஜ் செய்யும் போது அதில் சில மோசடி வேலைகள் செய்யப்பட்டு ரீசார்ஜ் செய்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஏராளமான பணம் கொள்ளையடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஒருவர் இந்த மோசடியில் சிக்கி சுமார் ரூ1 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 29ம் தேதி பிரான்சிஸ் என்பவர் ஹினாமேடி டோல்கேட் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அவரது ஃபாஸ்ட் டேக் கார்டில் போதுமான அளவு பேன்ஸ் இல்லை. ஆனால் அவருக்கு அது பற்றித் தெரியவில்லை. கார் டோல்கேட்டை கடக்க முடியவில்லை. இவர் உடனடியாக காரை ஓரம் கட்டி ஃபாஸ்ட்டேக் வழங்கிய நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
பிரான்ஸிஸ் பேடிஎம் நிறுவனத்தில் தனது ஃபாஸ்ட்டேக் கார்டை பதிவு செய்துள்ளார். உடனடியாக கூகுளுக்குச் சென்று பேடிஎம் ஃபாஸ்ட்டேக் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை எடுத்துள்ளார். கூகுள் தேடுதலில் கிடைத்த ஒரு நம்பரை எடுத்து தொடர்பு கொண்டுள்ளார். எதிரில் பேசியவர் தான் பேடிஎம் ஃபாஸ்ட்டேக் சேவை மைய ஊழியர் என்றும் அவரது பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுத்த முயல்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
அவர் தனது சிஸ்டத்தில் செக் செய்ததாகவும், குறிப்பிட்ட நபர் தான் பேசுவது என்பதை உறுதி செய்ய அவர் பேசிக்கொண்டிருக்கும் நம்பருக்கு ஒரு ஓடிபி எண்ணை அனுப்பியுள்ளதாகவும் அதைக் கூறும்படியும் தெரிவித்துள்ளார். அதை நம்பிய பிரான்ஸிஸ் அந்த ஓடிபிஎண்ணை பேடிஎம் ஊழியருக்குத் தெரிவித்துள்ளார். அதன் பின் இன்னும் சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறிய போனில் பேசிய ஊழியர் பேனைத் துண்டித்துள்ளார்.
அவர் போனை கட் செய்ததும் பிரான்சிஸ் வங்கிக் கணக்கிலிருந்து வரிசையாகப் பணம் கழியத் துவங்கியுள்ளது. முதலில் ரூ49,000 பின்னர் ரூ19,999 பின்னர் 19,998 அடுத்ததாக 9,999 கடைசியாக ரூ1000 என மொத்தம் ரூ99,997 ரூபாய் கழிக்கப்பட்டதாக அவருக்கு மெசேஜ் வந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் பேங்கை தொடர்பு கொண்ட போது தான் அவர் ஏமாற்றப்பட்ட விபரமே தெரியவந்தது.
அதன்பின்னர் மற்றவர்களிடம் நடந்ததைக் கூறிய போது தான் அவர் அழைத்தது பேடிஎம் நிறுவனத்தின் ஃபாஸ்ட்டேக் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணே கிடையாது. ஏதோ மோசடி பேர்வழி தனது எண்ணை பேடிஎம் ஃபாஸ்ட்டேக் வாடிக்கையாளர் சேவை மைய எண் எனக் கூகுளில் பதிவு செய்துள்ளதும், அதன் மூலம் அவர் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரான்ஸிஸ் சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் மோசடி செய்தவரைப் பிடிக்கத் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
வங்கி வாடிக்கையாளர் சேவை மையம், ஏடிஎம் கார்டு சேவை மையம் உள்ளிட்ட பெயர்களில் நடந்து வந்த மோசடி தற்போது ஃபாஸ்ட்டேக் ரீசார்ஜ் வரை வந்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏகப்பட்ட நபர் இப்படியாக ஏமாந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இப்படியாக ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றால் ஃபாஸ்ட்டேக் கார்டை ரீசார்ஜ் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
ஃபாஸ்ட் டேக் கார்டை ரீசார்ஜ் செய்யும் முன்பு நீங்கள் எந்த வங்கியின் மூலம் அந்த கார்டை வாங்கியுள்ளோம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப் மூலமாகத் தான் ரீசார்ஜ் செய்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரங்களில் ஒரே மாதிரியாகத் தோற்றம் கொண்ட போலி ஆப்கள் கூட இருக்கிறது. அதில் ரீசார்ஜ் செய்தால் பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதன் பின்னர் ரீசார்ஜ் செய்யும் போது வாகன பதிவெண்ணைச் சரியாகப் பதிவிட வேண்டும். வாகனப் பதிவு எண் தான் சரியாக உங்கள் வாகனத்திற்கான ஃபாஸ்டேக்கில் ரீசார்ஜ் செய்யும். அதைத் தவறாகப் பதிவு செய்தால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும். ஆனால் உங்கள் ஃபாஸ்ட்டேக் ரீசார்ஜ் ஆகாது. இதனால் நீங்களும் ஏமாற்றமடையலாம். அதனால் வாகன பதிவெண்ணைச் சரியாகப் பதிவிடுங்கள்.
வாடிக்கையாளர் குறித்த தகவல்கள் வாகன பதிவெண்ணைச் சரியாகப் பதிவு செய்த பின் வாடிக்கையாளர் குறித்த சில தகவல்களையும் ரீசார்ஜ் செய்யவேண்டிய தொகையையும் கேட்கும் அதைச் சரியா கொடுத்துவிட்டால் நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு, டெபிட்கார்டு, நெட்பேங்கிங், யூபிஐ என எதன் மூலமாக வேண்டுமானாலும் பண பரிவர்த்தையை செய்யலாம். அதன் பின்னர் அந்த பணம் ரீசார்ஜ் ஆகிவிடும். இதனால் நீங்கள் உங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டை ரீசார்ஜ் செய்யும் போது உஷாராக இருங்கள். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








