இந்தியாவுக்கு கப் வர இவர் முக்கியமான காரணம்! இப்ப இப்படி ஒரு காரை வாங்கிட்டாரா?
இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருப்பவர் அக்ஷர் படேல், 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு எஸ்யூவி ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி வாங்கி தனது வாகன கலெக்ஷனை அப்டேட் செய்துள்ளார். இது அவரது முந்தைய வாகனமான லேண்ட் ரோவர் டிஸ்கவரியை விட இந்த கார் ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட் ஆகும். அகமதாபாத்தில் உள்ள லேண்ட் ரோவர் கார் கோ மோட்டார்ஸ் மூலம் வாங்கிய புதிய வாகனத்தின் படத்துடன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அக்ஷர் படேல் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி கார் விரும்புவது தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் ஒரு மென்மையான கருப்பு நிற மாடலை தேர்ந்தெடுத்தார். இருப்பினும், எஸ்யூவிக்குச் சேர்க்கப்பட்ட உட்புற வடிவமைப்பு ஆப்ஷன் அல்லது ஏதேனும் கஸ்டைமஷேஷன் செய்யப்பட்டுள்ளதா என்ற விவரக்குறிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

முன்பு, 2017 இல், அக்ஷர் படேல் 69 லட்சம் ரூபாய் விலையில் ஒரு பிரீமியம் எஸ்யூவியான லேண்ட் ரோவர் டிஸ்கவரி காரை வாங்கினார். அவர் வைத்திருந்த டிசல் எச்எஸ்இ 3.0 மாடல், அந்த நேரத்தில் 1.3 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வந்தது. படேலின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு ஸ்டோரி மூலம் அவரது புதிய வாகனத் தொகுப்புகளை பற்றி அறிந்தனர்.
ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி இரண்டு தனித்துவமான பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது: ஸ்டாண்டர்ட் வீல் பேஸ் (எஸ்டபிள்யூபி) மற்றும் லாங் வீல் பேஸ் (எல்டபிள்யூபி), 7 சீட்டர் கொண்ட கட்டமைப்பைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனுடன் வருகிறது, எல்டபிள்யூபி பிரபலங்கள் மற்றும் விஐபிகளின் அதிகம் தேர்வு செய்யும் காராகும். இந்த மாடல் அதன் விசாலமான, வசதியான மற்றும் சொகுசான உட்புறத்திற்காக பிரபலமானது. சர்வதேச அளவில் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது என்றாலும், இந்திய மார்கெட்டில் மைல்டு ஹைப்ரிட் (பி400) வேரியன்டை வழங்குகிறது.

வாகனத்தின் இன்ஜின் 394 hp பவர் மற்றும் 550 Nm டார்க் திறனை வழங்கக்கூடிய சக்திவாய்ந்த 3.0L டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் ஆகும், இது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அது 2.5 டன் எடை இருந்தபோதிலும், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி வெறும் 5.7 வினாடிகளில் 0-100 kph வேகத்தை பிக்கப் செய்ய முடியும், மேலும் அதன் அதிகபட்ச வேகம் 242 kph ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூபி 3.5 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகிறது.
ரேஞ்ச் ரோவர்களை விரும்புபவர் அக்ஷர் படேல் மட்டுமல்ல. முகமது சிராஜ் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் தங்கள் கார் கலெக்ஷனில் சமீபத்தில் ரேஞ்ச் ரோவர் வாகனங்களைச் சேர்த்தனர். தோனியின் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி பொது வெளியில் இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவரது பண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு ஃபிளாட்பேடில் இருந்தது சமூகவலைத்தளங்களில் வெளியானது
மற்றொரு கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், 5 கோடி ரூபாய்க்கு மேல் விலை கொண்ட இன்னும் சொகுசு அம்சங்கள் கொண்ட ரேஞ்ச் ரோவர் எஸ்வியைத் தேர்ந்தெடுத்தார். டெண்டுல்கரின் தேர்வு, ஒரு செடோனா ரெட் எஸ்வி, கேப்டன் சீட்கள்கள் மற்றும் முன்னணி ஷோக்கிங் அமைப்பு உட்பட அதிக கஸ்டமைஷேஸன் ஆப்ஷன் உடன் வருகிறது. 3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை ஹைப்ரிட் தொழிற்நுட்பத்துடன் இணைத்து எஸ்வியின் ஹைப்ரிட் பவர் டிரெயின், 542 PS பவர் என்ற பிரம்மிக்க வைக்கும் பவரை வழங்குகிறது.
ரேஞ்ச் ரோவர்களின் சமீபத்திய தலைமுறை, நடிகர்களிலிருந்து விஐபிகளாக இந்திய பிரபலங்களின் பரவலான தொகுப்பை ஈர்த்துள்ளது. ரன்பீர் சிங், ரன்பீர் கபூர் மற்றும் கங்கனா ரனாவத் போன்ற பிரபலங்கள் பலர் மற்றும் பெரும் தொழிலதிபர்களும் இந்த காரை வாங்கியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அக்ஷர் படேல் சமீபத்தில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபியாக மேம்படுத்தியது. குறிப்பாக கிரிக்கெட் சமூகத்தில் இந்தியாவின் பணக்கார மக்களிடையே சொகுசு எஸ்யூவிகளின் நிலையான ஈர்ப்பை எடுத்துக்காட்டுகிறது. செயல்திறன், சொகுசு மற்றும் நிலை ஆகியவற்றின் கலவையுடன், ரேஞ்ச் ரோவர் பிராண்ட் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நபர்கள் மத்தியில் ஒரு விருப்பமான தேர்வாக தொடர்ந்து இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








