நடிகர்கள் ஆசப்பட்ற டார்லிங்கை கோடிகளை கொட்டி குடுத்து சொந்தமாக்கிய பிரபலம்! இப்ப எங்க போனாலும் டார்லிங்கோடதான்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). மோகன்லால் (Mohanlal), ஆமிர் கான் (Aamir Khan), அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan), சஞ்சய் கபூர் (Sanjay Kapoor) மற்றும் அக்ஸய் குமார் (Akshay Kumar) உள்ளிட்ட நட்சத்திரங்களிடம் எல்லாம் டொயோட்டா வெல்ஃபையர் கார் உள்ளது. இந்த வரிசையில் மற்றொரு பாலிவுட் நடிகர் ஒருவர் தற்போது மிகவும் விலை உயர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் காரை வாங்கியுள்ளார். அவர் ஆயுஷ்மான் குரானா (Ayushmann Khurrana) ஆவார்.

தனது புத்தம் புதிய டொயோட்டா வெல்ஃபையர் காரில், மும்பை விமான நிலையத்திற்கு (Mumbai Airport), பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா வந்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

Ayushmann Khurrana Spotted In Toyota Vellfire

ஆயுஷ்மான் குரானா வாங்கியிருப்பது டொயோட்டா வெல்ஃபையர் காரின் விஐபி எக்சிக்யூட்டிவ் லான்ச் (VIP Executive Lounge) வேரியண்ட் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 1.32 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) டொயோட்டா வெல்ஃபையர் விஐபி எக்சிக்யூட்டிவ் லான்ச் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.64 கோடி ரூபாய் வரை வரும். 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கு 14 இன்ச் அளவில் பொழுதுபோக்கு திரை, 14 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் எல்லாம், டொயோட்டா வெல்ஃபையர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

Ayushmann Khurrana

அத்துடன் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 15 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட வசதிகளும் கூட, டொயோட்டா வெல்ஃபையர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், மிகவும் சக்தி வாய்ந்த 2.5 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 193 பிஎஸ் பவர் மற்றும் 240 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசாக பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரைதான், நடிகர் ஆயுஷ்மான் குரானா வாங்கியுள்ளார். தற்போது பெரும்பாலான இடங்களுக்கு அவர் இந்த காரில்தான் பயணம் செய்து கொண்டுள்ளாராம். லெக்ஸஸ் எல்எம் (Lexus LM) போன்ற கார்களுக்கு எல்லாம், டொயோட்டா வெல்ஃபையர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

நடிகர்களின் 'டார்லிங்' என்று டொயோட்டா வெல்ஃபையர் காரை குறிப்பிடலாம். இது சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த விலை உயர்ந்த கார் ஆகும். சொகுசான பயணத்தை வழங்குவதால்தான், நடிகர்கள் பலரும் டொயோட்டா வெல்ஃபையர் காரை விரும்பி வாங்கி கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே நடிகர்களின் 'டார்லிங்' என்ற பெயரை டொயோட்டா வெல்ஃபையர் பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 8, 2025, 19:15 [IST]
English summary
Ayushmann khurrana spotted in toyota vellfire viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+