இப்படி பண்ணா ஈஸியா ரூ2 லட்சத்தை மிச்சம் பண்ணலாம்! இவி வாங்கும் போது இப்படி பிளான் பண்ணுங்க!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பல நிறுவனங்கள் வந்துவிட்டன. மக்கள் மத்தியிலும் எலெக்ட்ரிக் கார்கள் மீதான மோகம் அதிகமாகிவிட்டது.இருந்தாலும் மக்கள் மத்தியில் பேட்டரியின் ஆயுள் குறித்த கவலை இருக்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக பேட்டரி வாரண்டியை வழங்கினாலும் மக்கள் மத்தியில் அது திருப்தியை தராததால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பேட்டரியை சர்வீஸாக வழங்க துவங்கிவிட்டனர்.

தற்போது எம்ஜி நிறுவனத்தின் விண்ட்ஸர் இவி கார், ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய தயாரிப்புகள் பேட்டரியை சர்வீஸ் முறையில் வழங்குகின்றன. இதனால் வாகனத்தின் விலை குறைவாக இருக்கிறது. அதே நேரம் பேட்டரியை பற்றி கவலையும் இல்லை. பேட்டரியை சர்வீஸ் முறையில் பெறுவது லாபமா? அல்லது சொந்தமாக வாங்குவது லாபமா? பார்க்கலாம் வாருங்கள்.

EV Battery Lease vs Own

எம்ஜி விண்டஸர் இவி காரை வாங்கினால் பேட்டரிக்கு குறைந்த பட்ச பிளானில் ஒரு கி.மீக்கு ரூ3.5 செலுத்த வேண்டும். அதே நேரம் குறைந்த பட்சம் மாதம் 1500 கி.மீ ஓட்ட வேண்டும். அப்படி பார்த்தால் ரூ5,250 பேட்டரிக்கான மாத கட்டணமாக செலுத்த வேண்டும். அதை குறைவாக பயன்படுத்தினாலும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆண்டிற்கு ரூ63,000 கட்டணமாக செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இது போக இந்த பேட்டரியை சார்ஜ் போட 38 Kwh பேட்டரிக்கு சார்ஜ் போட்டால் 38 யூனிட் மின்சாரம் செலவாகும். அப்படி யூனிட்டிற்கு ரூ10 என கணக்கிட்டால் கூட ரூ380 கரெண்ட் செலவாகும். இதில் இந்த கார் 331 கி.மீ பயணிக்கும் என கூறப்படுகிறது. அப்படி கணக்கிட்டால் 4-5 முறை சார்ஜ் ஏற்ற வேண்டும். ஒரு முறைக்கு ரூ380 என்றால் 5 முறைக்கு ரூ1900 கரெண்ட் பில் மட்டும் வரும். ஆக மொத்தம் நீங்கள் 1500 கி.மீ பயணிக்க ரூ7150 செலவு செய்ய வேண்டும்.

EV Battery Lease vs Own

இதுவே நீங்கள் சொந்தமாக வாங்கினால் கரெண்ட் பில் மட்டும் செலுத்தினால் போதும் ஆனால் வாகனத்தின் விலை ரூ9.99 லட்சத்திற்கு பதிலாக நீங்கள் ரூ14 லட்சம் செலவு செய்து காரை வாங்க வேண்டும். இப்படி வாங்கினால் பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி வழங்கப்படுகிறது. நாம் உதாரணமாக 8 ஆண்டுகளில் 1.5 லட்சம் கி.மீ ஓட்டுகிறோம் என கணக்கிடுவோம். 1500 கி.மீக்கு ரூ5,250 செலவாகிறது என்றால் நீங்கள் 1.5 லட்சம் கி.மீ பயணிக்க ரூ5.25 லட்சம் பேட்டரிக்காக சப்ஸ்கிரிப்ஷன் மட்டும் செலவிட வேண்டும். ஆனால் சொந்தமாக வாங்கும் போது கூடுதலாக ரூ4 லட்சம் தான் வருகிறது.

இதை பார்க்கும் போது சொந்தமாக வாங்குவது லாபம் போல தோன்றும், ஆனால் நீங்கள் பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் முறையில் வாங்கி பாக்கி உள்ள ரூ4 லட்சத்தை எதிலாவது முதலீடு செய்கிறீர்கள் என்றால் அந்த பணத்திற்கு ஆண்டிற்கு 10சதவீத வட்டி என கணக்கிட்டால் வட்டி மட்டுமே ரூ3.20 லட்சம் வரும். இதில் பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் முறைக்கு செலவாகும் ரூ5.25 லட்சத்தில் ரூ3.20 லட்சத்தை ஈட்டி விட முடியும். அப்படி பார்த்தால் பேட்டரிக்காக நீங்கள் கூடுதலாக ரூ2 லட்சம் தான் செலவு செய்திருப்பீர்கள்.

EV Battery Lease vs Own

அடுத்தாக நாம் ஆக்டிவா இ ஸ்கூட்டரை கணக்கிடுவோம். இந்த ஸ்கூட்டரை பேட்டரி இல்லாமல் மட்டுமே வாங்க முடியும். பேட்டரியை ஸ்வாப்பிங் முறையில் மட்டுமே பயன்படுத்தலாம். இந்த ஸ்கூட்டரை பயன்படுத்த மாதம் 20Kwh பேட்டரிக்கு ரூ678 மாத கட்டணமாக செலவாகிறது. ஆனால் இதில் சார்ஜிங் செலவுகள் இல்லை சார்ஜ் ஏற்றபட்ட பேட்டரியே வழங்கப்படுகிறது.

ஆக்டிவா இ ஸ்கூட்டரில் 1.5Kwh என்ற அளவில் 2 பேட்டரிகள் வழங்கப்படுகிறது. 2 பேட்டரிகளும் முழு சார்ஜில் இருந்தால் 105 கி.மீ வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி பார்த்தால் ஒரு பேட்டரிக்கு 52.5 கி.மீ தான் பயணிக்க முடியும். மாதம் ரூ678 கட்டணம் செலுத்தினால் 20Kwh பவருக்கு 13 முறை பேட்டரியை மாற்ற முடியும்.

ஒரு முறைக்கு 52.5 கி.மீ என்றால் 682 கி.மீ பயணிக்க முடியும். சார்ஜ் உடன் சேர்த்து பேட்டரி சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் கி.மீக்கு கிட்டத்தட்ட ஒரு ரூபாய் தான் வருகிறது. இந்த ஸ்கூட்டரில் பேட்டரி ஆப்ஷன் உடன் வாங்க முடியாது என்பதால் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரில் 3Kwh பேட்டரி பேக் கொண்ட வாகனத்தை வாங்கினால் அதற்கு ரூ1.09 லட்சம் விலையாக வருகிறது. இது பேட்டரி விலையும் சேர்த்து. ஆனால் ஆக்டிவா இ ஸ்கூட்டர் பேட்டரி இல்லாமல் ரூ1.17 லட்சம் விலையாகிறது.

ஆக்டிவா இ மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய இரண்டு வாகனங்களிலும் அம்சங்கள் வேறு பட்டாலும் கிட்டதட்ட ஒரே விதமான பயன்பாட்டு வாகனம் என்பதால் ஒப்பிட்டு பார்த்தால் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் விலை குறைவாக உள்ளது. அதுவும் பேட்டரியுடன் கிடைக்கிறது என்பதால் இது தான் லாபமாக இருக்கும்.

இந்த இரண்டு வாகனங்களை வைத்து பார்க்கும் போது பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் முறைக்கும் சொந்தமாக பேட்டரி வாங்கும் முறைக்கும் ஒப்பிட்டு பார்த்தால் சொந்தமாக பேட்டரியை வாங்குவது தான் லாபமாக இருக்கும். பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் முறையில் பேட்டரிக்கான ஆயுள் காலம் இல்லை என்பதால் இந்த வாகனத்தை நீண்ட காலம் பயன்படுத்த முடியும்.

ஆனால் வாரண்டி காலத்திற்குள் பயன்படுத்தினால் சொந்தமாக பேட்டரியை வாங்குவது தான் தற்போதைய சூழ்நிலையில் லாபமாக உள்ளது. ஆனால் உங்கள் பயன்பாடு வேறு மாதிரியாக இருக்கும் குறுகிய காலத்திற்கு ஒரு முறை வாகனத்தை மாற்றும் வழக்கம் கொண்டவராக இருந்தால் நீங்கள் பேட்டரியை சர்வீஸ் முறையில் பெறுவது வாகனத்தின் முதற்கட்ட செலவை குறைக்க உதவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்கள் பேட்டரியை சொந்தமாக வாங்குவதா அல்லது சர்வீஸ் முறையில் எடுப்பதா என்பதை உங்கள் பயன்பாட்டை பொருத்து தேர்வு செய்வது நல்லது. நீண்டகாலம் வாகனத்தை இயக்க வேண்டும் அல்லது உங்களுக்கு முதலில் அதிக பணத்தை முதலீடு செய்ய முடியாது என கருதினால் பேட்டரியை சர்வீஸ் முறையில் எடுக்கலாம். நீங்கள் புத்தியசாலியாக இருந்தால் பேட்டரியை சர்வீஸ் முறையில் எடுத்து அதற்கான பணத்தை முதலீடு செய்து பேட்டரிக்கான செலவை குறைக்கும் முடிவை தான் எடுப்பீர்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 8, 2025, 21:55 [IST]
English summary
Baas or own a battery which is the best way to save money
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X