ரூ. 7.5 கோடி காரை வாங்கி குவிக்கும் சென்னை தொழிலதிபர்.. இவரு என்ன தொழிலை செய்யுறாரு தெரியுமா?..
சென்னையைச் சேர்ந்த முன்னணி கட்டுமான நிறுவனங்களில் பாஷ்யம் குழுமம் (Baashyaam Constructions)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் உரிமையாளரான பாஷ்யம் யுவராஜ், உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் கொள்முதல் வாயிலாக அவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே (Rolls Royce Spectre) ஆடம்பர காரையே வாங்கி இருக்கின்றார். இந்த காரை தற்போது சென்னையின் டிராஃபிக் மிகுந்த சாலையில் வலம் வரும் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இது அவர்களின் இரண்டாவது ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல் ஆகும். இவர்களிடத்தில் ஏற்கனவே ஓர் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே கார் மாடல் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. சென்ற ஆண்டின் இறுதியில் ஓர் ஸ்பெக்ட்ரேவை வாங்கியிருந்த நிலையிலேயே தற்போது மற்றுமொரு ஸ்பெக்ட்ரேவை அவர்கள் வாங்கியிருக்கின்றனர்.

கடந்த ஆண்டில் இந்த காரை வாங்கியதன் வாயிலாக இந்தியாவின் முதல் ஸ்பெக்ட்ரே சொகுசு காரின் உரிமையாளர் என்கிற புகழுக்கு உரியவராக பாஷ்யம் யுவராஜ் மாறினார். இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னரே அவர்கள் இந்த காரை வாங்கிவிட்டனர் என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், பாஷ்யம் யுவராஜ் ஸ்பெக்ட்ரே காரை வாங்கிய சில மாதங்களுக்கு பின்னரே அக்காரை ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நடப்பு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி அன்றே ஸ்பெக்ட்ரே-வை ரோல்ஸ் ராய்ஸ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இதற்கு பின்னரே இந்தியாவின் பிற முக்கிய நபர்கள் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே காரை வாங்கினர். யோஹன் பூனவல்லா, நடிகர் சிரஞ்ஜீவி மற்றும் ராம் சரண் உள்ளிட்டோரே இந்த கார் மாடலை வாங்கினார்கள் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே உரிமையாளர்கள் மீண்டும் இரண்டாவது யூனிட்டாக ஸ்பெக்ட்ரே-வை வாங்கி இருக்கின்றனர்.
இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 7.5 கோடி ஆகும். இது வெறஉம் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 520 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மூன்று டன்கள் கொண்ட இந்த கார் இவ்வளவு மைலேஜ் தரும் என்பதுதான் பலருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக உள்ளது. இத்துடன் இந்த காரில் 593 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவெறஉம் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த கார் ஆற்றலை உருவாக்குவதிலும், ரேஞ்ச் தருவதில் மட்டுமே சிறந்த வாகனம் அல்ல. சொகுசு அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் மிக சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், பிரீமியம் லெதரைக் கொண்ட இருக்கை, உள்பக்க மேற்கூரையில் நட்சத்திரங்களை பிரதிபலிக்கக் கூடிய லைட்டுகள், மரத்தால் அலங்கரிக்கப்பட்ட உட்பக்கம், பன்முக ஜோன்கள் கொண்ட க்ளைமேட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.
இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் பயணிக்கும்போது வெளிப்புறத்தில் அரங்கேறும் எந்தவொரு சத்தமும் உள்பக்கம் கேட்காது. ஆகையால் மிக அமைதியான டிராவல் அனுபவம் இந்த காரில் கிடைக்கும். ஏற்கனவே அமைதியாக பயணிப்பதற்கு பெயர்போன வாகனங்களாக மின்சார வாகனங்கள் காட்சியளிக்கன்றன. இதை இன்னும் அமைதியானதாக ரோல்ஸ் ராய்ஸ் மாற்றி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. விலை குறைவான மின்சார வாகனங்களுக்கு மட்டுமல்ல அதிக விலைக் கொண்ட லக்சூரி எலெக்ட்ரிக் கார்களுக்கும் சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே பாஷ்யம் யுவராஜ்-இன் செயல் அமைந்து உள்ளது.


Click it and Unblock the Notifications








