கார் ரேசர்களுக்கே டஃப் கொடுக்கும் சாமியாரின் டிரைவிங்! இவர் ஓட்டும்போது பார்க்க இன்னும் ஈசியா இருக்கு!!

பதாஞ்சலி (Patanjali) என்றாலே உடனே நம் நினைவிற்கு வருவது பாபா ராம்தேவ் (Baba Ramdev)-ஐ தான். பதாஞ்சலி நிறுவனத்தின் பிராண்ட் தூதராக பாபா ராம்தேவ் விளங்குகிறார். பதாஞ்சலி நிறுவனத்தை வளர்க்கும் அதேநேரத்தில், புது, புது கார் & பைக்குகளை வாங்கி பயன்படுத்துவதையும் பாபா ராம்தேவ் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பாபா ராம்தேவ் ஓட்டியுள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வெற்றிக்கரமான வாகனமாக தார் ராக்ஸ் வாகனத்தை சொல்லலாம். அந்த அளவிற்கு மார்க்கெட்டில் இந்த வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. 5 கதவுகளை கொண்ட வாகனமாக தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் 3 கதவுகளை கொண்ட தார் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தது.

baba ramdev drives mahindra thar

3-கதவு தாருக்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்ததால், எதிர்பார்த்ததை போல் 5-கதவு தார் ராக்ஸ் வாகனத்தை பலத்தரப்பட்ட மக்கள் வாங்கி வருகின்றனர். அவ்வாறு இந்த மஹிந்திரா வாகனத்தை வாங்கிய பாபா ராம்தேவ்-இன் பக்தர் ஒருவர் தனது புதிய வாகனத்தை பாபா ராம்தேவ்விடம் காட்டி ஆசி பெற அவரது ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அப்போது தார் ராக்ஸ் வாகனத்தை பார்த்த பாபா ராம்தேவ், வாகனத்திற்கு உள்ளேயும் சென்று பார்த்துள்ளார்.

பின்னர், வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என அவருக்கு ஆசை வந்துள்ளது. அதனை தொடர்ந்து, டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஆசிரம வளாகத்திற்குள் ஓர் சிறிய ரவுண்ட் சென்று வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. பாபா ராம்தேவ், பதாஞ்சலி நிறுவனத்தின் பிராண்ட் தூதர் மட்டுமில்லை, இந்தியாவின் மிக முக்கியமான யோகா குருக்களில் ஒருவர்.

baba ramdev drives mahindra thar

இத்தகைய மனிதர் தனது புதிய வாகனத்தை ஓட்டி பார்த்தது நிச்சயமாக அவரது பக்தருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். வாகனத்தை ஓட்டி பார்த்த பின்னர், அங்கிருந்த சிலர் பாபா ராம்தேவ்வின் கால்களை தொட்டு வணங்குவதை வீடியோவில் காணலாம். ஆக... இது பாபா ராம்தேவ்வின் தார் ராக்ஸ் வாகனம் கிடையாதா? என கேட்டால், இது அவருடையது இல்லை. ஆனால், பாபா ராம்தேவ்விடம் இதைவிட விலையுயர்ந்த வாகனங்கள் பல உள்ளன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பாபா ராம்தேவ்விடம் விலைமிக்க லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 கார் ஒன்று உள்ளது. ரூ.1.5 கோடி மதிப்பிலான இந்த டிஃபெண்டர் எஸ்யூவி வாகனத்தை கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாபா ராம்தேவ் வாங்கியிருந்தார். செடோனா சிவப்பு நிறத்திலான இந்த வாகனத்தில் சிலமுறை பாபா ராம்தேவ் பொது வெளியில் காட்சி தந்துள்ளார்.

baba ramdev drives mahindra thar

கடந்த ஆண்டில் வெளியாகி இருந்த வீடியோ ஒன்றில், தற்போது தார் ராக்ஸை வாகனத்தை ஓட்டியதை போல், தனது புதிய டிஃபெண்டர் 130 காரையும் பாபா ராம்தேவ் ஓட்டுவதை பார்க்க முடிந்தது. இந்தியாவில் 90, 110, 130 என மொத்தம் 3 விதமான டிஃபெண்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகையில் பார்த்தால், டிஃபெண்டர் வாகனத்தின் நீளமான வெர்சனாக டிஃபெண்டர் 130 விளங்குகிறது.

டிஃபெண்டர் 130 வாகனம் இந்தியாவில் மொத்தம் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. 3.0 லிட்டர் பெட்ரோல் பி400 என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் டீசல் டி300 என்ஜின் என்பன அந்த 2 என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இதில் பாபா ராம்தேவ் எந்த என்ஜின் உடன் டிஃபெண்டர் 130 வாகனத்தை வைத்துள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை. இரு என்ஜின்களுடனும் மைல்ட்-ஹைப்ரீட் டெக்னாலஜி வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு விலையுயர்ந்த காரை வைத்திருந்தாலும், பக்தர் கொண்டுவந்த வாகனத்திற்கு ஆசி வழங்கியதோடு, அதனை ஆர்வமாக ஓட்டி பார்த்தது பாபா ராம்தேவ்வின் மனதை காட்டுகிறது. மேலும், கார்கள் மீதான அவரது ஆர்வத்தையும் இது காட்டுகிறது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் அளவிற்கு இல்லையென்றாலும், மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனமும் ஓட்டுவதற்கு தரமான வாகனமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2024, 11:43 [IST]
English summary
Baba ramdev drives mahindra thar roxx 5 door inside of his ashram check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X