விற்பனையில் இருந்து நீக்கப்பட்ட காரை வாங்கிய பாபர் அசாம்! காரின் விலையை கேட்டா மயங்கியே விழுந்திடுவீங்க!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் தற்போது செகண்ட் ஹாண்டில் லம்போர்கினி அவென்டேட்டர் என்ற ரூபாய் 6.25 கோடி மதிப்பிலா ன காரை சொந்தமாக வாங்கி உள்ளார். இவர் அந்த காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் சமூக வலைதளங்களில் இந்த காரின் நிறத்தை கிண்டல் செய்து வருகின்றனர். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் பாபர் அசாம். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமாக விளையாடியதன் காரணமாக பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாபர் அசாம் என்பவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக பார்க்கப்படுகிறார். உலக அளவில் பாபர் அசாம் ஒரு முக்கியமான கிரிக்கெட் வீரராக இருக்கிறார்.

இந்நிலையில் பாபர் அசாம் தற்போது லம்போர்கினி அவென்டேட்டர் காரின் அருகே நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த காரை அவர் சொந்தமாக வாங்கி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஒரு சில வாரங்களிலேயே இவர் சொந்தமாக இந்த காரை வாங்கி உள்ளார்.
புகைப்படத்தில் இருக்கும் கார் லம்போர்கினி அவென்டேட்டர் காரில் எந்த வேரியன்ட் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. இந்த கார் கஸ்டமைஸ்டு கார் என்பதால் இந்த காரை கஸ்டமைஸ்டு செய்து வாங்கியதற்கு ஏற்ப இதன் விலை மாறுபடும்.இந்த அவென்டேட்டர் காரை கடந்த 2022-ம் ஆண்டு விற்பனையிலிருந்து நீக்கிவிட்டது. கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் 10 ஆண்டுகள் சிறப்பாக விற்பனையானது.

விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்ட காரை கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் எப்படி வாங்கினார் என நீங்கள் ஆச்சரியப்படலாம். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை அவர் இந்த காரை செகண்ட் ஹேண்டில் தான் வாங்கியுள்ளார். புதிய காராக அவர் வாங்கவில்லை. அவர் வாங்கிய இந்த கார் பர்பிள் நிறத்தில் இருக்கிறது. வட இந்தியாவில் டார்ஸான் என்ற ஒரு திரைப்படம் வெளியானது. அதில் இந்த பர்பிள் நிற கார் இடம் பெறும்.
இதை வைத்து வட இந்திய மக்கள் பலர் சமூக வலைதளங்களில் பாபர் அசாம் வாங்கிய காரை டார்ஸான் கார் என கிண்டல் செய்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் இந்த லம்போர்கினி அவென்டேட்டர் காரை அவரது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காரை அவர் சாலையில் ஓட்டி செல்லும் புகைப்படங்கள் வீடியோக்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

கிரிக்கெட் வீரர் பாபர் அசாமிடம் இந்த கார் மட்டுமல்ல இவரிடம் ஆடி ஏ5, ஆடி இ-டிரான் ஜிடி மற்றும் ஹுண்டாய் சொனாட்டா ஆகிய கார்கள் இருக்கிறது. இவர் வாங்கிய ஆடி கார் தான் இவர் வாங்கிய முதல் சொகுசு காராகும். இதைத்தொடர்ந்து வெள்ளை நிற இ-டிரான் ஜிடி காரை இவர் குடும்பத்தினர் இவருக்கு பரிசாக அளித்தனர். இந்த ஆண்டு துவக்கத்தில் தான் இந்த காரும் இவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இது போக கூடுதலாக பாபர் அசாமிடம் சீன நிறுவனக்காரன பிஏஐசிபிஜே40 என்ற எஸ்யூவி கார் இருக்கிறது. இந்த கார் பார்ப்பதற்கு மஹிந்திரா தார் ஆகிய கார்களை போல இருக்கிறது. இப்படியாக ஏகப்பட்ட கார் கலெக்ஷனை கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் வைத்துள்ளார். பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் இப்படியான மிகப்பெரிய கார் கலெக்ஷனை வைத்திருப்பது சாதாரண விஷயம் தான்.

இவர் வாங்கிய லம்போர்கினி அவென்டேட்டர் காரைப் பொறுத்தவரை கடந்த 2012 ஆம் ஆண்டு லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்து வந்த முர்ஷிலாகோ என்ற காரை நிறுத்திவிட்டு இந்த அவென்டேட்டர் காரை அறிமுகப்படுத்தியது. முற்றிலுமாக புதிய வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புற தோற்றத்துடன் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த காரின் இஞ்சினை பொருத்தவரை 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதை இன்ஜின் தான் முர்ஷிலாகோ காரிலும் இருந்தது. அவென்டேட்டர் கார் பல்வேறு முறை பேஸ்லிஃப்ட் செய்யப்பட்டு பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டன. இதில் பல லிமிடெட் எடிசன் கார்களும் வந்தன. இந்நிலையில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த கார் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் நிறுத்தப்பட்ட நிலையில் இதற்கு அடுத்த காராக ரிவோல்டோ என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியது இந்த கார் முழு ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காராக லம்போகினி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ரிவோல்டோ காரை இந்தியாவில் பலர் வாங்கிய முயற்சி செய்து வருகின்றனர், பலர் வாங்கியும் விட்டனர். தற்போது லம்போர்கினி ரசிகர்கள் மத்தியில் இந்த ரிவோல்டோ கார் மிகப்பெரிய பேச்சாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications









