1000 கோடி ரூபா கலெக்சனை எடுத்து கொடுத்தவர் இந்த கார்களிலா பயணம் மேற்கொண்டு வராரு.. 3 கோடி ரூபா காரும் உண்டு!

இளம் வயதிலேயே மாஸ் ஹீரோக்களை வைத்து படம் எடுத்து, பெரும் கலெக்சனை ஈட்டிய இயக்குநராக அட்லீ அறியப்படுகின்றார். தமிழ், இந்தி என பான் இந்தியா அளவில் இவருடைய கால் தடம் பதிக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய ஓர் இயக்குநர் மிகப் பெரிய சொகுசு கார் காதலர் என்பது உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும். இந்த பதிவில் அட்லீ-யின் ஆடம்பர கார் கலெக்சனைப் பற்றிய விபரங்களையே பார்க்க இருக்கின்றோம். அட்லீ குறைவான எண்ணிக்கையிலேயே ஆடம்பர கார்களை வைத்திருக்கின்றார். ஆனால், அவை அனைத்தும் பேர் சொல்லும் பிள்ளைகளைப் போன்றவை ஆகும்.

அப்படி என்ன கார் மாடல்களை இயக்குநர் அட்லீ வைத்திருக்கின்றார் என்றுதானே கேக்குறீங்க. வாங்க அதுகுறித்த விரிவான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம். குறிப்பாக, இந்த பதிவில் அவரிடத்தில் இருப்பதிலேயே மிக மிக விலை உயர்ந்த மற்றும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த கார் மாடல்களைப் பற்றி மட்டுமே பார்க்க இருக்கின்றோம்.

Car collection of director atlee kumar

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி (Range Rover Autobiography): அட்லீ வைத்திருக்கும் மிக மிக காஸ்ட்லியான கார் மாடல் இதுவாகும். இவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய பணக்காரர்களின் பிரியமான சொகுசு கார் மாடலாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இந்தியாவின் முன்னணி பிரபலங்கள் பலரும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

மிக மிக அதிக சொகுசு மற்றும் நவீன கால சிறப்பம்சங்களைத் தாங்கி இருக்கும் ஓர் கார் மாடலாக இது இருப்பதனாலேயே பலரின் மனம் கவர்ந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. மசாஜ், ஹீட் மற்றும் கூல் ஆகும் திறன் கொண்ட இருக்கை, மெரிடியன் பிரீமியம் சவுண்டு சிஸ்டம், டிஜிட்டல் ஆடியோ பிராட்காஸ்ட், 4 ஜோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும்.

இதுமட்டுமில்லைங்க, குரல் கட்டளையை ஏற்கும் வசதி, ஹெட்-அப் திரை, டிரைவருக்கான டிஜிட்டல் திரை, பிவி ப்ரோ வசதிக் கொண்ட 13.2 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் இடம் பெற்றிருக்கும். இந்த அம்சங்களே கார் காதலர்களையும், பணக்காரர்களையும் அதன் பக்கம் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3.06 கோடிக்கும் அதிகம் ஆகும்.

பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7): ஆயிரம் கோடி ரூபாய் கலெக்சனை ஈட்டிய அட்லீ, தன்னுடைய பயணங்களுக்காக இந்த அதிநவீன மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காரையும் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரில் சிறப்பம்சங்கள் எக்கசக்கமாக இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், 31.3 அங்குல 8கே வசதிக் கொண்ட டிவி போன்ற எல்லாம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Atlee kumar bmw i7

இதுமட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 591 கிமீ முதல் 625 கிமீ வரையில் ரேஞ்ச் தரும். இந்த சூப்பரான ரேஞ்ச் திறனுக்காக 101.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து எடுத்த 'தெறி' படத்தை இந்தியில் இயக்கி இருக்கின்றார். பேபி ஜான் என்கிற பெயரிலேயே இந்த படம் திரைக்கு வந்திருக்கன்றது. வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் முதல் முறையாக இணைந்திருக்கின்றனர். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறவில்லை. போட்ட பணம் அனைத்தும் நஷ்டமாகிவிடும் என அஞ்சப்படுகின்றது. இந்தியில் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்தவருக்கா இந்த நிலைமை என பலரையும் இந்த தகவல் கவலையடையச் செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 30, 2024, 5:00 [IST]
English summary
Baby john director atlee s luxurious car collection range rover autobiography and bmw i7 highlights
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+