புதிய பொறுப்பு ஏற்ற கையோட கோடி ரூபாயில் கார் வாங்கிய பிரபலம்! மனைவி உடன் நேரில் ஷோரூமுக்கு போய்ட்டாரு
லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, டிஃபெண்டர் (Defender) ஆகும். கட்டுமஸ்தான உடலமைப்பில், பிரம்மாண்டமான லக்சரி எஸ்யூவி காராக டிஃபெண்டர் உருவாக்கப்படுகிறது. இதனாலேயே டிஃபெண்டர் கார்களை இந்தியாவில் செல்வந்தர்கள் பலர் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். அந்த வகையில், பிரபல மருத்துவமனை ஒன்றின் சிஇஓ ஆக இருப்பவர் புதியதாக டிஃபெண்டர் கார் ஒன்றை மனைவி உடன் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி பெற்றுள்ளார். யார் இந்த சிஇஓ என்பதையும், அவர் வாங்கியுள்ள புதிய டிஃபெண்டர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பேபி மெமரீயல் மருத்துவமனை (Baby Memorial Hospital)-இன் சிஇஓ ஆக இருப்பவர், ஹரிஷ் மனியன் (Harish Manian) ஆவார். கேரளாவை சேர்ந்த பேபி மெமரீயல் மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில்தான் ஹரிஷ் மனியனை சிஇஓ ஆக நியமித்தது. அதற்கு முன்பு வரையில், சென்னையை சேர்ந்த எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்தார்.

புதிய நிறுவனத்தில் மிக பெரிய பொறுப்பை ஏற்றிற்கும் ஹரிஷ் மனியன், அதே சந்தோஷத்தில் விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக தொழிலதிபர்கள் அடுத்தடுத்து விலையுயர்ந்த கார்களை வாங்குவதை நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட, முன்னணி கேரள நகைக்கடைகளுள் ஒன்றான பீமா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குனரான சுஹாஸ் புதியதாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியிருந்தார்.
அதனை தொடர்ந்து, பேபி மெமரீயல் மருத்துவமனையின் சிஇஓ ஹரிஷ் மனியன் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார். ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் இவை இரண்டுமே லேண்ட் ரோவர் நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகள் ஆகும். அதாவது, உலகளவில் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்படும் கார்கள் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் ஆகும்.

இத்தகைய கார்களுள் ஒன்றான டிஃபெண்டரை ஹரிஷ் மனியன் மனைவி உடன் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி பெறும் படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளன. பேபி மெமரீயல் மருத்துவமனையின் சிஇஓ ஹரிஷ் மனியன், சாண்டோரினி கருப்பு நிறத்தில் அவரது புதிய டிஃபெண்டர் காரை வாங்கி உள்ளார்.
இது இல்லாமல், பாஞ்சியா க்ரீன், செடோனா சிவப்பு, டாஸ்மன் ப்ளூ என ஏகப்பட்ட கலர் ஆப்ஷன்களிலும் டிஃபெண்டர் விற்பனை செய்யப்படுகிறது. டர்போ பெட்ரோல், பிளக்-இன் ஹைப்ரீட், டீசல் மற்றும் வி8 பெட்ரோல் என 4 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் டிஃபெண்டர் காரை டீசல் என்ஜின் உடன் ஹரிஷ் மனியன் வாங்கியுள்ளார்.

இதன்படி, ஹரிஷ் மனியனின் டிஃபெண்டரில் 3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும். அதிகப்பட்சமாக 349 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டீசல் என்ஜின் உடன் டிஃபெண்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.25 கோடியில் இருந்து ரூ.1.57 கோடி வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் கார்களை போலவே, டிஃபெண்டர் கார்களும் அதன் கம்பீரமான தோற்றத்தினால் மக்களை வெகுவாக கவரக்கூடியவைகளாக உள்ளன. ஆதலால், அத்தகைய டிஃபெண்டர் கார்களுள் ஒன்றை ஒரு மிக பெரும் மருத்துவ சாம்ராஜ்ஜியத்தின் சிஇஓ வாங்கியிருப்பதில் பெரியதாக ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications









