வரலாற்றில் இன்று: குவாட்ரிசைக்கிளை டெஸ்ட் செய்த ஹென்றி ஃபோர்டு!

By Saravana

பணக்காரர்களுக்கான ஆடம்பர பொருளாக இருந்த கார்களை சாதாரண மக்களுக்கும் கிடைக்க வழி செய்த ஹென்றி ஃபோர்டு முதல்முறையாக ஒரு குவாட்ரிசைக்கிளைத்தான் உருவாக்கினார். கடந்த 1896ம் ஆண்டு இதே நாளில்தான் அந்த காரை அவர் சாலை ஓட்டம் நடத்தி பரிசோதனை செய்தார்.

உலகிலேயே முதல் முதலாக ஒரு மோட்டார் வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்த நிகழ்வாக இதனை கருதுகின்றனர். 1903ம் ஆண்டு ஃபோர்டு கார் நிறுவனம் உருவாக வித்திட்ட இந்த ஃபோர்டு குவாட்ரிசைக்கிளில் எத்தனாலை எரிபொருளாக கொண்டு இயங்கும் 2 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது.

Ford Quadricycle

அதிகபட்சமாக 4 குதிரைசக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த எஞ்சின் 2 விதமான வேகத்தை தரவல்ல கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. முதல் கியரில் மணிக்கு 16 கிமீ வேகம் வரையிலும், இரண்டாவது கியரில் அதிகபட்சமாக மணிக்கு 32 கிமீ வேகம் வரையிலும் செல்லத்தக்கதாக இருந்தது இந்த ஃபோர்டு குவாட்ரிசைக்கிள்.

சோதனைகளின்போது ஒரு முறை அதிகபட்சமான மணிக்கு 32 கிமீ வேகத்தை ஹென்றி ஃபோர்டு தொட்டதாக கூறப்படுகிறது. ஆட்டோமொபைல் உலகில் பல மாற்றங்களை புகுத்திய ஹென்றி ஃபோர்டுக்கு கார் நிறுவனத்தை துவங்குவதற்கு இதே நாளில் அவர் செய்த டெஸ்ட் டிரைவ்தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
On this very day, way back in 1896, Henry Ford first drove his remarkable creation, the Ford Quadricycle. Could this have been the world's first road test of a car? No doubt Henry Ford would have put all us motoring journalists in our place with his feedback of the unique vehicle, but that's another story.
Story first published: Thursday, June 4, 2015, 17:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X