எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு என தனி தயாரிப்பு ஆலையை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காகவே தனி ஓர் தயாரிப்பு ஆலையை கட்டமைக்க இருப்பதாக பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்திருக்கின்றது. பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிறுவனம் ஆகும். சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் புத்தம் புதிய உற்பத்தி ஆலை உருவாக்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

இந்த புதிய ஆலை புனேவின் அக்ருடி பகுதியிலேயே கட்டமைக்கப்பட இருக்கின்றது. இந்த ஆலை ஆண்டிற்கு 5 லட்சம் வாகன உற்பத்தி எனும் திறனில் இயங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆலையை உருவாக்கும் பணிகள் தீவிரம் செய்யப்பட்டிருப்பதால் வரும் 2022 ஜூன் மாதத்திற்குள் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் முதல் மின்சார வாகனம் விற்பனைக்காக வெளியேற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

மேலும், 800 புதிய வேலை வாய்ப்பையும் இந்த ஆலை ஏற்படுத்திக் கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் இ-வாகனங்கள் உள் மற்றும் வெளிநாடுகளில் விற்பனைக்கு வழங்கப்படும். அதாவது, இந்தியா மட்டும் வெளிநாடுகளுக்கான இ-வாகனங்களை இங்கு வைத்தே பஜாஜ் ஆட்டோ தயாரிக்க இருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

அதேவேலையில் இந்த ஆலையில் அதிநவீன எந்திரங்கள் உற்பத்தி பணிக்காக பயன்படுத்தப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதுகுறித்து பஜாஜ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, லாஜிஸ்டிக், மெட்டீரியல்களை கையாளுதல், ஃபேப்ரிகேஷேன், பெயிண்டிங், வாகன அசெம்பிளி மற்றும் குவாலிட்டி செக் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிநவீன ரோபோக்கள் மற்றும் தானியங்கி உற்பத்தி கருவிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

அதிகபட்ச உற்பத்தியை மேற்கொள்ளும் பொருட்டு இந்த யுக்தியை பஜாஜ் கையாள இருக்கின்றது. அதே நேரத்தில் இந்த ஆலையில் 800க்கும் அதிகமானோர் நிச்சயம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்திருக்கின்றது. இந்த புதிய ஆலை அரை மில்லியன் சதுர அடியில் உருவாகி வருவதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

பஜாஜ் ஆட்டோ இந்தியாவின் மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஏற்றுமதியாளர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் உலகின் மிகப் பெரிய முச்சக்கர வண்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் இருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இது 1 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனத்தைக் கொண்ட நிறுவனம் ஆகும். மேலும், உலகின் மிகவும் மதிப்பு மிக்க இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனமாகவும் விளங்குகின்றது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

பஜாஜ் நிறுவனம் தற்போது சேத்தக் (Bajaj Chetak) எனும் மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் தர இ-ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியர்கள் மத்தியில் இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

பஜாஜ் ஆட்டோ நீண்ட வருடங்களுக்கு தயாரித்த முதல் ஸ்கூட்டராக இது இருக்கின்றது. இது தற்போது இந்தியாவில் ரூ. 1.41 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் இரு விதமான தேர்வுகளை பஜாஜ் நிறுவனம் வழங்குகின்றது. அர்பன் மற்றும் பிரீமியம் ஆகிய இரு தேர்வுகளே சேத்தக் இ-ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரீமியம் தர அம்சங்களான ரிவர்ஸ் அசிஸ்ட் மோட், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதி, இன்டலிஜென்ட் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் (ஐபிஎம்எஸ்), யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், எல்இடி மின் விளக்குகள் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

இத்துடன், அதிகபட்ச ரேஞ்ஜை வழங்கும் வகையில் 3kWh IP67 தர லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். இப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக தனி ஆலை அமைக்கும் பஜாஜ்! இங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுது தெரியுமா?

இதுமாதிரியான சிறப்புகள் வாய்ந்த பேட்டரியை உற்பத்தி செய்யும் நோக்கிலேயே பஜாஜ் நிறுவனம் தனி ஒரு ஆலையை இந்தியாவில் அமைக்க இருக்கின்றது. நிறுவனம் மிக விரைவில் விலை குறைவான இ-சக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதுமாதிரியான எதிர்கால வாகனங்கள் அனைத்தும் இங்கு வைத்தே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

Most Read Articles
English summary
Bajaj auto announces new ev manufacturing unit in india
Story first published: Wednesday, December 29, 2021, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X