194 கி.மீ வேகத்தில் பறந்த டொமினார் - 400 எப்படி சாத்தியம்?

சமீபத்தில் சமூக வலைதளங்களில் டொமினார் - 400 பைக் ஒன்று 194 கி.மீ., வேகத்தில் செல்லும் காட்சி வெளியாகி வைரலாக பரவியது. 194 கி.மீ., வேகம் எப்படி சாத்தியமானது.?

By Balasubramanian

சமீபத்தில் சமூக வலைதளங்களில் டொமினார் - 400 பைக் ஒன்று 194 கி.மீ., வேகத்தில் செல்லும் காட்சி வெளியாகி வைரலாக பரவியது. பஜாஜ் நிறுவனம் 148 கி.மீ.,தான் டொமினார்- 400 பைக்கின் அதிகபட்ச வேகம் என அறிவித்துள்ள நிலையில் 194 கி.மீ., வேகம் எப்படி சாத்தியமானது.?

194 கி.மீ வேகத்தில் பறந்த டொமினார் -400 எப்படி சாத்தியம்?

சமூகவலைதளங்களில்வெளியான வீடியோவை கீழே காணலாம்.

பஜாஜ் டொமினோர் பைக் 373 சிசி. ஒரு சிலிண்டர் இன்ஜின் பொறுத்தப்பட்டு, 35 பி.எச்.பி. மற்றும் 35 என்.எம். டார்க் திறனை வெளிபடுத்தக்கூடியது. இது அதிக திறன் தான் என்றாலும். இது ஈ.சி.யூ., எனும் இன்ஜின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் கருவி பைக்கை அவ்வளவு வேகத்தில் செல்லவிடாது. மேலும் பைக்கில் உள்ள ரெவ் லிமிட்டர் கருவியும் நாம் அதிக ரேஸ் செய்தாலும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும்.

194 கி.மீ வேகத்தில் பறந்த டொமினார் -400 எப்படி சாத்தியம்?

பைக்கின் வேகம் அதிகபட்சம் 148 என்றாலும் மலைகளில் இருந்து இறங்கும் போதும், பெரிய இறக்கங்களிலும் காற்றின் வேகம் காரணமாக வாகனத்தின் வேகம் மேலும் அதிகரிக்கலாம். அப்படி அதிகரித்தாலும் 160-165 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல வாய்ப்பில்லை.

194 கி.மீ வேகத்தில் பறந்த டொமினார் -400 எப்படி சாத்தியம்?

ஆனால் வாகனத்தின் ரெவ் லிமிட்டர், ஈ.எம்.யூவில் மாற்றம் செய்தால் இந்த வேகம் சாத்தப்படலாம். ஆனால் அது இதுவரை சோதிக்கப்படாததால் உறுதியாக கூறமுடியாது. ஆனால் ஈ.சி.யூ., மற்றும் ரெவ் லிமிட்டர்ரில் மாற்றம் செய்வது இன்ஜினுக்கு நல்லதல்ல அதை நாங்கள் பரிந்துரைக்கவுமில்லை.

194 கி.மீ வேகத்தில் பறந்த டொமினார் -400 எப்படி சாத்தியம்?

குறிப்பிட்ட இந்த வீடியோவில் பைக் ஈ.எம்.யூ அல்லது ரெவ் லிமிட்டரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். அல்லது ஸ்பிடோமீட்டரில் பழுதுகள் ஏதேனும் இருக்கலாம் இதனால் வண்டியில் வேகத்தில் 194 கி.மீ. வரை வேகம் காண்பிக்கிறது. கம்பெனியில் டிசைனில் மாற்றம் செய்யப்படாத, ஸ்பீடோ மீட்டரில் பழுது இல்லாத வாகனத்தில் 194 கி.மீ., சாத்தியமேயில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bajaj Dominar 400 Hits 194km/h With Stock ECU — Is It Possible?.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X