"மசாஜ் செய்யும் யானை" ராயல் என்பீல்டை தொடர்ந்து கிண்டல் செய்யும் பஜாஜ்

Written By:

பஜாஜ் நிறுவனம தனது டொமினார் பைக்களுக்கான விளம்பரத்தில் ராயில் என்பீல்டு பைக்குகளை தாக்கி வருகிறது. அதன் வரிசையில் தற்போது ராயல் என் பீல்டு பைக்கை மீண்டும் வம்பிற்கு இழுத்து தனது 6வது விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

இதுவரை பஜாஜ் நிறுவனம் வெளியிட்ட 5 விளம்பரங்களிலும் ராயல் என்பீல்டு பைக்கின் உள்ள குறைகளை சுட்டுக்காட்டி, ராயல் என்பீல்டு பைக்கை யானையாக உருவாகப்படுத்தி விளம்பரப்படுத்தி வந்தது.

அதே பாணியில் தற்போது வெளியான 6வது விளம்பரமும் வெளியாகியுள்ளது. ராயல் என்பீல்டில் அதிக தூரம் செல்லும் போது ஏற்படும் உடற் வலியை கிண்டல் செய்து இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விளம்பரம் வைரலாக பரவியும் வருகிறது.

இந்த விளம்பரத்தில் யானை ஒருவருக்கு மசாஜ் செய்து விடுவது போன்ற காட்சி வருகிறது. அப்பொழுது அந்த வழியாக டொமினார் பைக்கில் வரும் சிலர் மசாஜ் செய்பவரை பார்த்து ஏளனமாக சிரித்து விட்டு செல்கின்றனர்.

இந்த விளம்பரத்தில் வரும் யானையை ராயல் என்பீல்டாக சித்தரித்து மசாஜ் செய்பவரை ராயல் என்பீல்டை ஓட்டுபவராக சித்தரித்துள்ளனர். இதல் ராயல் என்பீல்டை விட டொமினார் ஓட்டுவதில் சுகம் அளிக்கும் என்ற தகவலை சொல்லுகின்றனர். அந்த வீடியோவை கீழே காணலாம்.

ராயல் என்பீல்டையும் டொமினாரையும் ஒப்பிட்டு பார்த்தாலும் ராயல் என்பீல்டில் இன்ஜினின் வைபரேஷன் அதிகமாக இருக்கும். அதிக நேரம் பயணம் செய்வது சிரமம் அதே நேரத்தில் டொமினாரில் ரெய்டிங் போசிஷன், நீண்ட தூரம் பயணம் செய்ய ஏதுவாக இருக்கிறது.

டொமினார் 400 பைக் 373 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு, 6 கியர் இன்ஜினுடன் 35 பிஎச்பி மற்றும் 35 என் எம். டார்க் திறனை வெளிபடுத்துகிறது. மேலும் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் இருக்கிறது.

ராயல் என்பீல்டை ஒப்பிடும் போது டொமினாரில் டிஜிட்டல் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லைட், டெலஸ்கோபிக் ஃபோக்ஸ், மோனா ஷாக் சஸ்பென்ஷன், 2 டிஸ்க் அம்சங்கள் இருக்கிறது 148 கி.மீ., வேகத்தை அதிகபட்ச வேகமாக கொண்டுள்ள டொமினாரில் 100 கி.மீ. வேகத்திற்கு அதிகமாக செல்லும் போதும் சொகுசான பயண அனுபவத்தை தருகிறது.

பஜாஜ் டொமினாருக்கும் ராயல் என்பீல்டிற்கும் ஏற்பட்டுள்ள இந்த போட்டி பைக் பிரியர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து டொமினார் ராயல் என்பீல்டை தாக்கி வந்தாலும் அதன் விற்பனையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பவில்லை.

டொமினாரும் ராயல் என்பீல்டும் வேறு வேறு காரணங்களில் சிறந்த பைக்காக இருக்கிறது. இந்த இரு பைக்குகளையும் ஒப்பிட முடியாது. எனினும் தொடர்ந்து ராயல் என்பீல்டையே டொமினார் தாக்கி வருகிறது. மேலும் இன்னும் சில விளம்பரங்கள் ராயல் என்பீல்டை தாக்கி பஜாஜ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01."ராங்" சைடில் வண்டி ஓட்டினால் டயர் கிழியும்

02.இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்

03.உங்கள் கார் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? பிரச்னை, அறிகுறி, தீர்வு

04.சிபி ஹார்னட் vs அப்பாச்சி ஆர்டிஆர் எது பெஸ்ட்?

05.இந்தியாவில் விற்பனையான டபிள்யூ ஆர் வி கார் ஹோண்டாவிற்கு புதிய மைல் கல்

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bajaj Dominar Targets Royal Enfield Again; Releases New ‘Haathi Mat Paalo’ Ad. Read in Tamil

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark