பழமையான பைக் போன்று கஸ்டமைஸ் செய்யப்பட்ட பல்சர் பைக்!

By Saravana

இளைஞர்களின் மனம் கவர்ந்த பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் பஜாஜ் பல்சர் 220எஃப். சிறப்பான செயல்திறன், அட்டகாசமான வடிவமைப்பு கொண்ட இந்த பைக்கை பழமையான வடிவமைப்பு தாத்பரியங்களுடன் மாற்றிக்காட்டியிருக்கின்றனர் இந்தோனேஷியாவை சேர்ந்த கஸ்டமைஸ் நிறுவனத்தார்.

சட்டென பார்க்கும்போது இது பல்சர் 220எஃப் பைக் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், ஒரு சில அடையாளங்களை வைத்தே இதனை பல்சர் 220 பைக் என்று கூறுமளவுக்கு மிக சிறப்பாக கஸ்டமைஸ் செய்துள்ளனர். படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

இந்தோனேஷிய நிறுவனம்

இந்தோனேஷிய நிறுவனம்

இந்தோனேஷியாவை சேர்ந்த ரூடி குணவன் என்ற கஸ்டமைஸ் நிறுவனம்தான் இந்த பைக்கை வடிவமைத்துள்ளது.

கடைசி தேர்வு

கடைசி தேர்வு

பல டிசைன் மாதிரிகளை எடுத்துக் கொண்டாலும், இந்த பழமையான மோட்டார்சைக்கிள் போன்ற டிசைன் தங்களை கவர்ந்ததால், இவ்வாறு மாற்றியிருப்பதாக ரூடி குணவன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூவர்ணக் கலவை

மூவர்ணக் கலவை

பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், பேஜ் வண்ண ஒற்றை இருக்கை பொருத்தப்பட்டுள்ளது.

மாறுதல்கள்

மாறுதல்கள்

முன்புற, பின்புற ஃபென்டர்கள் புதிது. யமஹா எல்2ஜி பைக்கின் பெட்ரோல் டேங்க்கை பயன்படுத்தியிருக்கின்றனர்.

அடையாளம்

அடையாளம்

220சிசி என்பதை குறிக்கும் விதத்தில் ரேடியேட்டர் கவுல்களில் 220 எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறததில் இரட்டை பெட்டல் டிஸ்க் பிரேக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

 நம்பர் பிளேட்

நம்பர் பிளேட்

பின்புறத்தில் குட்டையான ஃபென்டர் பொருத்தப்பட்டிருப்பதால், ஸ்விங் ஆர்மிலிருந்து நம்பர் பிளேட்டை தாங்கிப் பிடிக்கும் ஆங்கிள் பட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.

பெரிய டயர்கள்

பெரிய டயர்கள்

அகலமான டயர்கள், காப்பர் பூச்சு கொண்ட புகைப்போக்கி குழாய், வட்ட வடிவ சைடு மிரர்கள் போன்றவை மேலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அம்சங்கள்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த பைக்கில் பெர்ஃபார்மென்ஸ் குறித்த விஷயங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒரே அடையாளம்

ஒரே அடையாளம்

இந்த பைக்கில் பல்சர் 220எஃப் எஞ்சின் மட்டும்தான் ஒரே அடையாளமாக தெரிகிறது. மற்றபடி, முழுவதும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

Photo Credit: Otomotifnet.com

More from DriveSpark

Article Published On: Tuesday, May 17, 2016, 9:43 [IST]
English summary
Bajaj Pulsar 220 modified to look like a real Classic Bike.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+