நடு ரோட்டில் சில்லறை வாரிய இளைஞர்கள்!! பல்சர் பைக்கில் இதெல்லாம் செய்ய முடியாதுங்க - இது தெரியாம...
கவாஸாகி நிஞ்சா (Kawasaki Ninja) சூப்பர் பைக் ஓட்டுனர் முன் கெத்து காட்ட நினைத்த பஜாஜ் பல்சர் என்.எஸ்200 பைக் ஓட்டி நடு ரோட்டில் வழுக்கி விழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. மும்பையில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக யுடியூபில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் சில பகுதிகளின் சாலைகளில் எந்த அளவிற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை அந்த சாலையில் வாகனம் ஓட்டியவர்களுக்கே தெரியும். பொதுவாகவே நம் நாட்டு சாலைகளில் எது எப்போது குறுக்கே வரும் என்றே தெரியாது. சமீபத்தில் கூட, சென்னை ஈசிஆர்-இல் மாடு குறுக்கே வந்ததில் விலையுயர்ந்த போர்ஷே 911 கார் ஒன்று விபத்துக்கு உள்ளாகியது.

சரி, வாகன ஓட்டிகளாவது சாலை விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுகிறார்களா? என்றால், அதுவும் இல்லை. குறிப்பாக, இளம் வயதினர் அதிவேகமாக வாகன ஓட்டி இளம் வயதிலேயே உயிரிழக்கும் சம்பவங்களை அவ்வப்போது செய்திகளில் பார்க்கிறோம். அந்த வரிசையில், கவாஸாகி நிஞ்சா சூப்பர் பைக் ரைடர் முன் கெத்து காட்ட நினைத்த பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்200 பைக் ஒட்டுனரும், பின்னால் அமர்ந்திருந்த பயணியும் நடு ரோட்டில் வழுக்கி விழுந்துள்ளனர்.
இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து கொண்டிருப்பவர் ஒரு கவாஸாகி இசட்900 சூப்பர் பைக் ஓட்டுனர் ஆவார். ஆனால், வீடியோவில் இருப்பவர் ஓட்டுவது கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்10ஆர் மோட்டார்சைக்கிளை ஆகும். பைக்கில் இருந்த சில பழுதுப்பார்ப்புகளை சரி செய்த பின்னர் இந்த கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்10ஆர் பைக் ஓட்டுனர் தனது பயணத்தை துவங்குவதில் இருந்து இந்த வீடியோவும் துவங்குகிறது.

இவ்வாறான சூப்பர் பைக்கை சாலையில் பார்த்தாலே, அதனை ஓட்டுபவர் மீது சில இளைஞர்களுக்கு பொறாமை ஏற்படுவது வாடிக்கையான ஒன்றே. அந்த பொறாமையினால் பல்பு வாங்கிய பைக் ஓட்டிகள் பலரை இதற்குமுன் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், இந்த கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்10ஆர் பைக் ஓட்டுனரை பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கில் வந்த இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
பின்தொடர்ந்தது மட்டுமின்றி, அவ்வப்போது இந்த சூப்பர் பைக்கிற்கு முன்னால் வந்தும் சூப்பர் பைக் ஓட்டுனரின் கவனத்தை பெற முயற்சித்துள்ளனர். இந்த நிகழ்வுகள் யாவும் கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்10ஆர் பைக் ஓட்டுனரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. சூப்பர் பைக் ஓட்டுனரின் கவனத்தை பெற அவர்கள் முயற்சித்தற்கு காரணமே அவரை பந்தயத்துக்கு அழைப்பதற்கு தான்.

இதற்காக என்னென்ன குட்டிக்கரணங்களை பைக்கில் அவர்கள் செய்துள்ளனர் என்பதை கீழே பதிவிடப்பட்டு உள்ள வீடியோவில் காணலாம். பந்தயதுக்கு அழைத்த பின், சூப்பர் பைக் ஓட்டுனரின் பதிலை எல்லாம் அவர்கள் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தயத்தை துவங்கிவிட்டனர். இந்த சம்பவத்தில், பல்சர் என்எஸ்200 பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரது தலையிலும் ஹெல்மெட் இல்லை.
கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்10ஆர் பைக் ஓட்டிக்கு அவர்களுடன் பந்தயத்துக்கு செல்ல விருப்பமே இல்லை. ஆக்ரோஷமாக இருந்த பல்சர் பைக் இளைஞர்களை சாலையில் எச்சரிப்பதே சூப்பர்பைக் ஓட்டுனருக்கு வேலையாக இருந்துள்ளது. இருப்பினும், ஒரு கட்டத்தில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் சாலையில் கவிழ்ந்தது. அதில் பயணித்த இளைஞர்கள் இருவரும் நடு சாலையில் கீழே விழுந்தனர். இதில் ஏற்பட்ட அசிங்கத்தினாலேயே, அந்த இடத்தில் நீண்ட நேரத்திற்கு நிற்காமல் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்10ஆர் பைக் ஓட்டி தனது பைக்கின் எக்ஸாஸ்ட் அமைப்பில் இருந்த சிறு, சிறு பிரச்சனைகளை சரி செய்த பின் அதனை டெஸ்ட் செய்வதற்காக ஓர் ரவுண்ட் அடித்துவர சென்றுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. நல்லவேளையாக, பல்சர் பைக் குறைந்த வேகத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தின்போது இளைஞர்கள் கீழே விழுந்துள்ளனர். இதுவே, அதிவேகத்தின் போது கீழே விழுந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என யோசிக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications
