செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் திரைப்படத்தில் பஜாஜ் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

இந்தியாவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று பஜாஜ். இந்த நிறுவனம் க்யூட் (Bajaj Qute) வாகனத்தை இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஆட்டோ ரிக்ஸாக்களுக்கு சிறந்த மாற்றாக க்யூட் வாகனத்தை பஜாஜ் நிறுவனம் சந்தைக்கு கொண்டு வந்தது. தற்போது சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பஜாஜ் க்யூட் வாகனமானது, குவாட்ரிசைக்கிள் (Quadricycle) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கும் பஜாஜ் நிறுவனம் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த சூழலில், பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தின் புகழ் உலகம் முழுவதும் மேலும் அதிகரிக்கவுள்ளது. ஆம், விரைவில் வெளியாகவுள்ள ஹாலிவுட் படத்தில் பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

சாண்ட்ரா புல்லக், சானிங் டாட்டம், டேனியல் ராட்க்ளிஃப் மற்றும் பிராடு பிட் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகளின் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'தி லாஸ்ட் சிட்டி' (The Lost City). உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.

செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

இதற்கு முன்பாக இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த ட்ரெய்லரை தற்போது வரை பல லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். 'தி லாஸ்ட் சிட்டி' திரைப்படத்தின் ட்ரெய்லரில் பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த திரைப்படத்தில் சாகச பயண காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

அடர்ந்த காடுகளில் நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில்தான் பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையை சொல்லப்போனால் இதுபோன்ற கரடு, முரடான இடங்களில் முறையான ஆஃப் ரோடு எஸ்யூவி வாகனத்தைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால் 'தி லாஸ்ட் சிட்டி' திரைப்பட குழுவினர், ஆஃப் ரோடு எஸ்யூவி வாகனத்திற்கு பதிலாக பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர்.

செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

எனினும் இந்த காட்சிகளில் பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தை பார்ப்பதற்கு நன்றாகதான் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த ட்ரெய்லரில் பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம், மலையில் இருந்து உருண்டு கீழே விழுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஹாலிவுட் மட்டுமல்லாது அனைத்து திரைப்படங்களிலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவது வழக்கமான ஒன்றுதான்.

செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

அதே நேரத்தில் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தில் பஜாஜ் லோகோ இடம்பெறவில்லை என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம் பரிமாணங்கள் அடிப்படையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 2,752 மிமீ ஆகும். அதே நேரத்தில் அகலம் 1,312 மிமீ ஆகவும், உயரம் 1,652 மிமீ ஆகவும் உள்ளது. பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தின் வீல்பேஸ் நீளம் 1,925 மிமீ ஆகும்.

செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம் 12 இன்ச் வீல்களில் இயங்குகிறது. இதன் கேபினில் 4 பேர் வரை அமர்ந்து பயணம் செய்ய முடியும். பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தில் 216.6 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வெர்ஷன்களையும் நீங்கள் தேர்வு செய்ய முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேகத்தில் பயணிப்பது சிரமமான காரியம்தான் என கூறப்படுகிறது. மிகவும் பரபரப்பான நகர சாலைகளில் பொதுமக்களை ஏற்றி செல்ல கூடிய வகையில்தான் பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

செம கெத்து... உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் படத்தில் நம்ம ஊரு பஜாஜ் வண்டி! சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

ஆனால் வழக்கமான கார்களை காட்டிலும் இது சிக்கனமான தேர்வாக இருக்கும். பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம் ஏற்கனவே மிகவும் பிரபலமாகதான் இருந்து வருகிறது. இந்த சூழலில் உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹாலிவுட் திரைப்படத்தில் இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டிருப்பது நிச்சயம் அதனை இன்னும் அதிகமாக பிரபலமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bajaj qute quadricycle stars in hollywood movie
Story first published: Tuesday, January 4, 2022, 13:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X