வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது

இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையே தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதிவேகத்தில் செல்வதாலும், அதிநவீன வசதிகள் நிரம்பியிருப்பதாலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.

அடுத்த கட்டமாக புல்லட் ரயில்களை (Bullet Trains) அறிமுகம் செய்வதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. தற்போதைய நிலையில் சீனா (China) மற்றும் ஜப்பான் (Japan) போன்ற உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே புல்லட் ரயில்கள் இயங்கி வருகின்றன. ஆனால் புல்லட் ரயில் ஓடும் நாடுகளின் பட்டியலில் கூடிய விரைவில் இந்தியாவும் இணையவுள்ளது.

Ballastless Track System

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் மும்பை (Mumbai) மற்றும் குஜராத் (Gujarat) மாநிலம் அகமதாபாத் (Ahmedabad) ஆகிய நகரங்களுக்கு இடையே சீறி பாயவுள்ளது. 1.08 லட்சம் கோடி ரூபாய் செலவில், இந்த புல்லட் ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், மத்திய அரசின் பங்களிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகள் தலா 5 ஆயிரம் கோடி ரூபாயை வழங்குகின்றன. எஞ்சிய தொகை அனைத்தும் ஜப்பானிடம் இருந்து கடனாக பெறப்படுகிறது. இதற்கு பெயரளவிற்கு 0.1 சதவீதம் மட்டும் வட்டி வசூலிக்கப்படவுள்ளது.

Bullet Train

ஜப்பான் உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள புல்லட் ரயில் திட்டம், இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பயண நேரம் வெகுவாக குறையும் என்பதுதான், இதற்கு காரணம். தற்போதைய நிலையில் மும்பையில் இருந்து ரயிலில் அஹமதாபாத் செல்வதற்கு குறைந்தபட்சம் 5.30 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சமாக 9 மணி நேரம் வரை ஆகிறது.

ரயில்களை பொறுத்து பயண நேரம் மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் புல்லட் ரயில் வெறும் 1.30 மணி நேரத்தில், மும்பையில் இருந்து அகமதாபாத் சென்றடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை-அகமதாபாத் இடையேயான தொலைவு 530 கிலோ மீட்டர் ஆகும். இந்த 2 நகரங்களுக்கு இடையே பயணிக்கவுள்ள புல்லட் ரயில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் சீறி பாயவுள்ளது.

எனவே சுமார் 1.30 மணி நேரத்தில் மும்பையில் இருந்து அகமதாபாத்தை அடைவது சாத்தியமே. இந்த புல்லட் ரயிலுக்காக 'பேலஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம்' (Ballastless Track System) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 'பேலஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம்' உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

'பேலஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம்' என்பது ஒரு வகையான ரயில்வே தண்டவாளம் ஆகும். இவ்வகை ரயில்வே தண்டவாளங்கள், வளர்ந்த நாடுகளில் அதிவேக ரயில்களை இயக்குவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வளர்ந்த நாடுகள் தற்போது அதிகம் விரும்ப கூடிய தண்டவாள வகைகளில் ஒன்றாக 'பேலஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம்' இருக்கிறது.

இந்த சூழலில் இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள பேலஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டத்தின் வீடியோவை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Railway Minister Ashwini Vaishnaw) தற்போது பகிர்ந்துள்ளார். இந்த வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் புல்லட் ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதை இந்த வைரல் வீடியோ நமக்கு உணர்த்துகிறது. புல்லட் ரயில் பணிகளில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஆகும். மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலை தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு வழித்தடங்களிலும் புல்லட் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதில், சென்னை-பெங்களூர்-மைசூர் (Chennai-Bangalore-Mysore) புல்லட் ரயில் திட்டமும் ஒன்றாகும். சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் நகருக்கு இந்த புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோ மீட்டராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலை போலவே, சென்னை-பெங்களூர்-மைசூர் புல்லட் ரயிலும் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வேகத்தில் சென்றால், சென்னையில் இருந்து பெங்களூரை வெறும் 1-1.30 மணி நேரத்திலேயே அடைந்து விடலாம். சென்னையில் இருந்து பெங்களூர் சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் சென்னை-பெங்களூர்-மைசூர் புல்லட் ரயிலையும் நாம் எதிர்பார்க்கலாம். இது போன்ற அதிவேக ரயில்கள், இந்தியாவிற்கு அவசியமானவை என்பதுதான் எங்கள் கருத்து. இந்த அதிவேக ரயில்கள், பயண நேரத்தை குறைக்கும் என்பதுடன், பொருளாதார மேம்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2024, 13:28 [IST]
English summary
Ballastless track for mumbai ahmedabad bullet train viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+