’சூப்பர்பைக்குகளுக்கு தடை விதியுங்கள்..” மகனை இழந்த தந்தையின் ஒரு உருக்கமான கோரிக்கை..!!

Written By:

கடந்த 15ம் தேதி டெல்லியில் நண்பர்களுடன் சூப்பர்பைக் மாடல் ஒன்றில் பைக் ரேஸிங் செய்த ஹிமான்ஷூ பன்சால் என்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரழந்தார்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

சூப்பர்பைக் ப்ரியங்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள இவரது இறப்பு, சட்டத்திற்கு புறம்பாக பைக் ரேஸிங் செய்வது தொடர்பான விவாதங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மத்தியில் இந்தியாவில் சூப்பர்பைக் பயன்பாடு தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

Recommended Video
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

இந்நிலையில் விபத்தில் உயிரழந்த ஹிமான்ஷூவின் தந்தை சுரேஷ் பன்சால் அதிவேக பயணங்களை விரும்புபவர்கள் மற்றும் அரசிற்கும் ஒரு உருக்கமான கோரிக்கையை வைத்துள்ளார்.

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

மகன் விரும்பி கேட்ட பென்னலி டிஎன்டி 600ஐ என்ற சூப்பர் பைக்கை வாங்கி தந்து ஒரு வருடம் கூட முடியவில்லை.

அதற்குள் மகன விபத்தில் உயிரழ்ந்திருப்பது தந்தை சுரேஷ் உட்பட அக்குடும்பத்தினர் அனைவருக்கும் பேரிடியாக உள்ளது.

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

மகன்களிடம் மற்ற பெற்றோர்களும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக,

இந்தியாவில் சூப்பர்பைக் மாடல் விற்பனைக்கு தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை சுரேஷ் பன்சால் மத்திய அரசுக்கு விடுத்துள்ளார்.

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

இந்திய சாலைகள் சூப்பர்பைக்கின் திறன்களுக்கு ஏற்றவாறு இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்பதால், இந்தியாவில் இதுபோன்ற பைக்குகள் பயன்பாட்டிற்கு சரிவராது என சுரேஷ் பன்சால் கருத்து கூறியுள்ளார்.

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

71வது சுதந்திர தினத்தின் இரவில் டெல்லி மாண்டி ஹவுஸ் பகுதியில் ஹிமான்ஷூ சென்று கொண்டு இருந்த போது, திடீரென எதிரே ஒரு வழிபோக்கர் சாலையை கடக்க பாதி சாலை வரை வந்துள்ளார்.

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

அதிவேகமாக பைக்கில் வந்துகொண்டு இருந்த ஹிமான்ஷூவிற்கு இது தடங்கள் ஏற்படவே, வழிப்போக்கரை இடிக்காது பைக்கை இடதுபக்கமாக திருப்ப முயற்சித்துள்ளார்.

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

அப்போது பைக்கின் கட்டுபாட்டை இழந்து, வழிப்போக்கரையும் இடித்து நிலை தடுமாறி பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

அவர் ஓட்டிசென்ற பென்னல்லி டிஎன்டி பைக் சாலையில் இருந்து சிறுது தூரம் இழுத்து சென்று, பிறகு மிகவும் நிலைகுலைந்து போய் நின்றது.

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயங்கள் அடைந்த ஹிமான்ஷூவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனிக்காமல் உயிரழந்தார்.

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

சூப்பர் பைக்குகளுக்கான தடை குறித்து ஹிமான்ஷூவின் விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளித்த போலீசார்,

"கிடைத்த வீடியோ அதாரங்கள் படி, ஹிமான்ஷூ போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக கிட்டத்தட்ட 150 கி.மீ வேகத்தில் மாண்டி ஹவுஸ் சாலையில் பைக்கை இயக்கியுள்ளார்"

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

"மேலும் நண்பர்களுடன் பைக் ரேஸிங் செய்துள்ளார். மகனை இழந்த சுரேஷ் பன்சாலின் சோகம் வேதனைக்குரியது தான். ஆனால் பாதிக்கப்பட்ட பின் சூப்பர்பைக் வைத்திருப்பவர்களின் பெரும்பாலான நிலை இதுதான்" என்று தெரிவித்தனர்.

சூப்பர்பைக்களுக்கு தடை வேண்டும்... ஒரு தந்தையின் கோரிக்கை..!!

இளைஞர் ஹிமான்ஷூவின் மரணத்தால், டெல்லி நகரில் வாகனம் வைத்திருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கு போக்குவரத்து விதிகள் மேலும் கடுமையாக்கப்படும் என தெரிகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Ban Super Bikes In India Says Delhi Accident Victim Himanshu Bansal Father Suresh Bansal. Click for Details...
Story first published: Thursday, August 17, 2017, 11:14 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos