போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

போலி இயந்திரங்கள் மூலம் டிரிங்க் அண்ட் டிரைவ் சோதனை நடத்திய போலீசார் கூண்டோடு சிக்கியுள்ளனர். இது தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், குடிபோதையில் வாகனங்களை இயக்குவதுதான் முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக போலீசார் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர்.

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

இந்த சூழலில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலீசார் கூண்டோடு சிக்கியுள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகளிடம் இருந்து நூதனமான முறையில் பணம் பறித்த 4 போலீஸ்காரர்கள் கையும், களவுமாக சிக்கியுள்ளனர். அவர்கள் செய்த காரியம் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வாகன ஓட்டிகளின் ஆல்கஹால் அளவை கண்டறிய போலியான ஆல்கோமீட்டர்களை (Alcometers) 4 போலீசார் பயன்படுத்தியுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட உதவி சப் இன்ஸ்பெக்டர் முனியப்பா மற்றும் கான்ஸ்டபிள்கள் கங்காராஜ், நாகராஜ், ஹர்ஷா ஆகிய 4 போலீஸ்காரர்களும் உயர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

பொதுவாக வாகன ஓட்டிகள் குடிபோதையில் உள்ளனரா? என்பதை கண்டறிவதற்காக போலீசார் சோதனை செய்வது வழக்கம். இதற்காக அரசாங்கம் போலீசாருக்கு ஆல்கோமீட்டர்களை வழங்கியுள்ளது. ஆனால் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு போலீஸ்காரர்களும் அதற்கு எதிராக, பிரைவேட் ஆல்கோமீட்டர்களை பயன்படுத்தியுள்ளனர்.

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

டிரிங்க் அண்ட் டிரைவ் சோதனையை நடத்துவதற்காக இவர்களே தனிப்பட்ட முறையில் ஆல்கோமீட்டர்களை வாங்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் காவல் துறைக்கு சம்பந்தம் இல்லாத வெளி ஆட்களை வைத்து இந்த சோதனைகளை அவர்கள் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரசீது எதுவும் வழங்காமல் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலித்ததாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

இதுபோல் தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்த காரணத்தால், அவர்கள் 4 பேரும் தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அசோக் நகர் போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீனிவாகிலு ஜங்ஷன் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தபோது அவர்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

நான்கு போலீஸ்காரர்கள் மீதும் புகார்கள் வந்த காரணத்தால், அதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு போலீஸ்காரர்களுக்கும் 5 பேர் உதவி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கும், காவல் துறைக்கும் சம்பந்தமே இல்லை என தெரிகிறது.

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

ஆனால் உயர் அதிகாரிகள் திடீரென வந்த சமயத்தில் அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி விட்டனர். எனினும் ட்யூட்டியில் இருந்த போலீஸ்காரர்கள் சிக்கி கொண்டனர். அவர்களிடம் இருந்த ஆல்கோமீட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3 போலியான ஆல்கோமீட்டர்கள் அவர்களிடம் இருந்துள்ளது. இதுதவிர 32 ஆயிரம் ரூபாய் பணமும் அவர்களிடத்தில் இருந்திருக்கிறது.

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

இது வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட தொகையாகும். மேலும் ஒரு சில டிரைவிங் லைசென்ஸ்களும் அவர்களிடம் இருந்துள்ளன. இவை அனைத்தும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. காவல் துறையை சாராத அந்த 5 நபர்கள்தான் வாகன ஓட்டிகளை பிடித்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் முனியப்பாவிடம் அனுப்பி வைப்பார்கள்.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

அதன்பின் முனியப்பா அவர்களை மிரட்டி அபராத தொகையை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விடும், நீதிமன்றத்தில் 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது போன்ற அச்சுறுத்தல்களை காட்டி வாகன ஓட்டிகளிடம் இருந்து முனியப்பா பணத்தை கறந்ததாக கூறப்படுகிறது.

போலி இயந்திரங்கள் மூலம் 'டிரிங்க் அண்ட் டிரைவ்' சோதனை... போலீசாரின் அதிர வைக்கும் மோசடி அம்பலம்...

தற்போது கையும், களவுமாக சிக்கியுள்ள 4 போலீசாருக்கும் எதிரான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பொதுவாக பெங்களூர் நகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க அடிக்கடி பரவலாக சோதனை நடத்தப்படும். ஆனால் அதனை பயன்படுத்தி கொண்டு போலீசார் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore: 4 Policemen Suspended For Using Fake Alcometers To Check Alcohol Level. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X