பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

பெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடையக்கூடும்.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில், ஏரோ இந்தியா- 2019 என்ற பெயரில், 5 நாள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 20ம் தேதி (புதன் கிழமை) தொடங்கி வைத்தார்.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்ஏஎல் நிறுவனம் (HAL- Hindustan Aeronautics Limited) மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்று வரும் இந்த 5 நாள் கண்காட்சியில், நூற்றுக்கணக்கான விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இதுதவிர விமான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், 4ம் நாளான இன்று (பிப்ரவரி 23), இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கண்காட்சிக்கு வந்திருந்தார். இந்தியா முதன் முதலில் சுயமாக உருவாக்கிய எல்சிஏ தேஜாஸ் (LCA Tejas) போர் விமானத்தை அவர் பார்வையிட்டார்.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

அத்துடன் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள, எல்சிஏ தேஜாஸ் போர் விமானத்தில் அவர் பறந்தார். இவ்வாறு மதியம் வரை அனைத்தும் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் திடீரென அரங்கேறியது அந்த விபரீதம்.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், விமான கண்காட்சியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களின் வாகனங்களை நிறுத்தி வைத்து கொள்ள கேட் எண்-5 அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு வாகனங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்த சூழலில் அங்கிருந்த புல்வெளியில் மதியம் திடீரென தீப்பற்றியது. பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதில், 150க்கும் மேற்பட்ட கார்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

பெங்களூர் கண்ட மிக மோசமான தீ விபத்துக்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அப்பகுதியே புகை மண்டலமாக மாறியதால், விமான விபத்துதான் நிகழ்ந்து விட்டதோ? என மக்கள் பீதியடைந்தனர். பின்னர்தான் வாகனங்கள் பற்றி எரிவது அவர்களுக்கு தெரியவந்தது.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

அதிர்ஷ்டவசமாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விமானங்களுக்கு எதுவும் ஆகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சரியாக மதியம் 12.17 மணியளவில் தீப்பற்றியது. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் மாறியது.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனே விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் தீ பிடிக்காத மற்ற வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இல்லாவிட்டால் தீ விபத்தில் நாசமான வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்க கூடும்.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

தீயை அணைக்கும் பணியில், 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெங்களூரு தீ விபத்து சம்பவத்திற்கு மனித தவறுதான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

காய்ந்த புற்களின் மீது அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட் துண்டு காரணமாக தீப்பற்றி வாகனங்களுக்கும் பரவியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில் காற்று பலமாக வீசியதால், தீ மளமளவென பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு சின்னஞ்சிறு மனித தவறால் இத்தகைய கோர விபத்து அரங்கேறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் தீ பற்றி எரியும் வீடியோவை பார்த்தால் இது எவ்வளவு பெரிய பேரழிவு என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இருந்தபோதும் தீ விபத்திற்கு இதுதான் காரணம் என உறுதியான தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இது பாதுகாப்பு துறை தொடர்பான கண்காட்சி என்பதால், தீவிரவாதிகளின் நாசவேலையாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. எனவே போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்த விமான கண்காட்சி தொடங்கியது முதலே தொடர்ச்சியாக அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2 தினங்களுக்கு முன், இந்திய விமான படையின் சூர்யகிரண் ஏரோபேட்டிக் அணியை சேர்ந்த 2 ஜெட் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. இதில், ஒரு பைலட் உயிரிழந்தார்.

பெங்களூர் விமான கண்காட்சி தீ விபத்தில் 300 கார்கள் நாசம்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ விபத்தில் நாசமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், வாகனங்கள் தீப்பற்றி எரிந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹாலிவுட் சினிமா படக்காட்சி போல் உள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பெங்களூரில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில், ரபேல் போர் விமானங்கள் கூட சாகசத்தில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கடந்த 20ம் தேதி தொடங்கிய 5 நாள் கண்காட்சி நாளையுடன் முடிவடைகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore Air Show 2019 Fire Accident; Nearly 300 Vehicles Burnt To Ashes — Watch The Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X