பெங்களூர் விமான நிலையத்தில் உலகின் அதி நவீன தீயணைப்பு வாகனங்கள்!

உலகின் அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், பெங்களூர் விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரோஸன்பவர் பாந்தர் 6x6 என்ற பெயரிலான இந்த தீயணைப்பு வாகனங்கள் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களை

By Saravana Rajan

உலகின் அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், பெங்களூர் விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இந்த வாகனத்தின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

பெங்களூர் விமான நிலையத்தில் உலகின் அதி நவீன தீயணைப்பு வாகனங்கள்!

விமானங்கள் மற்றும் அதற்கு எரிபொருள் நிரப்பும் டேங்கர்கள் என விமான நிலைய வளாகங்களில் தீப்பிடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதியாக இருக்கின்றன. எனவே, தீத்தடுப்புக்கான அதிக பாதுகாப்பு அம்சங்கள் விமான நிலையங்களில் கையாளப்படுகின்றன.

பெங்களூர் விமான நிலையத்தில் உலகின் அதி நவீன தீயணைப்பு வாகனங்கள்!

அந்த வகையில், உலகின் நவீன தீயணைப்பு வாகனங்கள் பெங்களூர் விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரோஸன்பவர் பாந்தர் 6x6 என்ற பெயரிலான இந்த தீயணைப்பு வாகனங்கள் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றுள்ளன.

பெங்களூர் விமான நிலையத்தில் உலகின் அதி நவீன தீயணைப்பு வாகனங்கள்!

பரந்து விரிந்த பெங்களூர் விமான நிலைய வளாகத்தின் எந்த பகுதியில் தீப்பிடித்தாலும், இரண்டே நிமிடங்களில் இந்த தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயணைப்பு பணிகளில் ஈடுபடும்.

பெங்களூர் விமான நிலையத்தில் உலகின் அதி நவீன தீயணைப்பு வாகனங்கள்!

இந்த தீயணைப்பு வாகனத்தில் அதிசக்திவாய்ந்த 18,000 சிசி திறன் கொண்ட கேட்டர்பில்லர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 703 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்லும்.

பெங்களூர் விமான நிலையத்தில் உலகின் அதி நவீன தீயணைப்பு வாகனங்கள்!

இந்த தீயணைப்பு வாகனத்தில் 12,500 லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும் நீர்த்தொட்டிகள் உள்ளன. 1,500 லிட்டர் தீயணைக்கும் வேதி நுரை தொட்டி, 350 லிட்டர் எரிபொருள் கலன்களை பெற்றிருக்கிறது.

பெங்களூர் விமான நிலையத்தில் உலகின் அதி நவீன தீயணைப்பு வாகனங்கள்!

இந்த தீயணைப்பு வாகனத்தின் முன்பக்க கூரை மீதும், பம்பரிலும் தண்ணீரை பீய்ச்சும் குழாய்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. கூரை மீதுள்ள குழாய் ஒரு நிமிடத்திற்கு 6,000 லிட்டர் தண்ணீரையும், பம்பரில் உள்ள குழாய் நிமிடத்திற்கு 1,500 லிட்டர் தண்ணீரையும் பீய்ச்சி அடிக்கும் திறன் வாய்ந்தது.

பெங்களூர் விமான நிலையத்தில் உலகின் அதி நவீன தீயணைப்பு வாகனங்கள்!

இந்த தீயணைப்பு வாகனத்தில் மற்றொரு முக்கிய விசேஷம், முன்பக்கத்தில் அகச்சிவப்பு கதிர்கள் துணையுடன் இயங்கும் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. அடர்ந்த புகை மூட்டம், மழை மற்றும் பனிப்பொழிவின்போது இந்த வாகனத்தை ஓட்டுனர் எளிதாக இயக்க துணைபுரிகிறது.

பெங்களூர் விமான நிலையத்தில் உலகின் அதி நவீன தீயணைப்பு வாகனங்கள்!

இதன் வாகனத்தின் அடிப்பாகம் முழுவதும் தீப்பிடிக்காத விசேஷ தொழில்நுட்பத்திலான ஸ்டீல் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, தீப்பிடித்த பகுதிகளில் கூட எளிதாக இயக்க முடியும்.

பெங்களூர் விமான நிலையத்தில் உலகின் அதி நவீன தீயணைப்பு வாகனங்கள்!

பெங்களூர் விமான நிலையத்திற்கு 4 ரோஸன்பவர் பாந்தர் 6x6 தீயணைப்பு வாகனங்கள் ஆஸ்திரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் ரூ.5 கோடி மதிப்புடையது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Picture credit: Rosenbauer

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bangalore Airport's World Class Fire Fighting Trucks.
Story first published: Saturday, April 28, 2018, 12:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X