கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், இந்த நல்ல மனிதர் செய்த காரியத்தை பார்த்தால், நீங்க அசந்து போயிருவீங்க.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) கோர தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகளை கோவிட்-19 ஒரு கை பார்த்துள்ளது. மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸை சமாளிக்க முடியாமல், வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வது மட்டும்தான், கோவிட்-19 வைரஸிடம் இருந்து காத்து கொள்வதற்கு நம்மிடம் தற்போதைக்கு இருக்கும் ஒரே வழி. எனவே உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமலுக்கு கொண்டு வந்து விட்டன. இந்தியாவில் வரும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த தகவலை மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. அதேசமயம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

ஆனால் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ஒரு சிலர் வாகனங்களில் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். இப்படி தேவை இல்லாமல் சுற்றி திரிபவர்களின் வாகனங்களை காவல் துறை அதிரடியாக பறிமுதல் செய்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது வரை லட்சக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

எனினும் தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களை பெரிதாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக கொரோனாவின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் காவல் துறையினர் களமிறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் வடிவத்தில் டிசைன் செய்யப்பட்ட ஹெல்மெட்டை போலீசார் அணிந்தது கவனம் பெற்றது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் போலீசார் கொரோனா ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்பின்னர் கொரோனா வைரஸின் வடிவத்தில் டிசைன் செய்யப்பட்ட கார் மற்றும் ஆட்டோக்களையும் நம்மால் பார்க்க முடிந்தது. இதில், கொரோனா கார் ஐதராபாத்திலும், கொரோனா ஆட்டோ சென்னையிலும் வலம் வந்தன.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

இந்த வரிசையில் பெங்களூரை சேர்ந்த கலைஞர் ஒருவர் தற்போது மற்றொரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளார். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கோவிட்-19 வைரஸின் 3டி படங்களை அவர் சாலையில் வரைந்துள்ளார். கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தனித்துவமான நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

பெங்களூர் மாநகர சாலைகளில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ள இந்த 3டி ஓவியங்கள் காண்பவர்களை அசர வைக்கும் வகையில் உள்ளன. பாதல் நஞ்சுண்டசுவாமி (Baadal Nanjundaswamy) என்ற ஓவியர்தான் இந்த 3டி பெயிண்ட்டிங்கை செய்துள்ளார். கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை கலையின் மூலமாக ஏற்படுத்துவதே இந்த ஓவியங்களுக்கு பின்னால் இருக்கும் நோக்கம்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

இந்த ஓவியங்கள் மூலம், வீடுகளிலேயே இருக்கும்படி பொதுமக்களை பாதல் நஞ்சுண்டசுவாமி வலியுறுத்தி உள்ளார். கர்நாடக மாநிலத்திலும் கோவிட்-19 வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கோவிட்-19 வைரஸின் தீவிரத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த விழிப்புணர்வு ஓவியங்களை பாதல் நஞ்சுண்டசுவாமி வரைந்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

கர்நாடக மாநிலம் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான ஓவியர்களில் ஒருவராக பாதல் நஞ்சுண்டசுவாமி திகழ்ந்து வருகிறார். தனது ஸ்ட்ரீட் ஆர்ட் மற்றும் 3டி பெயிண்ட்டிங்குகள் மூலம் பாதல் நஞ்சுண்டசுவாமி புகழ் பெற்றுள்ளார். மைசூரில் பிறந்தவரான ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமி, தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தனது ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் பாதல் நஞ்சுண்டசுவாமி குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூர் நகர சாலையில், விண்வெளி வீரர் ஒருவர் நடப்பது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

பெங்களூர் மாநகரில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் எடுக்கப்பட்ட இந்த வித்தியாசமான வீடியோ அனைவரையும் சிரிக்க வைத்த அதே நேரத்தில் பிரச்னையின் தீவிரத்தை உணரவும் வைத்தது. அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட இந்த வீடியோ ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமியின் ஐடியாதான்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமியின் குரலுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு அவசியம் என்பதாலும், சில பிரச்னைகளுக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, May 1, 2020, 18:11 [IST]
English summary
Bangalore Artist Baadal Nanjundaswamy Paints 3D Pictures Of Covid-19 On Road To Spread Awareness. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+