பெங்களூர் பஸ் டிரைவர் செஞ்ச காரியத்தை பத்திதான் இப்ப நாடே பேசுது! டோனி வெறியர்கள் இந்த வீடியோவை பாத்தராதீங்க!
பெங்களூர் (Bangalore) என்றதும் முதலில் நினைவிற்கு வருவது, மிகவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலைதான். உண்மையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இருப்பதை போன்ற குளிர்ச்சியை நீங்கள் இங்கே அனுபவிக்கலாம். ஆனால் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு பெங்களூரை பற்றி தெரியாத ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.
பெங்களூர் நகரின் மிக பிரபலமான போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) பிரச்னையை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாக பெங்களூர் திகழ்கிறது. இந்தியாவின் பசுமையான பெரு நகரம் பெற்றிருக்கும் மிக மோசமான சாபம் இது.

பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை அனுபவிக்காதவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். சில சமயங்களில் இங்கு நீங்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவை கடப்பதற்கு ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கூட ஆகலாம். அந்த அளவிற்கு வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கும்.
சரி, திரும்பி செல்லலாம் என்றால், அதுவும் முடியாது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டால், மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதை தவிர வேறு வழியே இல்லை. இல்லாவிட்டால் வாகனத்தை வழியில் எங்கேயாவது விட்டு விட்டு நடந்துதான் செல்ல வேண்டும். இதுதான் யதார்த்தமான நிலைமை.

பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலின் கோர முகத்தை தெளிவாக எடுத்துக்காட்டும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல பரவி கொண்டுள்ளது. பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மிக கடுமையாக இருக்கும் பகுதிகளில் ஒன்று சில்க் போர்டு (Silk Board).
இங்கு சமீபத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழக (BMTC - Bangalore Metropolitan Transport Corporation) பஸ் ஒன்று சிக்கி கொண்டது. நீண்ட நேரமாக வாகனங்கள் நகரவில்லை. இதனால் சலித்து போன அந்த பஸ்ஸின் டிரைவர், பஸ்சுக்குள்ளேயே வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட தொடங்கி விட்டார்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தபோது, பஸ் டிரைவர் உணவு சாப்பிட்ட காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுக்க, அது தற்போது வைரலாக பரவி கொண்டுள்ளது. உண்மையில் இதை நினைத்து சிரிப்பதா? அல்ல அழுவதா? என்பது தெரியவில்லை. பொதுவாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும்போது, பலருக்கும் டென்ஷன் ஆகும்.
ஆனால் இந்த டிரைவரோ, சிஎஸ்கே (CSK) கேப்டன் எம்எஸ் டோனியை (MS Dhoni) விட கூலாக, உணவு சாப்பிட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பெங்களூர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க புதிதாக அமைந்துள்ள முதல்வர் சித்தராமையா (Siddaramaiah) தலைமையிலான காங்கிரஸ் (Congress) அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்நகர மக்களின் எதிர்பார்ப்பு.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தற்போது மேற்கொள்ள ஆரம்பித்தாலும், செயல்படுத்தி முடிக்க நீண்ட காலம் ஆகும். எனவே வாகன ஓட்டிகள், அவர்களது பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை செய்து கொண்டால், இந்த பிரச்னையை ஓரளவிற்கு சமாளிக்கலாம்.
அதாவது ஒரே ஒருவருக்காக காரில் வந்து சாலையில் இடத்தை அடைப்பதை விட, பஸ், மெட்ரோ மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தலாம். நிறைய பேர் பயணிப்பதாக இருந்தால் வேண்டுமானால், கார்களை பயன்படுத்தலாம். மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கினாலே, பாதி பிரச்னை முடிந்து விடும்.
அத்துடன் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். ஒரு சில வாகன ஓட்டிகள் கும்பலாக ராங்-சைடில் பயணம் செய்வது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்கள் காரணமாக பெங்களூர் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் காட்சிகளை சர்வ சாதாரணமாக காண முடியும்.
இந்த வழிமுறைகள் பெங்களூர் நகர மக்களுக்கானது மட்டுமல்ல. அனைவருக்குமானதுதான். கொஞ்சம் யோசித்து பாருங்கள். காருக்கு தலா 3 பேர் என 10 கார்களில் 30 பேர் வந்தால், சாலைகளில் இடம் அடைத்து விடும். அதே 30 பேர் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தினால், சாலைகளில் இடவசதி தாராளமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









