எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர்... எதற்காக தெரியுமா?

போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர் தற்போது அதற்கான பலனை அனுபவித்து வருகிறார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர்... எதற்காக தெரியுமா?

புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. எனவே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதிய அபராதங்களை அமலுக்கு கொண்டு வருவதை ஒரு சில மாநில அரசுகள் நிறுத்தி வைத்துள்ளன.

எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர்... எதற்காக தெரியுமா?

அதே சமயம் இன்னும் சில மாநில அரசுகள் அபராத தொகைகளை குறைத்துள்ளன. இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் இனி நீங்கள் 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், இனி உங்களிடம் 5,000 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும். முன்பு இதற்கு 500 ரூபாய் மட்டுமே அபராதம்.

எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர்... எதற்காக தெரியுமா?

இதேபோல் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளும் முன்பு இருந்ததை விட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எந்தெந்த மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதோ அங்கெல்லாம் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் புதிய அபராதங்களை போலீசார் வசூலித்து வருகின்றனர்.

எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர்... எதற்காக தெரியுமா?

இந்த சூழலில், டாக்ஸி டிரைவர் ஒருவர் முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என போலீசுக்கு சவால் விடுத்து வீடியோ ஒன்றை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவையான ஆவணங்கள் எதுவுமே இல்லாமல் பெங்களூர் நகரில் காரை ஓட்டி வருவதாக அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர்... எதற்காக தெரியுமா?

போலீசாரை தரக்குறைவாக பேசுவதுடன், முடிந்தால் என் மீது நடவடிக்கை எடுத்து பாருங்கள் என அவர் இந்த வீடியோவில் சவால் விட்டுள்ளார். சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. போலீசார் சிலரும் இந்த வீடியோவை பார்த்தனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை பிடிக்கும் முயற்சியை போலீசார் மேற்கொண்டனர்.

எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர்... எதற்காக தெரியுமா?

இந்த வீடியோ வெளியான 2 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து விட்டனர். கைது செய்யப்பட்டுள்ள நபர் கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹன்சூர் தாலுகா மச்சுபையனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் ஆவார். இவர் கேப் டிரைவராக வேலை செய்து வருகிறார். ரவிக்கு தெரிந்த வேன் டிரைவர் ஒருவரை போலீசார் தாக்கியதுடன், தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர்... எதற்காக தெரியுமா?

தனது நண்பருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக போலீசார் மீது ரவி ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதன் விளைவாகவே இப்படி ஒரு விபரீதமான வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். ஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் என எவ்விதமான ஆவணங்களும் இல்லாமல் பெங்களூரில் காரை ஓட்டி வருவதாக ரவி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸை மிரட்டி வீடியோ வெளியிட்ட டிரைவர்... எதற்காக தெரியுமா?

தான் ஓட்டி வரும் காருக்கு எந்தவிதமான ரெக்கார்டுகளும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ரவியின் நண்பரிடம் போலீசார் அத்துமீறி நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அதற்காக போலீசுக்கு சவால் விடுவதும், தன்னுடைய சட்ட விரோத நடவடிக்கைகளை தெரிவிப்பதும் நல்லதல்ல. தற்போது சிறை கம்பிகளுக்கு பின்னால் அதற்கான பலனை ரவி நன்கு அனுபவித்து கொண்டிருக்கிறார்.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2019, 17:05 [IST]
English summary
Bangalore Cab Driver Without Documents Dares Cops To Catch Him If They Can: Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+