டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக காவல் துறையினர் தற்போது கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர்.

டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் என ஒரு விஷயம் இருப்பதையே ஒரு சில வாகன ஓட்டிகள் மறந்து விடுகின்றனர். பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் குமார் இதற்கு ஒரு உதாரணம். போக்குவரத்து விதிமுறைகளை கொஞ்சம் கூட மதிக்காமல், பெங்களூர் நகர சாலைகளில் இவர் சுற்றி வந்துள்ளார். இதற்காக அவருக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட அபராத ரசீதுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

சரியாக சொல்வதென்றால், 101 முறை அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளார். இது 2019ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நடப்பாண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அவர் செய்த சேட்டைகள் ஆகும். தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகன பயணம், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது, சிக்னலை மீறி செல்வது என பல்வேறு விதிமீறல்களை அவர் செய்துள்ளார்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

இதற்காக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அவருக்கு சுமார் 4 அடி நீள அபராத ரசீது வழங்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகை 57,200 ரூபாய் ஆகும். அவர் செய்த 101 விதிமீறல்களில், சுமார் 60 விதிமீறல்கள் கோவிட்-19 மாதங்களில் செய்யப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் சாலைகளில் காவல் துறையினரின் கண்காணிப்பு குறைவாக இருந்தது இதற்கு காரணமாக இருக்கலாம்.

டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

ஆனால் பெங்களூர் நகர சாலைகளில் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிமுறை மீறல்களை தடுப்பதில் காவல் துறையினர் மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு காவல் துறை அதிகாரிகள் தற்போது வித்தியாசமான தண்டனையை வழங்க தொடங்கியுள்ளனர்.

டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

பெங்களூர் தாணிசந்திரா பகுதியில், போக்குவரத்து பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த போக்குவரத்து பயிற்சி நிறுவனம், பெங்களூர் மாநகர போக்குவரத்து காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இந்த போக்குவரத்து பயிற்சி நிறுவனத்தில் அதிகாரிகள் தற்போது பாடம் நடத்த தொடங்கியுள்ளனர்.

டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

அதாவது போக்குவரத்து விதிகள், சாலையில் எப்படி ஒழுக்கமாக செயல்பட வேண்டும், மோட்டார் வாகன சட்டம் உள்பட வாகனம் ஓட்டுதலுடன் தொடர்புடைய அனைத்து அம்சங்கள் குறித்தும் இங்கு தற்போது வாகன ஓட்டிகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது. சோதனை முயற்சியாக தற்போது இந்த திட்டத்தை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

தினமும் குறைந்தது 20 பேருடைய வாகனங்களாவது பறிமுதல் செய்யப்பட்டு, இங்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை நிறைவு செய்வதற்கு கிட்டத்தட்ட அரை நாள் ஆகும். எனவே வரும் காலங்களில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீற மாட்டார்கள் என காவல் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

தற்போதைய நிலையில் தினமும் 20 பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும் நிலையில், வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 10 அல்லது அதற்கும் மேற்பட்ட முறைகள் போக்குவரத்து விதிகளை மீறியுள்ள சுமார் 15,000 வாகன ஓட்டிகளின் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தரப்பில் உருவாக்கப்பட்டுள்ள முதல் பட்டியல் இதுதான். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படவுள்ளனர். இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் கனிவாகவே நடந்து கொண்டிருக்க முடியாது.

டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! சம்பவம் இருக்கு

இல்லாவிட்டால் அவர்கள் விதிமுறைகளை தொடர்ந்து மீறி கொண்டே இருப்பார்கள். இதை நாம் அனுமதிக்க கூடாது. ஏனெனில் விதிமுறைகளை மீறுவதன் மூலமாக அவர்களது உயிருக்கு மட்டுமின்றி மற்றவர்களின் உயிருக்கும் அவர்கள் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக தற்போது நாங்கள் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளோம்'' என்றனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore City Police Sends Offenders To Traffic Training Institute. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X