ஹெல்மெட் அணியாமல் சென்ற பைக் ஓட்டியை செருப்பால் அடித்த டிராபிக் போலீஸ்; வைரலாகும் வீடியோ
பெங்களூருவில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பைக் ஓட்டியை டிராபிக் போலீஸ் ஒருவர் செருப்பால் அடித்த சமூக வலைதளங்ளில் வீடியோ வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பைக் ஓட்டியை டிராபிக் போலீஸ் ஒருவர் செருப்பால் அடித்த சமூக வலைதளங்ளில் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டூவீலரில் போகும் போது ஹெல்மெட் அணியாமல் செல்வது என்பது சாதாரண விஷயமாக இருக்கிறது. டூவிலரில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் என்பது குறைந்தபட்ச பாதுகாப்பு என்றாலும் இது குறித்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் முழுமையாக ஏற்படவில்லை

தற்போது பெரும்பாலான இடங்களில் டூவீலரில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீசார் அபாராதம் விதித்து வருகின்றனர். இச்சட்டத்தை கடுமையாக கடைபிடிக்கும் படி அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பலர் போலீசாருக்கு பயந்தாவது ஹெல்மெட் அணிந்து பயணம் செய்கின்றனர். ஆனால் அப்பொழுதும் சிலர் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் பயணம் செய்துதான் வருகின்றனர். சில இடங்களில் ஹெல்மெட் போடாதவர்கள் மீது போலீசார் நடவடிக்கை என்ற பெயரில் சில அத்துமீறல் செய்யும் சம்பவங்களும் நடந்துதான் வருகிறது.

சில இடங்களில் ஹெல்மெட் போடதவர்களை அடிப்பது. ஹெல்மெட் போடாமல் நிற்காமல் செல்பவர்களை லத்தியை கொண்டு அடிப்பதை நாம் அவ்வப்போது கேள்வி பட்டிருக்கிறோம். ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஹெல்மெட் போடாமல் சென்ற தம்பதியினரை போலீசார் ஒருவர் துரத்தி சென்று எட்டி உதைத்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவம் நமக்கு தெரியும்.

இதே போல் சமீபத்தில் பெங்களூருவிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹெல்மெட் போடாமல் சென்ற ஒரு வாலிபரை போலீசார் செருப்பால் அடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ரெஷாஃபா சாட்டர்ஜி என்பவர் தனது பயணக்களை வீடியோவாக பதிவு செய்து அவ்வப்போது சமூகவலைதளங்ளில் பகிர்ந்து வருபவர். இவர் தனது ஃபோக்ஸ்வாகன் போலோ காரில் செல்லும் பயணத்தை கேமராவில் பதிவு செய்து கொண்டே சென்றார்.

அப்பொழுது ரோட்டில் ஹெல்மெட் போடமல் செல்லும் டூவீலர் ஓட்டிகளை பிடித்து கொண்டிருந்த போலீசார் அப்பகுதி வழியாக ஹெல்மெட் போடாமல் வந்தவரை செருப்பால் அடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சி உங்களுக்காக கீழே வழங்கியுள்ளாம்.
கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 50 ஆயிரம் டூவீலர் விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளனர். அதில் பெரும்பாலானவை ஹெல்மெட் போடாததால் நிகழ்ந்த விபத்துக்கள் தான். இந்தியாவில் அதிகமாக டூவிலர் விபத்துக்களில் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் ஹெல்மெட் என்பது மிக அவசியமான ஒன்று.

பொதுமக்கள் பலர் ரோட்டில் ஹெல்மெட் போடாமல் செல்வதற்கு மிக முக்கிய காரணம் விழிப்புணர்வு இன்மையே ஆகையால் ஹெல்மெட் போடாதவர்களை தண்டிக்க போலீசார் காட்டும் ஆர்வத்தை ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் காட்ட வேண்டும். அப்பொழுது தான். முழுமையாக இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

அதே போல் சிலர் தரம் இல்லாத ஹெல்மெட்களை கடமைக்கு என அணிந்து வருகின்றனர். ஐஎஸ்ஐ தரம் வாய்ந்த ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணத்தையும் மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications