கனவுல கூட இனி இந்த விஷயத்தை பண்ணீராதீங்க! நரசிம்ம அவதாரம் எடுத்த போலீஸ்! வளச்சு வளச்சு பிடிக்கறாங்க!
போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) மீறும் அதிக மக்களை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. உண்மையில் இங்கு பெரும்பாலான மக்கள் போக்குவரத்து விதிமுறைகளை சட்டை செய்வதே கிடையாது. மனம் போன போக்கில் மிகவும் அலட்சியமாக வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதன் காரணமாக நிறைய சாலை விபத்துக்கள் அரங்கேறுகின்றன.
அத்துடன் விதிமுறைகளை மீறுவதால், மற்ற வாகனங்களின் போக்குவரத்தில் பாதிப்பும் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு தவறான இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், போக்குவரத்து மந்தமாகி, நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் (Bangalore), இத்தகைய சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று கொண்டுள்ளன.

எனவே விதிமுறைகளை மீறுபவர்கள் மீது, பெங்களூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், மிகவும் கடுமையான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பெங்களூர் நகரில் இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், நீங்கள் மிகப்பெரிய பிரச்னைகளில் சிக்கி கொள்ள கூடிய சூழல் உருவாகியுள்ளது.
ஆம், பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மிகவும் கடுமையான ஐபிசி (IPC - Indian Penal Code) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெங்களூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் 3 முக்கியமான விதிமுறை மீறல்களைதான் குறி வைத்துள்ளனர்.

போக்குவரத்தின் ஓட்டத்திற்கு எதிராக வாகனங்களை இயக்குதல், பாதசாரிகள் நடப்பதற்கு என அமைக்கப்பட்ட நடைபாதையில் வாகனங்களை ஓட்டுதல் மற்றும் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லுதல் ஆகியவையே ஆகும். இந்த விதிமுறைகள் மீறல்கள், சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
எனவே இந்த தவறை செய்பவர்கள் மீது ஐபிசி செக்ஸன் 283-ன் கீழ் பெங்களூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால், காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நீதிமன்றத்தால் மட்டுமே விடுவிக்க முடியும்.
வெறுமனே அபராதம் (Fine) மட்டும் விதிப்பதை காட்டிலும், வாகன உரிமையாளர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவது, விதிமுறை மீறல்களை குறைக்கும் என பெங்களூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர். எனவேதான் இந்த பிரிவின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை பெங்களூர் நகரில் 4,200 பேர் மீது இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பெங்களூர் நகரில் வசிக்கும் வாகன ஓட்டிகள், இனி எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்மை பயக்கும். இல்லாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது என்பது மிகவும் ஆபத்தான ஒரு செயல். ஒரு சில வெளிநாடுகளில் நடவடிக்கைகள் கடுமையாக இருப்பதால்தான், யாரும் பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதில்லை. இந்தியாவிலும் அதுபோன்ற நடவடிக்கைகள் நிச்சயம் தேவை. எனவே பெங்களூர் போக்குவரத்து காவல் துறையின் நடவடிக்கை பாராட்டுக்குரிய ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








