243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

உலகில் டிராபிக் ஜாம் அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகி, இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

உலகில் ஏறக்குறைய அனைத்து முன்னணி நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வாகனங்களின் அடர்த்தி அதிகரிப்பிற்கு ஏற்ப, சாலைகளை விரிவாக்கம் செய்யாமல் இருப்பதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. குறிப்பாக இந்திய நகரங்கள்தான் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

டாம்டாம் (TomTom) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. டாம்டாம் நிறுவனம் உலகின் 6 கண்டங்களில் உள்ள 57 நாடுகளின் 416 நகரங்களில், போக்குவரத்து நெரிசல் பிரச்னைகள் குறித்த ஆய்வை நடத்தியது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில், இந்தியாவிற்கு பெரிய அதிர்ச்சி கிடைத்துள்ளது.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

ஆம், உலகிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரம் என்ற மிக மோசமான பெயரை பெங்களூர் பெற்றுள்ளது. இதுதவிர டாப்-10 பட்டியலில், மேலும் 3 இந்திய நகரங்களும் இருக்கின்றன. அதாவது டாப்-10 பட்டியலில், மொத்தம் 4 இந்திய நகரங்கள் உள்ளன. இதன் மூலம் டாப்-10 பட்டியலில் அதிக நகரங்களை கொண்ட நாடாக இந்தியா வந்துள்ளது.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

வேறு எந்த நாடுகளும் இவ்வளவு அதிகமான நகரங்களை டாப்-10 பட்டியலில் கொண்டிருக்கவில்லை. இதன் மூலம் உலகிலேயே போக்குவரத்து நெரிசலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியா தவிர பிலிப்பைன்ஸ், கொலம்பியா, ரஷ்யா, பெரு, துருக்கி மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் தலா 1 நகரங்கள் டாப்-10 பட்டியலில் உள்ளன.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

பெங்களூர், டெல்லி, மும்பை மற்றும் புனே ஆகிய 4 இந்திய நகரங்கள் டாப்-10 பட்டியலில் உள்ளன. டாப்-10 பட்டியலில் கர்நாடக மாநிலம் பெங்களூர் முதல் இடத்தில் இருக்கிறது. 71 சதவீத நெரிசல் அளவுடன் பெங்களூர் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிலிப்பைன்ஸின் மணிலா நகரம் இருக்கிறது. இதன் நெரிசல் அளவும் 71 சதவீதம்தான்.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

கொலம்பியாவின் போகோட்டா 68 சதவீத நெரிசல் அளவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயத்தில் மஹாராஷ்டிர மாநிலம் மும்பை நகரம் 65 சதவீத நெரிசல் அளவுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது. 5வது இடத்தை அதே மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த புனே நகரம் பிடித்துள்ளது. புனே நகரின் நெரிசல் அளவானது 59 சதவீதமாக இருக்கிறது.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

அதே சமயம் 6வது இடத்தை ரஷ்யாவின் மாஸ்கோ பிடித்துள்ளது. அதன் நெரிசல் அளவும் 59 சதவீதம்தான். 7வது இடத்தை பெருவின் லிமா பிடித்துள்ளது. லிமா நகரின் நெரிசல் அளவு 57 சதவீதமாக உள்ளது. 8வது இடத்தை இந்திய தலைநகர் புது டெல்லி பிடித்துள்ளது. புது டெல்லியின் நெரிசல் அளவு 56 சதவீதம். 9வது இடத்தில் துருக்கியின் இஸ்தான்புல் உள்ளது.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

இஸ்தான்புல் நகரின் நெரிசல் அளவு 55 சதவீதமாக இருக்கிறது. உலகில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த டாப்-10 நகரங்களின் பட்டியலில், 10வது மற்றும் கடைசி இடத்தில் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரம் இருக்கிறது. ஜகர்த்தா நகரின் நெரிசல் அளவு 53 சதவீதமாக உள்ளது. ஆக மொத்தத்தில் இந்தியாதான் போக்குவரத்து நெரிசலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

இந்தியாவின் ஐடி தலைநகரமான பெங்களூரில்தான், உலகிலேயே போக்குவரத்து நெரிசல் பிரச்னை மிகவும் அதிகமாக உள்ளது. பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை மிகவும் அதிகமாக இருந்த மோசமான நாள் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 20தான் (செவ்வாய்). அன்றைய தினம் பெங்களூரில் நெரிசல் 103 சதவீதமாக இருந்துள்ளது.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

அதே சமயம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி (சனி) சிறப்பான நாளாக பதிவாகியுள்ளது. அன்றைய தினத்தின் நெரிசல் அளவு 30 சதவீதம் மட்டுமே. அதே சமயம் பெங்களூர் நகரில், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு மேல் பயணம் செய்தால், உங்களால் ஒரு ஆண்டுக்கு 5 மணி நேரம் வரை சேமிக்க முடியும். அதேசமயம் பெங்களூரில் போக்குவரத்து நெரிசலால் ஒருவர் 243 மணி நேரத்தை இழக்கிறார்.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

இது சராசரி அளவாகும். அத்துடன் இது 10 நாட்கள், 3 மணி நேரம் என்பது வேதனையான விஷயம்தான். அதே சமயம் மும்பையை பொறுத்தவரை, 2019ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி மோசமான நாளாக பதிவாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக மும்பைவாசிகள் சராசரியாக 209 மணி நேரத்தை இழக்கின்றனர். புனே நகரை பொறுத்தவரை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதிதான் மோசமான நாளாக இருந்துள்ளது.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

புனேவாசிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக 193 மணி நேரத்தை இழக்கின்றனர். தலைநகர் டெல்லியை பொறுத்தவரை 2019ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி மோசமான நாளாக பதிவாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக டெல்லிவாசிகள் 190 மணி நேரத்தை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி, இங்கே சதவீதம் என்பது எதை குறிக்கிறது? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

243 மணி நேரம் வேஸ்ட் ஆகுது!! உலகிலேயே டிராபிக் ஜாம் அதிகமாக இருப்பது நம்ம ஊரில்தான்... எது தெரியுமா?

இதற்கு பாங்காங் நகரை உதாரணமாக எடுத்து கொள்ளலாம். பாங்காங் நகரின் நெரிசல் அளவு 53 சதவீதம். அப்படியானால் பாங்காங் நகரின் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாதாரண சமயத்துடன் ஒப்பிடுகையில், நீங்கள் மேற்கொள்ளும் பயணம் 53 சதவீதம் அதிக நேரத்தை எடுத்து கொள்ளும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore Has Worst Traffic In The World. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X